முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழகத்திற்கு வழங்கியது ரூ.4,130 கோடி மட்டுமே: மத்திய அரசு மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      தமிழகம்
CM-1-2025-12-17

சென்னை, கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் அரசின் தொடர் நடவடிக்கையால் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 2 மடங்கு அதிகரித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காலநிலை மாற்றத்திற்கான ஆட்சிமன்றக் குழுவின் 3-வது கூட்டம் முதல்வர்  மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை சார்ந்த வழிகாட்டுதலை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில் முதல்வர்  மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

காலநிலை தொடர்பாக மாவட்ட அளவில் நடத்தப்படும் ஒருநாள் முகாம், இனி 2 நாட்கள் நடத்தப்படும். பசுமை பள்ளி வகுப்பறைகளில் வெப்பநிலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நமது அரசுக்கு வளர்ச்சி ஒரு கண் என்றால், இயற்கை வளங்களை பாதுகாப்பது மற்றொரு கண்.  காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்த்திருக்கிறோம்; அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டித்வா புயல் பாதிப்பில் இருந்து தமிழகத்தை பாதுகாத்துள்ளோம்; மிக விரைவில் காலநிலை கல்வியறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. மக்கள் அதிகளவில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவதுதான் நெரிசலைக் குறைக்க சிறந்த வழி. அதை ஊக்குவிக்கதான் 120 மின்சாரப் பேருந்துகளை கொண்டு வந்துள்ளோம். இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், மேலும் 600 மின்சாரப் பேருந்துகளை பயன்பாட்டுக்கு கொண்டு வரவுள்ளோம். இதனால் நெரிசலும், மாசுவும் குறையும்.

கடந்த 4 ஆண்டுகளில் பேரிடர் பாதிப்புகளை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு கேட்ட நிதியில் 17 சதவீதம் நிதியை மட்டுமே மத்திய அரசு அளித்துள்ளது. ரூ.24,670 கோடி நிதி கேட்டதில் ரூ.4,130 கோடியை மட்டுமே கொடுத்துள்ளது. எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு தமிழ்நாடு வென்றுள்ளது. அதேபோல் காலநிலை மாற்ற சவாலையும் எதிர்கொண்டு தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவிற்கே வழிகாட்டும் நிலையில் தமிழ்நாடு உள்ளது.  எப்போதாவது புயல் தாக்கும் என்ற நிலையை நாம் தாண்டிவிட்டோம். காலநிலை மாற்றத்தின் விளைவுகளை கண்கூடாக பார்க்கிறோம். டித்வா புயலின் கோரத் தாண்டவத்தை பார்த்தோம். அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் டித்வா புயலால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. பேரிடரால் இலங்கை உள்ளிட்ட நாடுகள் எப்படி பாதிக்கப்பட்டுள்ளன என்பதை பார்த்தோம். பள்ளி மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். 297 பசுமை பள்ளிகளில் கூல் ரூஃப் திட்டம் செயல்படுத்தப்படும். 

தமிழ்நாட்டில் அலையாத்தி காடுகளின் பரப்பளவு 2 மடங்கு அதிகரித்துள்ளது. மிக விரைவில் காலநிலை கல்வி அறிவு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. கால நிலை மாற்றம், நெகிழி ஒழிப்புக்காக 200 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு இ-ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளன. திராவிட மாடல் அரசு பெண்களுக்கான அரசாக எல்லா துறைகளிலும் பெயர் வாங்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து