முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

முருங்கைக்கீரை பொங்கல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

முருங்கைக்கீரை பொங்கல் செய்யத் தேவையான பொருள்கள்;

  1. முருங்கைக்கீரை - 1 கப்.
  2. எண்ணெய் – 6 ஸ்பூன். 
  3. மிளகு - 1 ஸ்பூன்.
  4. சீரகம்  - 1 ஸ்பூன்.
  5. பூண்டு - 4 பல்.
  6. பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1.
  7. பச்சை மிளகாய் - 2.
  8. பெருங்காயதூள் -1 சிட்டிகை.
  9. முந்திரி பருப்பு  5.
  10. அரிசி - 1 கப்.
  11. பாசிப்பருப்பு - 100 கிராம்.
  12. உப்பு - தேவையான அளவு.
  13. மஞ்சள்தூள் - 1 சிட்டிகை.
  14. பால் - 1 கப்.
  15. நெய் - 1 டீஸ்பூன். 
Method: 

செய்முறை ;

  1. அடுப்பில் குக்கரை வைத்து 6 டீஸ்பூன் எண்ணெய்யை ஊற்றவும், 
  2. எண்ணெய் சூடானவுடன்  ஒரு ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகம், பொடியாக நறுக்கிய 4 பல் பூண்டு,பொடியாக நறுக்கிய ஒரு பெரியவெங்காயம் மற்றும் நறுக்கிய 2 பச்சை மிளகாய்யை போட்டு நன்றாக வதக்கவும்
  3. இதனுடன் ஒரு சிட்டிகை பெருங்காயதூள் மற்றும் 5 முந்திரி பருப்பை போட்டு வதக்கவும்.
  4. இதில்  கழுவி சுத்தம் செய்த ஒரு கப் முருங்கைக்கீரை,ஒரு கப் அரிசி, 100 கிராம் பாசிப்பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு போட்டு நன்றாக கிளறி விடவும்.
  5. இதனுடன் 4 கப் தண்ணீர் மற்றும் ஒரு கப் பால் ஊற்றி கலந்து விட்டு, குக்கரை மூடி 3 விசில் வரும் வரை நன்றாக வேக விட்டு இறக்கவும்.
  6. முடியை திறந்து ஒரு டீஸ்பூன் நெய் ஊற்றி கலந்து விடவும்.
  7. சுவையான முருங்கைக்கீரை பொங்கல் ரெடி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்