முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

மூட்டுவலி தைலம் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?|

மூட்டுவலி தைலம் செய்யத் தேவையான பொருள்கள்;

 1. நல்லெண்ணெய் - 200 மில்லி.
 2. தும்பை எண்ணெய் -  200 மில்லி.
 3. இலுப்பை  எண்ணெய் -  200 மில்லி.
 4. தேங்காய் எண்ணெய் -  200 மில்லி.
 5. கடுகு எண்ணெய் -  200 மில்லி.
 6. எட்டி விதை - 20.
 7. கருங்கொடி வேர் -25 கிராம்.
 8. கருஊமத்தை விதை - 25 கிராம்.
 9. ஜெயம் கொட்டை - 3.
 10. பச்சை கற்பூரம் - 10 கிராம்.

மூட்டுவலி தைலம் செய்முறை ;

 1. கரு ஊமத்தம்காய் மற்றும் ஜெயம் கொட்டையை உடைத்து உள்ளே உள்ள விதையை தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
 2. அடுப்பில் கடாய் வைக்கவும்.
 3. கடாய் சூடானவுடன் கடுகு எண்ணெய்  200 மில்லி, தும்பை எண்ணெய் 200 மில்லி, நல்லெண்ணெய்  200 மில்லி, தேங்காய் எண்ணெய்  200 மில்லி, ஊற்றி குறைவான தணலில் கலந்து விடவும்.
 4. இதனுடன் எட்டி விதை 20 போட்டு கலந்து விடவும்.
 5. 25 கிராம் கருங்கொடி வேரை உடைத்து  தூளாக்கி போட்டு கலந்து விடவும்.
 6. கரு ஊமத்தை விதை 25 கிராம் போட்டு 20 நிமிடம் கலந்து விட எண்ணெய் கெட்டி தன்மை அடையும்
 7. பின்னர் 3 ஜெயம் கொட்டை விதையை போட்டு கலந்து விடவும்.
 8. பச்சை கற்பூரம்  10 கிராம் போட்டு 5 நிமிடம் கலந்து விட்டு அடுப்பில் இருந்து இறக்கவும்.
 9. தயார் செய்து வைத்துள்ள மூட்டுவலி தைலதை உடனே பயன்படுத்தக்கூடாது.
 10. ஒரு நாள் இரவு முழுவதும் அப்படியே மூடிவைத்து மறுநாள் பயன்படுத்தலாம்.
 11. கண்ணாடி பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தவும்.
 12. இந்த மூட்டுவலி தைலதை தலையை தவிர உடம்பின் அணைத்து இடங்களிலும் தடவி பயன் பெறலாம்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!