முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வருகிற 16-ம் தேதி மாநிலங்களவை தேர்தல்: தமிழ்நாட்டில் ஆறு இடங்களுக்கு போட்டியின்றி தேர்வாக வாய்ப்பு

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      தமிழகம்
TN 2023-04-06

சென்னை, தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கு போட்டியிடுபவர்களின் முழுப் பட்டியல் வெளியாகியுள்ளது. தி.மு.க.வில் இருந்து இருவர், அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகளில் இருந்து தலா ஒருவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதில், தி.மு.க. சார்பில் திருச்சி சிவா, என்.ஆர். இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலம் முடிவடைகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு உட்பட நாட்டில் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 இடங்களில் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் 4 இடங்கள் தி.மு.க.வுக்கும் 2 இடங்கள் அ.தி.மு.க.வுக்கும் கிடைக்கும்.

தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு ஒரு மாநிலங்களவை இடமும், காங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை இடமும் ஒதுக்கப்பட்டது. அ.தி.மு.க. தரப்பில் பா.ம.க.வுகு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அந்தந்தக் கட்சிகள் தங்களின் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளனர். தி.மு.க.வின் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், அ.தி.மு.க. தம்பிதுரை, காங்கிரஸ் கிறிஸ்டோபர் திலக், பா.ம.க. அன்புமணி, தே.மு.தி.க. எல்.கே. சுதீஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

தம்பிதுரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும், அதில், இருமுறை மக்களவை துணைத் தலைவராகவும், மத்திய அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸின் ஜோதி மணியிடம் தோல்வியடைந்த நிலையில், 2020-ல் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். திருச்சி சிவா தொடர்ந்து 6-வது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வாகவுள்ளார்.பா.ம.க.வின் அன்புமணி 3-வது முறையாக தேர்வாகவுள்ளார். இவர் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், கிறிஸ்டோபர் திலக், எல்.கே. சுதீஷ் ஆகியோர் முதல்முறையாக மாநிலங்களவைக்கு செல்லவுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து