Idhayam Matrimony
முகப்பு

காரைக்குடி கந்தரப்பம்

Cooking time in minutes: 
20
Ingredients: 

 

காரைக்குடி கந்தரப்பம் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. வெல்லம் - 1 கப்.
  2. உளுந்து - 50 கிராம்.
  3. தேங்காய் - 1/2 மூடி.
  4. அரிசி - 1 கப்.
  5. ஏலக்காய் - 5.
  6. ரீபைன்ட் ஆயில் - 1/2 லிட்டர்.

 

Method: 

 

செய்முறை ;

  1. மிக்சி ஜாரில் ஊற வைத்த 1 கப் அரிசி மற்றும் 50 கிராம் உளுந்தை  போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக  அரைக்கவும்.
  2. இதில் 5 ஏலக்காய்யை போட்டு அரைக்கவும்.
  3. இதனுடன் 1 கப் வெல்லத்தை போட்டு நன்றாக  அரைத்து வைத்துக் கொள்ளவும். 
  4. 1/2 மூடி தேங்காய்யை எடுத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
  5. ஒரு பாத்திரத்தில் முதலில் அரைத்த அரிசி,உளுந்து வெல்லம் கலந்த மாவை ஊற்றி பின்னர் மிக்சியில் அரைத்து வைத்த 1/2 மூடி தேங்காய் விழுதை போட்டு நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்.
  6. அடுப்பில் கடாய் வைத்து ரிபைன்ட் ஆயில் 500 மில்லி ஊற்றவும்.
  7. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து வைத்துள்ள மாவை ஒரு கரண்டியில்  எடுத்து எண்ணையில் ஊற்றி வேக விடவும்.
  8. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வறுக்கவும். நன்றாக பொரிந்து விட்டது எடுத்து விடலாம்.
  9. சுவையான காரைக்குடி கந்தரப்பம் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago