முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மலச்சிக்கலை நீக்க உதவும் 14 இயற்கை உணவுகள்

  • மலச்சிக்கல், வருவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதில்  உடற்பயிற்சியின்மை, அதிகப்படியான உடல் வெப்பம், மற்றும் நீண்ட நேரம் உட்கார்ந்திருத்தல் அல்லது நின்று கொண்டிருத்தல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
  • தவறான உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை பழக்கத்தால்  மலச்சிக்கல் வருகிறது.
  • தினமும் கீரைகள், பச்சை காய்கறிகள்,பழங்கள் மற்றும் போதிய அளவில் தண்ணீர் போன்றவற்றை தவிர்க்காமல் எடுத்துகொள்ளுங்கள். 
  • மாத்திரை இல்லாமல் இயற்கை முறையில் மலச்சிக்கல்,பிரச்சனைக்கு தீர்வு காண்பது பாதுகாப்பானது. 
  • மலச்சிக்கல் தீவிரமாகாமல் இருக்க  நாம்  சாப்பிடவேண்டிய 14 இயற்கை உணவுகள் எவை என பார்க்கலாம்.

1. திரிபலா சூரணம் அதிக மருத்துவ குணம் கொண்டது கடுக்காய், நெல்லிக்காய் மற்றும் இந்து உப்பு ஆகிய மூன்றை சேர்த்து உருவாக்கப்படுவதால் திரிபலா சூரணம் என அழைக்கப்படுகிறது, இரவு படுக்கும் முன் 5 முதல் 7 கிராம் வரை திரிபலா சூரணத்தை ஒரு டம்ளர் சுடுநீரில் போட்டு கலந்து பருகிவந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

2. 2.கருணை கிழங்கு மலத்தை எளிதாக வெளியற்ற உதவுகிறது, இரவு புளி கரைசலில் கருணை கிழங்கை ஊறவைத்து காலை விளக்கெண்ணெய் ஊற்றி,சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வேக வைத்து மசித்து சாதத்தில் போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.

3.அனைத்து வகையான  கீரைகளும் மலமிளக்கியாக உதவுகிறது,குறிப்பாக அரைக்கீரையை வாரம் இருமுறை வேக வைத்து சாதத்துடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும்.அடுத்ததாக பசலை கீரையையும் வேக வைத்து சாதத்துடன் கலந்து உடன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து  சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்கும். 

4.அனைவருக்கும் வாழைப்பழம் நல்ல மலமிளக்கி என்பது தெரியும்,எனினும் மலைவாழைப்பழம் மலத்தை கட்டும் எனவே,நாட்டு வாழைப்பழத்தை பயன்படுத்தி மலச்சிக்கலை நீக்க வேண்டும்.

5.வாழைப்பழத்தை விட கொய்யாபழம் மலச்சிக்கலில் இருந்து விடுபட நல்ல மருந்தாக உள்ளது,லேசாக பழுத்து பாதி காய,பாதி பழமாக உள்ள கொய்யாவை நன்கு கடித்து மென்று கூல் செய்து உமிழ்நீருடன் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும் மற்றும் வயிற்றில்  புழுக்களும் மலத்துடன் வெளியேறும்.

6.வெண்டைக்காயில் உள்ள வலுவலுப்பு தன்மை மலத்தை வெளியேற்ற நன்கு உதவுகிறது,இதை பச்சையாகவும் சாப்பிடலாம்,மூலநோய் உள்ளவர்கள் கருணை கிழங்குடன் வெண்டைக்காயை சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மலச்சிலக்கல் நீங்கி, மூலநோயையும் குணப்படுத்தும்.

7. உலர்திராட்சையை தினமும் இரவு 10 பழத்தை சாப்பிட்டு விட்டு பால் அல்லது சூடு நீரை சாப்பிட்டு வர மலச்சிக்கல் முழுமையாக நீங்கும்.அதிகமாக மலம் கட்டும் குழந்தைகளுக்கு 5 உலர்திராட்சையை தினமும் இரவு நீரில் ஊற வைத்து காலை அதை மசித்து சாப்பிட வைத்தால் மலக்கட்டு நீங்கும்,திராட்சை பழத்தை கொட்டையையும் நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் நீங்குவதுடன் வெள்ளையணுக்களை சமநிலை படுத்தி புற்றுநோய் வராமல் தடுக்கவும் திராட்சை உதவுகிறது.

8.சப்போட்டா பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் சப்போட்டாபழம் சாப்பிடும் போது வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.

9. விளக்கெண்ணெய்யை 6 வயதில் இருந்து 60 வயது வரை அனைவரும் பயன்படுத்தலாம்,ஒரு டம்ளர் சூடு நீரில் 1/2 ஸ்பூன் விளக்கெண்ணெய்யை ஊற்றி கலந்து குடித்து வந்தால் நீண்ட நேர பயணத்தின் போது  உடல் வெப்பம் காரணமாக ஏற்படும் மலசிக்கல் நீங்கும்.

10. அத்திப்பழம் வெள்ளையணுக்களை அதிகப்படுத்த உதவுகிறது அதிக இரும்பு சத்து உள்ள அத்திப்பழம்,பேரிச்சம் பழம் மற்றும் சப்போட்டா பழங்களை சாப்பிடும் போது உடன் வாழைப்பழம் அல்லது கொய்யாபழத்தையும் சேர்த்து சாப்பிட்டால் மலம் நன்கு வெளியேறும்.

11.ஆளி விதை பொடியை சாப்பிட்டால் உடல் எடை குறையும் மற்றும் பெண்களுக்கு முடிஉதிர்தல் சரியாகவும் உதவுகிறது,இரவு ஒரு ஸ்பூன் ஆளி விதை பொடியை நீரில் ஊற வைத்து காலை சாப்பிட்டு வந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மற்றும் மலசிக்கல் நீங்கும்.

12. எலுமிச்சம்பழ சாறு நமது உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்தை அதிகரிக்க உதவுகிறது.வாரம் ஒருமுறை ஒரு டம்ளர் நீரில் எலுமிச்சம்பழ சாறு மற்றும் விளக்கெண்ணெய்யை  ஊற்றி கலந்து குடித்து வந்தால் மலசிக்கல் முற்றிலும் நீங்கும்.

13. ஆரஞ்சு பழம் உச்சந்தலையில் இருந்து உள்ளங்கால் வரை உள்ள நரம்புகளை பலப்படுத்த உதவுகிறது.ஆரஞ்சு பழம் நல்ல மலமிளக்கியாக உள்ளது மேலும் புதுமண தம்பதிகள் ஆரஞ்சு பழச்சாற்றை சாப்பிட்டால் இல்லறம் இன்பமாகும்.

14.ஆப்பிள் பேரிக்காய் ஏலக்காய் போன்றவையும் மலச்சிக்கல் நீங்க உதவுகிறது.

 

இந்த 14 இயற்கை உணவுகள் பொருட்களில் தினமும் ஒன்றை பயன் படுத்தி மலச்சிக்கலை நீக்கி வாழ்வில் நலம் பெறுவோம்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 2 weeks ago