முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

கல்லீரல், மண்ணீரல் நோய்கள் குணமாக | கல்லீரல் நன்கு இயங்க | குடலை சுத்தப்படுத்த | சுவாச குழாய் அலர்ஜி

siddha-3

 

  1. கல்லீரல்   மண்ணீரல் வீக்கம்  குணமாக ;-- கொள்ளுக்காய்,வேளை செடி வேர்,சிறிதளவு மிளகு ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து சாப்பிட்டு வரவும்.
  2. கல்லீரல் வீக்கம்  குறைய ;-- மருதம்பட்டை, கரிசலாங்கண்ணி தூள் ஒரு கிராம் தேனில் கலந்து சாப்பிடவும்.
  3. கல்லீரல், மண்ணீரல் நுரையீரல் வீக்கம் குறைய ;-- நொச்சி  இலைசாறை, பசுங்கோமியத்துடன் சாப்பிட்டு வர வீக்கம் குறையும்.
  4. கல்லீரல்  மண்ணீரல் உரம் பெற ;-- சீந்தில் கொடியை சாப்பிடலாம்.
  5. கெட்டு போய் இருக்கும் ஈரலை குணப்படுத்த ;-- ஈரல் கெட்டு போனவர்கள் கரிசலாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வர தீரும்.
  6. பித்தப்பை நோய் ;-- வேப்பம்பூவுடன், மிளகு, சீரகம் சேர்த்து உண்டு வர குணமாகும்.
  7. கல்லீரல் வலி குணமாக ;-கரிசலாங்கண்ணி,கீழாநெல்லி சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டு வர குணமாகும்.
  8. கல்லீரல் பலப்பட ;-- தினசரி ஒரு கொய்யாப்பழம் சாப்பிடலாம்.
  9. இதயம்,சிறுநீரகம்,மண்ணீரல்;-- சாறுவேளை இலையை கீரை போல் சமைத்து உண்ணலாம்.
  10. கல்லீரல் நோய் தீர ;-- கரிசாலை இலை,வேப்பிலை,துளசி,கீழாநெல்லி ஆகியவற்றை வெறும் வயிற்றில் மென்று தின்று வரலாம்.
  11. கல்லீரல் நன்கு இயங்க ;-- வேப்பம்பூவையை ஊறவைத்து வடிகட்டி சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  12. கல்லீரல் வீக்கம்  குறைய ;-- சித்திர மூல வேர்ப்பட்டையை பொடியை வாழைப்பழத்துடன் சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
  13. குடல்புண், நீரழிவு நோய் குணமாக ;-- வில்வ இலைப்பொடி அரை ஸ்பூன் எடுத்து 50 மில்லி தண்ணீரில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
  14. குடலை சுத்தப்படுத்த ;--  வில்வ பலத்தின் சதைப் பகுதியை சர்க்கரை சேர்த்து சாப்பிடவும்,கசடு தங்காமல் சுத்தம் செய்ய சிறந்தது.
  15. குடல் வெப்பம் நீங்கி குடற்புண் ஆற ;-- எழுத்தாணி பூண்டு இலைகளை நன்கு அரைத்து தாராளமாக மலம் போகும் படி கொடுக்க குணம் பெறலாம்.
  16. சுவாச குழாய் அலர்ஜி,குடல்புண் குணமாக ;-- குங்குமப்பூவுடன் சம அளவு தேன் கலந்து 3 நாட்கள் தினசரி 2 வேளை உட்கொள்ளலாம்.
  17. குடல் வாதம் குணமாக ;-- புரசப்பட்டையை நீரில் காய்ச்சி சிறுவர்களுக்கு கொடுத்து வந்தால் சரியாகும்.
  18. குடல் வாதம்,மேககிரந்தி தீர ;-- வெள்ளறுக்கு சமூலம்,சுக்கு, மிளகு,சீரகம் ஆகியவற்றை போட்டு கஷாயம் செய்து 50 மில்லி அளவு காலை மற்றும் மாலை குடித்து வரலாம்.
  19. குடல்புண் குணமாகவும்,வயிற்றுப்புழுக்கள் அழியவும்;-- அகத்திக்கீரை நல்ல உணவு.
  20. வயிற்றுக்கோளாறு ;-- புதினா துவையல் நல்ல மருந்து.
  21. அல்சர் குணமாக ;-- திராட்சை பழச்சாறு குடித்து வரலாம்.
  22. வயிற்றுவலி, வயிற்றுபொருமல், அஜிரணம் குணமாக ;-- ஏலக்காய் பொடியை தேனில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட்டு வரலாம்.
  23. வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் ;-- மனத்தக்காளி கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
  24. இரைப்பை வலுவடைய ;-- காரை இலையை வேக வைத்து சாப்பிடலாம்.
  25. குடல் வலிமை பெற ;-- வில்வமர பூக்களை புளி சேர்க்காமல் ரசம் வைத்து சாப்பிட்டு வரலாம்.
  26. குடல்வெப்பம் நீங்கி புண் ஆற ;-- எழுத்தாணி பூண்டு இலையை  அரைத்து மலம் போகும் அளவு கொடுக்கலாம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்