முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போர் சூழல் எதிரொலி: மீண்டும் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்க இந்தியா திட்டம்

வியாழக்கிழமை, 5 மார்ச் 2026      இந்தியா
Oil

புதுடெல்லி, போர் சூழல் காரணமாக ரஷ்யாவில் இருந்து கூடுதல் அளவு கச்சா எண்ணெய் வாங்க இந்தியா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 நாட்களுக்கு தேவையான கச்சா எண்ணெய் இந்தியாவிடம் கையிருப்பு உள்ள நிலையில் ரஷ்யாவிடம் கூடுதலாக வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதம் இறக்குமதியை மட்டுமே நம்பி உள்ளதால் ரஷ்யாவிடம் இருந்து கூடுதலாக வாங்க முடிவு செய்துள்ளது. தற்போது ரஷ்யாவிடம் இருந்து 40 சதவீதம் அளவிற்கு இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி வரும் நிலையில் அதன் அளவை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஈரான்- இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வருவது பாதிக்கப்பட்டதால் புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது.

ஈரான் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து கச்சா எண்ணெய் விநியோகம் நிறுத்தப்பட்டதால் இந்தியா புதிதாக திட்டமிடப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து நாளொன்றுக்கு 14 லட்சம் பேரல்கள் கச்சா எண்ணெய் வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிறநாடுகளை விட ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் குறைந்த விலையில் வாங்குவதால் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பில்லை என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 9 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 11 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 11 months ago
View all comments

வாசகர் கருத்து