முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டி இல்லை - சவுரவ் கங்குலி ஆதரவு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2016      விளையாட்டு
Image Unavailable

புதுடெல்லி : பாகிஸ்தானுடன் இனி கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது இல்லை என்ற இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முடிவுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி ஆதரவு தெரிவித்து உள்ளார்.

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் பாகிஸ்தானுடன் இப்போதைக்கு கிரிக்கெட் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் அனுராக் தாகூர் கூறியிருந்தார். அனுராக் தாகூரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து சவுரவ் கங்குலி கூறியதாவது:

எல்லைதாண்டிய பயங்கரவாத சம்பவங்கள் காரணமாக இந்தியா - பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்ட வரலாறு உள்ளது. இதுபோன்ற நிலையில் இருநாடுகள் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் குறித்து பேசுவது சிறப்பானதாக இருக்காது.

இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவேண்டும் என்பது பெரும்பாலானவர்களின் விருப்பமாக இருக்கிறது. அதேநேரம், எல்லைதாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தாத வரையில் இருநாடுகள் இடையே கிரிக்கெட் போட்டிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை.இவ்வாறு கங்குலி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்