முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

வான்கோழி மிளகு வறுவல்

Cooking time in minutes: 
30
Ingredients: 

 

வான்கோழி  மிளகு வறுவல் செய்யத் தேவையான பொருள்கள்;

 1. வான் கோழி - 1 கிலோ.
 2. சோம்பு - 5 கிராம்.
 3. கறிவேப்பிலை - 2 கிராம்.
 4. இஞ்சி பூண்டு விழுது - 20 கிராம்.
 5. பெரிய வெங்காயம் - 200 கிராம்.
 6. தக்காளி - 100 கிராம்.
 7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை.
 8. மிளகாய் தூள் - 10 கிராம்.
 9. மல்லி  தூள் - 5 கிராம்.
 10. பட்டை - 2 கிராம்.
 11. கிராம்பு - 2 கிராம்.
 12. சீரக தூள் - 10 கிராம்.
 13. மிளகு தூள் - 25 கிராம்.
 14. நல்லெண்னை - 150 கிராம்.
 15. உப்பு - 10. கிராம்.
Method: 

 

செய்முறை ;

 1. அடுப்பில் குக்கரை வைத்து 150 கிராம் நல்லெண்னை உற்றவும்.
 2. எண்ணெய் சூடானவுடன் சோம்பு 5 கிராம்,கிராம்பு 2 கிராம்,பட்டை 2 கிராம், கறிவேப்பிலை சிறிதளவு போட்டு வதக்கவும்.
 3. நறுக்கி வைத்த  பெரிய வெங்காயம் 200 கிராம் போட்டு பொன்னிறமாக வதக்கவும்.
 4. இதனுடன் இஞ்சி பூண்டு விழுது 20 கிராம் போட்டு வதக்கவும்.
 5. மிளகாய் தூள் 10 கிராம்,நறுக்கி வைத்த  தக்காளி 100 கிராம், உப்பு 10 கிராம், மல்லி தூள் 5 கிராம் போட்டு வதக்கவும்.
 6. இதனுடன் சுத்தம் செய்த வான் கோழி கறியை சேர்த்து கிளறி விடவும்.
 7. 1/2 லிட்டர் தண்ணீர் உற்றி கலந்து விடவும்.
 8. குக்கரை முடி 3 விசில் வரும் வரை வேக விடவும்.
 9. 3 விசில் வந்தவுடன் குக்கரை திறந்து கலந்து விடவும்.
 10. இதனுடன் மிளகு தூள் 25 கிராம்,சீரக தூள்,10 கிராம் சேர்த்து வதக்கவும்.
 11. சிறிதளவு மல்லியை பொடியாக நறுக்கி போட்டு இறக்கவும்.
 12. சுவையான வான்கோழி  மிளகு வறுவல் ரெடி.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்