எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
முகப்பு
சிம்பிள் சிக்கன் கறி
Cooking time in minutes:
20
Ingredients:
சிம்பிள் சிக்கன் கறி செய்யத் தேவையான பொருள்கள்;
- சிக்கன் - 1/2 கிலோ.
- மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்.
- எண்ணெய் - தேவையான அளவு.
- உப்பு - தேவையான அளவு.
- தயிர் - 1/2 கப்.
- பட்டை - 2.
- அன்னாசி பூ - 1.
- கிராம்பு - 3.
- ஏலக்காய் - 4.
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 2.
- பொடியாக நறுக்கிய இஞ்சி - 2 துண்டு.
- பூண்டு - 6.
- சீரகம் - ஒரு ஸ்பூன்.
- தக்காளி - 4.
- மிளகாய்த்தூள் - 2 ஸ்பூன்.
- மல்லித்தூள் - 2 ஸ்பூன்.
- கரம்மசாலா தூள் - ஒரு ஸ்பூன்.
- மாங்காய் பவுடர் - ஒரு டீஸ்பூன்.
- கஸ்தூரி மேத்தி - ஒரு ஸ்பூன்.
Method:
செய்முறை ;
- ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 1/2 கிலோ சிக்கன்,1/2 ஸ்பூன் மஞ்சள்தூள், 1/2 கப் தயிர் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விட்டு சிக்கனை 15 நிமிடம் ஊற வைக்கவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 2 பட்டை, ஒரு அன்னாசிப்பூ,3 கிராம்பு, 4 ஏலக்காய் மற்றும் பொடியாக நறுக்கிய 2 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
- இதனுடன் பொடியாக நறுக்கிய 2 துண்டு இஞ்சி, 6 பல் பூண்டு,ஒரு ஸ்பூன் சீரகத்தை போட்டு நன்றாக வதக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும்.
- கடாயில் வதக்கியவற்றை மிக்சி ஜாரில்போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- மிக்சி ஜாரில் 4 தக்காளியை போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய்யை ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் மிக்சியில் அரைத்த மசாலா விழுதையும், தக்காளி விழுதையும் ஊற்றி நன்றாக வதக்கவும்.
- இதனுடன் 2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் மல்லித்தூள் போட்டு கிளறிவிடவும்.
- இதனுடன் ஒரு ஸ்பூன் கரம்மசாலா தூள் மற்றும் ஊற வைத்த 1/2 கிலோ சிக்கனை போட்டு கலந்து விட்டு கடாயை 5 நிமிடம் மூடி போட்டு மூடி சிக்கனை வேக விடவும்.
- 5 நிமிடம் கழித்து கடாய் மூடியை திறந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து விட்டு 15 நிமிடம் கடாயை மூடி போட்டு மூடி சிக்கனை வேக விடவும்.
- 15 நிமிடம் கழித்து கடாய் மூடியை திறந்து கிளறி விட்டு ஒரு டீஸ்பூன் மாங்காய் பவுடர், ஒரு ஸ்பூன் கஸ்தூரி மேத்தி போட்டு கலந்து விடவும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான சிம்பிள் சிக்கன் கறி ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


