முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கீரை ஆம்லெட்

Cooking time in minutes: 
20
Ingredients: 

கீரை ஆம்லெட்செய்யத்தேவையான பொருள்கள்;

  1. பொடியாக நறுக்கிய அரைக்கீரை - 1 கட்டு.
  2. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 3 .
  3. பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, மல்லி - சிறிதளவு.
  4. மஞ்சள்தூள் -  1/2 டீஸ்பூன்.
  5. சீரக தூள் - 1/2 டீஸ்பூன்.
  6. மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன்.
  7. உப்பு - தேவையான அளவு.
  8. பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 3.
  9. கடலை மாவு - முக்கால் கப்.
  10. கோதுமை மாவு -  1/2 கப்.
  11. தயிர் -  2 ஸ்பூன்.
  12. எண்ணெய் -  1 ஸ்பூன்.
Method: 

செய்முறை ;

 

  1. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய ஒரு கட்டு அரைக்கீரையை போடவும்.
  2. இதனுடன் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயம்,பொடியாக நறுக்கிய சிறிதளவு கறிவேப்பிலை, மல்லி,1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 டீஸ்பூன் சீரக தூள்,1/2 டீஸ்பூன் மிளகாய்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு கலந்து விடவும்.
  3. இதனுடன் பொடியா நறுக்கிய 3 பச்சை மிளகாய்,முக்கால் கப் கடலை மாவு,1/2 கப் கோதுமை மாவு,2 ஸ்பூன் தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் நன்றாக கலந்து தயார் செய்து  வைத்துக்கொள்ளவும்.
  4. அடுப்பில் கடாய் வைத்து  ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றவும்.
  5. எண்ணெய் சூடானவுடன் தயார் செய்து  வைத்துள்ள அரைக்கீரை கலந்த மாவை ஊற்றி வேக விடவும்.
  6. திருப்பி திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுக்கவும். 
  7. சுவையான கீரை ஆம்லெட் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்