முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க.வில் இணைந்தது ஏன்? காளியம்மாள் விளக்கம்

வெள்ளிக்கிழமை, 13 மார்ச் 2026      தமிழகம்
ADMK-2026-03-13

சென்னை, நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து காளியம்மாள் கருத்து தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகியிருந்த காளியம்மாள், நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அ.தி.மு.க.வில் இணைந்ததற்கான காரணம் குறித்து பேசியதாவது;-

ஒரு தமிழனின் தலைமையில் இயங்கவே அ.தி.மு.க.வில் இணைந்திருக்கிறேன். சாதாரண குடும்பத்தில் இருந்த வந்த எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று அ.தி.மு.க.வில் இணைந்தேன். அ.தி.மு.கவில் இணைந்தது ஒருங்கிணைந்து எடுத்த முடிவு. எனது தனிப்பட்ட முடிவு அல்ல. இன்றைய சூழலில் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். 

விலைவாசி உயர்வு, சட்டம், ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு போன்ற நிறைய பிரச்சினைகள் உள்ளது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர். அரசியல் கட்சியிலிருந்து விலகினாலும் மக்கள் அரசியலிலிருந்து விலகவில்லை. நாம் தமிழர் கட்சியில் செயல்படுவதற்கு முன்பு அ.தி.மு.க.வில் ஏற்கனவே செயல்பட்டுள்ளேன். எனக்கு பொறுப்பு வழங்குவது குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து