Idhayam Matrimony

15 கிலோ தங்கம் காணாமல் போன வழக்கு: சுங்கத்துறை அதிகாரிகள் சஸ்பெண்ட்

புதன்கிழமை, 22 ஏப்ரல் 2015      இந்தியா
Image Unavailable

திருச்சி கண்டோன்மெண்ட் வில்லியம்ஸ் ரோட்டில் மத்திய அரசின் சுங்கத்துறை ஆணையர் அலுவலகம் உள்ளது. திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் காரில் கடத்தி வரப்பட்ட 18.5 கிலோ தங்க கட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து இந்த அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் வைத்திருந்தனர்.

இந்த நிலையில் கடந்த 18ம் தேதி அந்த தங்கத்தை திருவாரூர் கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக பாதுகாப்பு பெட்டகத்தை மண்டல சுங்கத்துறை அதிகாரி ஜானி தலைமையிலான அதிகாரிகள் திறந்து பார்த்த போது அதில் இருந்த 14 கிலோ தங்கம் மாயமாகி இருந்தது. 4.5 கிலோ தங்கம் மட்டுமே இருந்தது .

இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் கண்டோன்மெண்ட் குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் பேரில் மாநகர போலீஸ் உயர் அதிகாரிகள், சுங்கத்துறை அலுவலகத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இதற்கிடையில் பாதுகாப்பு பெட்டகம் முழுவதையும் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட பின் இதில் மேலும் பல கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மாயமாகி இருப்பதாக கூறப்பட்டது.

இதை தொடர்ந்து கடந்த 20ம் தேதி சென்னையில் சி.பி.ஐ.யிடம் சுங்கத்துறை மண்டல ஆணையர் ஜானி புகார் கொடுத்தார். இதையடுத்து தங்க கட்டிகள் மாயமானது தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று திருச்சி வந்ததாக தெரிகிறது.

சுங்கத்துறை அலுவலகத்தில் லாக்கரில் உள்ள இருப்பு தங்கத்தை 6 மாதத்திற்கு ஒரு முறை அதிகாரிகள் திறந்து ஆய்வு செய்வார்கள். அப்படி 3 மாதங்களுக்கு முன்பு லாக்கரை திறந்து பார்த்த போது 14 கிலோ தங்கம் லாக்கரில் இருந்துள்ளது. இதை அதிகாரிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இடைப்பட்ட 3 மாத காலத்திற்குள் தான் தங்கம் மாயமாகி உள்ளது.

எனவே கடந்த 3 மாதங்களில் லாக்கர் சாவியை வைத்திருந்தவர்கள் விவரம் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் பட்டியலை திரட்டி விசாரித்தால் இதில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது.

மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சுங்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த வைரம் மாயமான வழக்கிலும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பாகவும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர். விசாரணை முடிவில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்பதால் இதில் தொடர்புடைய சுங்கத்துறை அதிகாரிகள் கலக்கத்தில் இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுங்க இலாகா அதிகாரிகள் பாரூக், செந்தில்வேல் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதால் சூடு பிடித்துள்ளது. சி.பி.ஐ. விசாரணைக்கு பிறகு மேலும் சூடு பிடிக்கும் என கூறப்படுகிறது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து