எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, 2021 தேர்தலில், தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம் என்று வேண்டினேன். நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை தி.மு.க. அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட பாடுபட வேண்டும்.” என முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தின் விவரம் வருமாறு: திருச்சி சிறுகனூரில் மார்ச் 9-ம் தேதி கழக மாநாடு நடைபெறவிருக்கிறது. 75 ஆண்டுகளைக் கடந்த இந்தப் பெருங்குடும்பத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் ஓரிடத்தில் ஒன்றுகூடி, திராவிட மாடல் 2.0 ஆட்சியை அமைப்போம் என உறுதியேற்று, களம் காணும் பட்டாளமாக அணிவகுக்கும்போது, எதிரிகள் நடுங்குவது இயல்புதானே.
தலைவர் கலைஞர் போல எனக்குப் பேசவோ, எழுதவோ வராது. அவரிடம் நான் கற்றுக்கொண்டது உழைப்பு. அந்த உழைப்பு இந்த இயக்கத்தைக் கட்டிக்காப்பதற்கான உழைப்பு. இந்திய அரசியல் வரலாற்றில், கூட்டணிக் கட்சிகளை கொள்கைத் தோழமைகளாக அரவணைத்து, லட்சிய நோக்கத்துடன் பயணிக்கினற வாய்ப்பு, உங்களால் கழகத்தின் தலைவர் பொறுப்பு அளிக்கப்பட்டவனான உங்களில் ஒருவனான எனக்குக் கிடைத்திருக்கிறது.
2019 பாராளுமன்றத் தேர்தலுக்காக உருவான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி, 2020 ஊரக உள்ளாட்சித் தேர்தல், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2022 நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், 2024 நாடாளுமன்றத் தேர்தல், பல இடைத்தேர்தல்கள், எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் எனத் தொடர்வது மட்டுமல்ல, புதிதாக மேலும் பல கட்சிகள் நம் கூட்டணியில் இணைந்து கூடுதல் வலிமையைப் பெற்றிருக்கிறோம்.
அதனால்தான், அரசியல் எதிரிகள் தங்கள் கட்சியின் வலிமை மீது நம்பிக்கை இல்லாமல், நம்முடைய கூட்டணி உடையாதா என்று ஏங்கிக் கிடந்தார்கள். நம்மிடமிருந்து அவர்கள் வெளியேறி விடுவார்கள் என்றும், இவர்கள் பிரிந்து போகப் போகிறார்கள் என்றும் கனவில் கணக்கு போட்டு கற்பனைக் கோட்டைகளைக் கட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஃபர் கொடுத்தேனும் நம் கூட்டணியை உடைத்திடலாம் என முயற்சி செய்தார்கள். அவர்களின் கற்பனையையும் கனவுகளையும் ரசித்தபடி நாம் நம்முடைய பணியை மேற்கொண்டோம்.
மதவெறி அரசியலுக்குத் தமிழ்நாட்டில் இடமில்லை, மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்கிற கொள்கை உணர்வுமிக்க நம் தோழமைக் கட்சியினருடன் தொடர்ந்து இணக்கமாகவும் ஜனநாயகத் தன்மையுடனும் ஆலோசனைகள் நடத்தி, நம் பயணத்தில் இணைந்திட விரும்பிய கட்சிகளுக்கும் இடமளித்து, உறுதியான வெற்றிக்கான கூட்டணியை உங்களில் ஒருவனான நான் தலைமையேற்றுத் தொடர்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியினால் பயன் பெறாத குடும்பங்களே தமிழ்நாட்டில் இல்லை என்கிற வகையில் சாதனைத் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். மண்டலவாரியாக இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாடுகள், மகளிரணியின் வெல்லும் தமிழ்ப் பெண்கள் மாநாடுகள், பி.எல்.ஏ.2 , பி.எல்.சி., பி.டி.ஏ. பயிற்சி மாநாடுகள் எனத் தேர்தலை முன்னிட்டு நாம் நடத்திக்காட்டிய ஒவ்வொரு மாநாட்டிலும் லட்சத்துக்கும் மேற்பட்ட உடன்பிறப்புகள் கருப்பு சிவப்பு படையாய்க் திரண்டு வந்து கலந்துகொண்டனர்.
இவற்றைத் தொடர்ந்து, மார்ச் 9-ஆம் நாள் ‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும்’ என்ற பெயரிலான கழக நிர்வாகிகள் சந்திப்பு பிரம்மாண்ட மாநாடு நடைபெறவிருக்கிற திருச்சி சிறுகனூரில்தான், 5 ஆண்டுகளுக்கு முன் 2021-ம் ஆண்டு தேர்தல் சிறப்பு மாநாடு நடைபெற்றது. அப்போது உடன்பிறப்புகளான உங்களிடமும் பொதுமக்களிடமும் நான் வைத்த கோரிக்கை, ‘தி.மு.க.ழகத்திற்கு 10 ஆண்டுகள் தொடர்ச்சியான ஆள்கின்ற வாய்ப்பைத் தாருங்கள். அதி.மு.க. ஆட்சியில் 50 ஆண்டுகால அளவுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ள தமிழ்நாட்டை மீட்டு உயர்த்திக் காட்டுவோம்’ என்பதுதான்.
தொடர் பயணத்திற்கும், தடையில்லா வளர்ச்சிக்கும், ஒவ்வொரு துறையிலும் உலகத் தரத்திலான முன்னேற்றத்திற்கும், நான் அப்போது கேட்டது போல, மேலும் 5 ஆண்டுகால ஆட்சியை நாம் அமைத்திட வேண்டும். திராவிட மாடல் 2.0 அரசு அமைந்திட வேண்டும். தீரர் கோட்டமாம் திருச்சியில் கூடுவோம். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்திட உறுதியேற்றுக் களம் காண்போம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 5 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 5 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |
-
வருகிற 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது.
