முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தக்காளி பன்னீர் கிரேவி

Cooking time in minutes: 
20
Ingredients: 

தக்காளி பன்னீர் கிரேவி செய்யத் தேவையான பொருள்கள்;

  1. பன்னிர் - 100கிராம். 
  2. தக்காளி - 5.
  3. கான்பிளவர் மாவு - ஓரு ஸ்பூன்.
  4. எண்ணெய் – சிறிதளவு.
  5. தயிர் -  2 ஸ்பூன்.
  6. கிராம்பு - 3.
  7. பொடியா நறுக்கிய பெரிய வெங்காயம் -  3.
  8. துளசி இலை - 4.
  9. மிளகாய் தூள் -  2 டீஸ்பூன்.
  10. உப்பு -   தேவையான அளவு.
  11. பட்டர் -  2 டீஸ்பூன்.
  12. கஸ்தூரி மேத்தி -  சிறிதளவு.
Method: 

செய்முறை ;

  1. அடுப்புல் கடாய் வைத்து இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 தக்காளியை போட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் வேக வைக்கவும்.
  2. தக்காளியை சிறிது நேரம் ஆற வைத்து தக்காளியின் தோலை உரித்து பொடியாக நறுக்கி ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்து வைத்துக்கொள்ளவும்.
  3. ஓரு பாத்திரத்தில் ஓரு ஸ்பூன் கான்பிளவர் மாவு, 2 ஸ்பூன் தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கலந்து விடவும்.
  4. இதில்  சிறு சிறு துண்டாக நறுக்கிய 100 கிராம் பன்னீரை போட்டு கலந்து விட்டு சிறிது நேரம் ஊற வைக்கவும்.
  5. அடுப்பில் கடாய் வைத்து  சிறிதளவு ரீபைன்ட் ஆயில் ஊற்றவும்.
  6. எண்ணெய் சூடானவுடன் 3 கிராம்பு , மற்றும் பொடியாக நறுக்கிய 3 பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
  7. இதனுடன் 4 துளசி இலை,2 டீஸ்பூன் மிளகாய் தூள்,தேவையான அளவு உப்பு மற்றும் மிக்சியில்  அரைத்த தக்காளி சாரை ஊற்றி ஓரு டீஸ்பூன் பட்டரை  போட்டு கலந்துவிட்டு மூடி போட்டு மூடி 5 நிமிடம் கிரேவியை வேக வைக்கவும்.
  8. 5 நிமிடம் கழித்து மூடியை திறந்து தயிர் மற்றும் கான்பிளவர் மாவில்  ஊற வைத்த பன்னீர் துண்டுகளை போட்டு கலந்து விடவும்.
  9. இதனுடன் சிறிதளவு கஸ்தூரி மேத்தி மற்றும் ஓரு டீஸ்பூன் பட்டர் போட்டு கலந்து விடவும்.
  10. இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
  11. சுவையான தக்காளி பன்னீர் கிரேவி ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்