முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

செட்டிநாடு இறால் மிளகு வறுவல்,

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

செட்டிநாடு இறால் மிளகு வறுவல்செய்யத் தேவையான பொருள்கள்; 

  1. இறால் - 250 கிராம்.
  2. சின்ன வெங்காயம் - 10.
  3. தக்காளி - 2.
  4. இஞ்சி  - சிறிதளவு.
  5. பூண்டு  - 4.
  6. பச்சைமிளகாய் - 2.
  7. கறிவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
  8. மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்.
  9. மிளகாய் தூள் - ஸ்பூன்.
  10. மல்லி தூள் - 2 ஸ்பூன்.
  11. கரம் மசாலா தூள் - 1 ஸ்பூன்.
  12. செட்டி நாடு மசாலா  - 1 ஸ்பூன்.
  13. எலுமிச்சம் பழம்  - 1.
  14. பெருஞ்சீரகம் - 1/2 ஸ்பூன்.
  15. உப்பு  - 1 ஸ்பூன்.
  16. தேங்காய் எண்ணெய் - 2 ஸ்பூன்.  

 

Method: 

 

செய்முறை ;

  1. பூண்டு 4 பல் மற்றும் சிறிதளவு இஞ்சி இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  2. ஒரு தக்காளியை மிக்சியில் போட்டு நன்றாக  அரைத்துக்கொள்ளவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த 250 கிராம் இறால் கறியை போடவும்.
  4. இதனுடன் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,மஞ்சள் தூள் சிறிதளவு,செட்டி நாடு மசாலா 1/2 ஸ்பூன்,கரம் மசாலா 1/2 ஸ்பூன்,எலுமிச்சம்பழ சாறு சிறிதளவு,ஒரு ஸ்பூன் உப்பு போட்டு நன்கு கலந்து விட்டு 5 நிமிடம் ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து தேங்காய் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் பெருஞ்சீரகம் 1/2 ஸ்பூன்,சிறிதளவு கறிவேப்பிலை போட்டு வதக்கவும்.
  7. இதனுடன் பொடியாக நறுக்கிய 10 சின்ன வெங்காயம்,பொடியாக நறுக்கிய ஒரு தக்காளி,ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது,மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும்.
  8. இதனுடன் மிளகாய் தூள் 1/2 ஸ்பூன்,மல்லி தூள் ஒரு ஸ்பூன்,செட்டி நாடு மசாலா 1/2 ஸ்பூன்,கரம் மசாலா 1/2 ஸ்பூன், அரைத்து வைத்துள்ள ஒரு தக்காளியை போட்டு வதக்கவும்.
  9. ஊற வைத்துள்ள இறால் கறியை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் வேக விடவும்.
  10. சிறிதளவு மல்லி தூவி இறக்கவும்.
  11. சுவையான செட்டிநாடு இறால் மிளகு வறுவல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்