முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீன ராணுவத்தின் தலைமை தளபதியாக ஜனாதிபதி ஜி ஜின்பிங்க் பொறுப்பேற்பு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2016      உலகம்
Image Unavailable

பெய்ஜிங்  -  சீன ராணுவத்தின் தலைமை தளபதியாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜி ஜின்பிங்க்  பதவிபெற்றார். இந்த பதவி சீன ராணுவத்தின் கூட்டுப்படைகளின் தலைமை பொறுப்பாகும். 62வயது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்க் ஏற்கனவே ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராகவும் மத்திய ராணுவ கமிஷனின் பொதுச்செயலாளராகவும் உள்ளார்.

இந்த ராணுவ பதவி மக்கள் விடுதலை  ராணுவத்தை கட்டுப்படுத்தும். இந்த நிலையில் ஜி ஜின்பிங்க் தற்போது சீன கூட்டு ராணுவத்தின் தலைவராக ஆகியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் தற்போதைய நிலை உயரிய ,ஒருங்கிணைந்த, உரிய நேரத்திலான, தொழில் நுட்ப ரீதியில் துல்லியமாக மேற்கொள்ள வேண்டியிருக்கிறது என்று ஜி ஜின்பிங்க் தெரிவித்தார். நாட்டின் பாதுகாப்புக்கு வீரர்கள் தங்கள் மனநிலையை தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

உலக ராணுவ அரங்கில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சீன ராணுவத்திலும் பெரும் மாற்றங்கள் வரவேண்டும். எனவே சீன வீரர்கள் மிக அசாத்திய முறைகளை கடைபிடிக்க வேண்டும் சீன ஜனாதிபதி வலியுறுத்தினார். தெற்கு சீனா பகுதியில் சர்சைக்குரிய இடங்கள் தங்களதுபகுதி என சீனா உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில் தங்களது ராணுவத்தினை சீன மாற்றம் செய்துவருகிறது. சீன மக்கள் ராணுவம் உலகின் மிகப்பெரிய ராணுவ படையாகும், அதில்  22லட்சத்து 85ஆயிரம் ராணுவ வீரர்கள் இருக்கிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 5 days ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 5 days ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 5 days ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 5 days ago