முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி அன்புமணி ராமதாஸ் அல்ல.... அன்புமணி மட்டுமே: ராமதாஸ்

புதன்கிழமை, 17 டிசம்பர் 2025      தமிழகம்
Ramadoss 2023-07-28

விழுப்புரம், இனி அன்புமணி ராமதாஸ் அல்ல அன்புமணி மட்டுமே என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ம.க.வின் நிர்வாகக்குழு கூட்டம் விழுப்புரம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் அன்புமணிக்கு அதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

அவரை கட்சியில் இருந்து நீக்கி விட்டேன். அப்போது என் பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தக்கூடாது என தெரிவித்திருதேன். இருப்பினும் எனது பெயரையும் கட்சியின் பெயரையும் பயன்படுத்தி இருக்கிறார்கள் இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இப்போது அன்புமணிக்கு சின்னமும் இல்லை கட்சியும் இல்லை என நாங்கள் வழக்கு தொடுத்தோம். அன்புமணி கட்சி உறுப்பினர் கூட இல்லை. அவரை நாங்கள் நீக்கி விட்டோம். கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை எல்லாம் அன்புமணி தொடர்ந்து செய்து வருகிறார். தீட்டிய மரத்திலேயே கூர் பாய்ச்சியதைப் போல் பா.ம.க. என்னும் மரத்தில் கிளையை வெட்ட ஆரம்பித்திருக்கிறார் அன்புமணி.

நாம் நட்ட ஒரு பூந்தோட்டம். அதில் பல குரங்குகள் நுழைந்து பூக்களை எல்லாம் தினமும் நாசம் செய்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் ஆணயம், டெல்லி அனைத்தும் சொல்லுயும் மூட கூட்டம் நடத்துவது இது போன்ற பம்மாத்து வேலைகளை எல்லம் செய்து வருவது தமிழக அரசியலில் இதுவரை நடைபெறாத ஒரு கொடுமை. இதற்கு முன்னர் இப்படி எல்லம் நடந்ததில்லை. அன்புமணி என் பெயரை சொல்லி என் பணத்தை போட்டு என் கொடியை பயன்படுத்தி செய்வது வேதனை அளிக்கிறது. இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று இந்த நிர்வாகக்குழுவில் கண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான பொய் மூட்டைகளை ஊடகங்களுக்கு அன்புமணி கொடுக்கிறார். அது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து