-
மத்திய அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டிற்குள்ளே எப்படியாவது மீண்டும் இந்தியை திணிக்க முயற்சி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026தஞ்சாவூா், இன்றைக்கு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் எப்படியாவது மீண்டும் தமிழ்நாட்டிற்குள்ளே இந்தியை திணிக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மத்திய பா.ஜ.க அ
-
திமுக - காங்கிரஸ் கூட்டணி பேச்சு: எல்லாம் முடிந்துவிட்டதாக சைகை காட்டியது எதனால்? முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
05 Mar 2026தஞ்சை, தஞ்சையில் நடந்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத் திருமண விழாவில், தேர்தல் கூட்டணி பற்றி முதல்வர் மு.க. ஸ்டாலின் மகிழ்ச்சியுடன் பேசினார்.
-
இடைக்காட்டூர் கிராமத்தில் தாக்குதல் சம்பவம்: கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க இ.பி.எஸ். வலியுறுத்தல்
05 Mar 2026சென்னை, சிவகங்கை மாவட்டம் இடைக்காட்டூர் கிராமத்தில் அரங்கேறிய கொலைவெறித் தாக்குதலில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஸ்டாலின் மா
-
தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க. சார்பில் எல்.கே. சுதீஷ் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட்டார்.
-
மாநிலங்களவைத் தேர்தல்: எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்த தம்பிதுரை
05 Mar 2026சென்னை, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மாநிலங்களவைத் தேர்தலில் அ.தி.மு.க.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆஃபர் கொடுத்து தி.மு.க. கூட்டணியை உடைக்க அரசியல் எதிரிகள் முயற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
05 Mar 2026சென்னை, 2021 தேர்தலில், தி.மு.க. 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆளும் வாய்ப்பைத் தாருங்கள். அ.தி.மு.க.
-
இணையதளத்தில் கோவில் நில விவரங்களை வெளியிட ஐகோர்ட் கிளை உத்தரவு
05 Mar 2026மதுரை, கோவில் நில விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
2030-ல் டி.டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும்: தமிழ்நாடு அரசு தகவல்
05 Mar 2026சென்னை, 2030-ல் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு உயரும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
-
மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நிறைவு: மனுக்கள் மீது இன்று பரிசீலனை
05 Mar 2026சென்னை, தமிழகத்தில் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடையும் 6 மாநிலங்களவை தேர்தலுகான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. மனுக்கள் மீது இன்று பரிசீலனை நடைபெறுகிறது.
-
தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறியுள்ளது: பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
05 Mar 2026சென்னை, தே.மு.தி.க.வின் நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என்று பிரேமலதா விஜயகாந் தெரிவித்துள்ளார்.
-
ஈரான் எங்களிடம் ராணுவ உதவி கேட்கவில்லை: ரஷ்ய அறிவிப்பு
05 Mar 2026மாஸ்கோ, ஈரான் தங்களிடம் எந்தவொரு ராணுவ உதவியையும் கேட்கவில்லை என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.
-
சட்டசபை தேர்தலில் போட்டியிடும் த.வெ.க. வேட்பாளர்கள் பட்டியல் : 2 வாரங்களில் வெளியிட திட்டம்
05 Mar 2026சென்னை, த.வெ.க. சார்பில் இரணடு வாரங்களில் வேட்பாளர் பட்டியலை வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
மாநிலங்களவை தேர்தல் தி.மு.க. வேட்பாளர்கள் திருச்சி சிவா - கான்ஸ்டன்டைன் இரவீந்திரன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல்
05 Mar 2026சென்னை, மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட தி.மு.க.
-
வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் : அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
05 Mar 2026நியூயார்க், பல்வேறு நாடுகளிடம் இருந்து வரி என்ற பெயரில் வசூலித்த 130 பி.டாலரை வட்டியோடு திருப்பி செலுத்த வேண்டும் என்று அதிபர் ட்ரம்ப் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்
-
த.வெ.க.வில் இணையுமாறு ஜெயக்குமாருக்கு செங்கோட்டையன் அழைப்பு
05 Mar 2026ஜெயக்குமார் வேண்டுமானால் த.வெ.க.விற்கு வரலாம் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம்: முதல்வர்
05 Mar 2026சென்னை, தமிழ்நாட்டில் இதுவரை 23.56 லட்சம் பேருக்கு பட்டா வழங்கியுள்ளோம் என்று தெரிவித்துள் முதல்வர் மு.க.ஸ்டாலின் 8,66,722 குடும்பங்களின் சொந்த வீடு கட்டும் கனவை நனவாக்
-
போர் சூழல் எதிரொலி: மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்
05 Mar 2026புதுடெல்லி, போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் பலி 1,045 ஆக உயர்வு
05 Mar 2026தெஹ்ரான், ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் கூட்டாக நடத்தி வரும் தாக்குதல் 5-வது நாளை எட்டியது.
-
ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்க படைகள் பயன்படுத்தியதா..? வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு
05 Mar 2026வாஷிங்டன், ஈரானை தாக்க இந்திய துறைமுகங்களை அமெரிக்கா பயன்படுத்தியதாக வந்த தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
-
பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல்: பிரதமர் மோடி தகவல்
05 Mar 2026டெல்லி, பின்லாந்து நாட்டுடன் பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வழங்கிட இந்தியா ஒப்புதல் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
-
ஈரானின் உச்சத்தலைவர் கமேனி மறைவிற்கு இந்தியா இரங்கல்
05 Mar 2026தெஹ்ரான், ஈரானின் உச்சத் தலைவர் கமேனியின் மறைவிற்கு 6 நாட்களுக்குப் பிறகு இந்தியா இரங்கல் தெரிவித்துள்ளது.


