முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தோல் நோய்களை குணப்படுத்தும் கேரட்

கேரட்டில் விட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.

விட்டமின் கண் குறைபாட்டை சரிசெய்கிறது.

கேரட் பல விதமான தோல் நோய்களை குணப்படுத்துகிறது.

21 நாட்கள் தொடர்ந்து கேரட் ஜூஸ் அருந்திவர பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.

உடல் அழகை கூட்டி உடலுக்கு புதுப்பொலிவை கேரட் தருகிறது.

ஜீரண சக்தியை கூட்டுவதால் மலசிக்கலை நீக்குகிறது.

குழந்தைகளுக்கு 100 மில்லி கேரட் ஜூசுடன் 50 மில்லி தேங்காய்பால் சேர்த்து சாப்பிட  தேவையான சத்து கிடைத்து சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக இருப்பார்கள்,பெரியவர்களும் இதனை பயன்படுத்தலாம்.

கேரட்டை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உடலின் எதிர்ப்பு சக்தியை  கூட்டி நோய்கள் அண்டாமல் உடல் பாதுகாக்கப்படுகிறது.

இல்லறத்தில் திருப்தி இல்லாதவர்கள் தொடர்ந்து கேரட் சாப்பிட்டு பயன் பெறலாம்.

ஆண்கள் தொடந்து கேரட் சாப்பிட்டு வர உயிரணுக்கள் கூடி இல்லறம் இன்பமாகும்.

கேரட்டில் விட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் இருப்பதால்  நமது மொத்த உடலுக்கு தேவையான சக்தியை கேரட் நமக்கு தருகிறது.

கல்லிரல்,மண்ணீரல்கணையம்,சிறுகுடல் மற்றும் பெருங்குடல்  ஆகியவற்றின் செயல்பாட்டை அதிகரிக்க கேரட்டை சாப்பிடலாம்.

கேரட்டை தினமும் கடித்து சாப்பிட கண்குறைபாடுகள் நீங்கும்.

குடல் புழுக்களை அழிக்க கேரட் மற்றும் இஞ்சியை சேர்த்து  ஜூஸ் செய்து சாப்பிடலாம்,அல்சர் நோய் இருந்தால் குறைவான அளவு இஞ்சியை சேர்க்க வேண்டும்.

கிரேப் ஜூஸ் மற்றும் கேரட் ஜூஸ்  சேர்த்து தர கலர் மாறுவதால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

குழந்தைகளுக்கு  கேரட் ஜூஸ் உடன் தேங்காய் பால்,கிரேப் ஜூஸ்,இஞ்சி சாறு மற்றும் எலுமிசை சாறு கலந்து தினமும் ஒரு ஜூஸ் அருந்த தரலாம்.உடன் ஒரு உளுந்த வடை தர முழு சத்து கிடைக்கும்.

படிப்பில் கவனம் இல்லாத குழந்தைகளுக்கு கேரட் மற்றும் கேரட்ஜூஸ் நல்ல பலனை தரும்.

குழந்தைகளுக்கு கேரட்டின் நன்மைகளை கூறி அதனை சாப்பிட வைப்பதன் மூலம் எதிர்காலத்தில் கண் குறைபாடுகள் மற்றும் தோல் நோய்கள் வராமல் தடுக்க முடியும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony