எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
கடாய் வெஜிடபிள்
Cooking time in minutes:
20
Ingredients:
கடாய் வெஜிடபிள் செய்யத் தேவையான பொருள்கள்;
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 2.
- பொடியாக நறுக்கிய தக்காளி -1.
- ரிபைன்ட் ஆயில் - 2 டேபிள் ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் -3.
- வேகவைத்த பச்சை பட்டாணி,கேரட்,காலிபிளார்,பீன்ஸ் - 100 கிராம்.
- நறுக்கிய வெங்காயம்,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய் - 100 கிராம்.
- மஞ்சள் தூள் – 1 டேபிள் ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – 1 டேபிள் ஸ்பூன்.
- பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்.
- மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்.
- சீரக தூள் - 1 டேபிள் ஸ்பூன்.
- காஞ்ச மிளகாய்- 3.
- காஞ்ச மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்தது - 1 ஸ்பூன்.
- பிரஷ் கிரீம் -1 டேபிள் ஸ்பூன்.
- நெய் - 1 டேபிள் ஸ்பூன்.
- உப்பு - தேவையான அளவு.
Method:
செய்முறை ;
- அடுப்பில் கடாய் வைத்து 2 டேபிள் ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு டேபிள் ஸ்பூன்,பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் 3 ,பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் 2, மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- மஞ்சள் தூள் ஒரு டேபிள் ஸ்பூன்,மிளகாய் தூள் 1/2 டேபிள் ஸ்பூன்,மல்லி தூள் ஒரு டேபிள் ஸ்பூன் ஆகியவற்றை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய ஒரு தக்காளியை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 3 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- பெரிதாக நறுக்கிய வெங்காயம்,பச்சை,மஞ்சள்,சிகப்பு குடை மிளகாய்கள் 100 கிராம் போட்டு வதக்கவும்.
- வேகவைத்த பச்சை பட்டாணி,கேரட்,காலிபிளார்,பீன்ஸ் 100 கிராம் போட்டு வதக்கவும்.
- பிரஷ் கிரீம் ஒரு டேபிள் ஸ்பூன் மற்றும் நெய் ஒரு டேபிள் ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
- காஞ்ச மிளகாய்,சீரகம் சேர்த்து அரைத்த தூள் ஒரு ஸ்பூன் போட்டு கலந்து விடவும்.
- சிறிதளவு கொத்தமல்லியை தூவி இறக்கி விடவும்.
- சுவையான கடாய் வெஜிடபிள் ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


