முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாய் போட்டுப் படுத்தால் நோய் விட்டுப் போகும் !

செவ்வாய்க்கிழமை, 22 நவம்பர் 2016      மருத்துவ பூமி
Image Unavailable

படுக்கைகள் பலவிதம். எத்தகைய படுக்கையில் படுத்து உறங்கினால் என்ன பலன் ஏற்படும் என்பதை "மருத்துவ திறவுகோல்’ என்னும் சித்த மருத்துவ நூல் விளக்கியுள்ளது.

கம்பளிப் படுக்கை - குளிருக்கு இதம். குளிர் சுரம் நீங்கும்.
கோரைப்பாய் - உடல் சூடு, மந்தம், சுரம் போக்கும், உடலுக்குக் குளிர்ச்சியும், உறக்கமும் ஏற்படும்.
பிரம்பு பாய் - சீதபேதி, சீதளத்தால் வரும் சுரம் நீங்கும்.
ஈச்சம்பாய் - வாதநோய் குணமாகும். உடல் சூடு, கபம் இவை அதிகரிக்கும்.
மூங்கில் பாய் - உடல் சூடும், பித்தமும் அதிகரிக்கும்.
தாழம்பாய் - வாந்தி, தலை சுற்றல், பித்தம் நீங்கும்.
பேரீச்சம்பாய் - வாதகுன்மநோய், சோகை நீங்கும். ஆனால் உடலுக்கு அதிக உஷ்ணம் தரும்.
இலவம்பஞ்சு படுக்கை - உடலில் ரத்தம், தாது பலம் பெறும். தலை முதல் பாதம் வரையிலான 
அனைத்து நோய்களும் நிவாரணம் பெறும்.
மலர்ப்படுக்கை - ஆண்மை அதிகரிக்கும். நன்றாகப் பசியெடுக்கும்.
இரத்தினக் கம்பளம் - நஞ்சுகளின் பாதிப்பால் ஏற்படும் நோய்களை நீக்கும்.
இது தவிர இப்படியும் பயன்படுகிறது பாய். பனைஓலை பாய் பலசரக்கு வெல்லமண்டிகளில் சரக்குகள் கையாள பயன்படும்.  மூங்கில்நார் பாய் வீடு, அலுவலகங்களில் தடுப்புசுவர் மற்றும் கோடை வெப்ப தடுப்பானாகவும் பயன்படும். நாணல்கோரை பாய் மக்கள் பயன்படுத்தும் எளிமையான படுக்கை விரிப்பாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்