முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கடாய் வெஜிடபிள்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

கடாய் வெஜிடபிள் செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2.
  2. பொடியாக நறுக்கிய தக்காளி -1.
  3. ரிபைன்ட்  ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்.
  4. பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -3.
  5. வேகவைத்த பச்சை பட்டாணி,கேரட்,காலிபிளார்,பீன்ஸ் - 100 கிராம்.
  6. நறுக்கிய வெங்காயம்,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய் - 100 கிராம்.
  7. மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்.
  8. பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்.
  9. பொடியாக நறுக்கிய பூண்டு 1 டேபிள் ஸ்பூன்.
  10. மல்லி தூள் –  1 டேபிள் ஸ்பூன்.
  11. மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
  12. சீரக தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
  13. காஞ்ச மிளகாய்- 3.
  14. காஞ்ச மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்தது - 1 ஸ்பூன்.
  15. பிரஷ் கிரீம் -1 டேபிள் ஸ்பூன்.
  16. நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
  17. உப்பு  - தேவையான அளவு.
Method: 

 

செய்முறை ;

  1. அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் ரிபைன்ட் ஆயில்  ற்றவும்.
  2. எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு டேபிள் ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 3 ,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  3. மஞ்சள் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,மல்லி தூள் ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
  4. பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
  5. பெரிதாக நறுக்கிய வெங்காயம்,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் 100 கிராம் போட்டு வதக்கவும்.
  6. வேகவைத்த பச்சை பட்டாணி,கேரட்,காலிபிளார்,பீன்ஸ் 100 கிராம் போட்டு வதக்கவும்.
  7. பிரஷ் கிரீம் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
  8. காஞ்ச மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்த தூள் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
  9. சிறிதளவு கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
  10. சுவையான கடாய் வெஜிடபிள் ரெடி. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago