Idhayam Matrimony

சென்னை: செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நிறைவு: இன்று முதல் ரூ.5 ஆயிரம் அபராதம்

ஞாயிற்றுக்கிழமை, 14 டிசம்பர் 2025      தமிழகம்
Chennai 2023 04 25

சென்னை, சென்னையில்  செல்லப்பிராணிகளுக்கு உரிமை பெற காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் உரிமை பெறாதவர்களுக்கு இன்று முதல் ரூ. 5,000 அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற நேற்று (டிச. 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கினர். உரிமம் பெறாதவர்கள் வீடுகளுக்கு இன்று முதல் ஆய்வு செய்து அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது வரை 56,378 செல்லப் பிராணிகளுக்கு மட்டுமே உரிமம் பெறப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப்பட உள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 2023- ஆம் ஆண்டு முதல் இணையதளம் மூலம் செல்லப் பிராணிகள் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், உரிமம் பெறுவதை விரைவுபடுத்தும் வகையில் கடந்த அக்டோபர் முதல் தனி இணையதள செயலி மூலம் உரிமம் பெறும் முறை தொடங்கப்பட்டது. அத்துடன் செல்லப் பிராணிகளான வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறாமலும், ரேபிஸ் தடுப்பூசி செலுத்தாமலும் இருக்கும் உரிமையாளர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செல்லப் பிராணிகள் வளர்ப்போருக்கு வசதியாக உரிமம் பெறவும், தடுப்பூசி செலுத்தி, அதை உறுதிப்படுத்தி கண்காணிக்க ’மைக்ரோ சிப்' பொருத்துவதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டதுடன், சிறப்பு முகாம்களும் நடைபெற்று வருகின்றன. முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற்றும், தடுப்பூசி செலுத்தியும், ’மைக்ரோ சிப்' பொருத்தியும் வருகின்றனர். இந்நிலையில், நேற்று (டிச. 14) கடைசி நாள் என்பதால் காலை முதலே முகாம்களுக்கு பொதுமக்கள் வரத் தொடங்கினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து