எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
உலகிலேயே இந்திய மக்கள் தொகையில் 2 ம் இடத்தில்உள்ளது. 1081 மில்லியன் மக்கள் தொகை கொண்டுள்ளது. இதில் வளர் இளம் பெண்களின் விகிதம் 22.5 சதவீதம் அதாவது 225 மில்லியன் ஆகும், வளர் இளம் பருவம் எண்பது 10 முதல் 19 வயதுக்குட்பட்ட பருவம் ஆகும். இந்த பருவத்தினர் குழந்தையும் அல்ல, வளர்ந்த பெண்களும் அல்ல. இரண்டிற்கும் இடைப்பட்ட பருவம். இப்பருவத்தில் எந்த ஒரு விசயத்ததை நல்லதோ, கெட்டதோ எளிதில் கிரகித்துக்கொள்ளும் ஆர்வம் உண்டு. இப்பருவத்தில் நல்ல ஒழுக்கத்தையும், நல்ல சிந்தனையையும், நல்ல உடல் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் கல்வி கிடைப்பது மிகவும் முக்கியம். அதில் பள்ளிகளும், பெற்றோர்களும் சமுதாயமும் பெரும் பங்கு வகிக்கிறது. இதில் மகளிர் மருத்துவர் என்ற முறையில் வளர் இளம் பெண்களை அதிகம் பாதிக்கும் 10 உடல் ஆரோக்கிய பிரச்சனைகள் பற்றி இங்கு காண்போம்.
1. சீரியசான சிறு நீரகத் தொற்று:- பெண்ணாக பிறந்த எல்லோரும் வாழ்நாளில் ஏதோ ஒரு தருணத்தில் நிச்சயம் இந்த அவதியை அனுபவித்திருப்பார்கள். சிறுமிகள் முதல் வயதான பெண்கள் வரை எல்லோரையும் தாக்கக் கூடிய அந்த நோய் யூரினரி இன்பெக்ஷன் எனப்படுகிற சிறு நீராகப் பாதைத் தொற்று. ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டாலும், அடிக்கடி தொடர்ந்தாலும் இந்த பிரச்சனை எப்படியெல்லாம் பாதிப்பைக் கொடுக்கிறது என்பதை பார்ப்போம்.
ஆண்களின் சிறுநீர் பைக்கும், அது வெளியேறுகிற துவாரத்துக்குமான இடைவெளி 15 செ.மீ, என்றால், பெண்களுக்கு அது வெறும் 3 செ.மீ.மட்டுமே. அதனால் மிகச் சுலபமாக கிருமிகள் பெண்களின் சிறுநீர் பையைத் தாக்குகின்றன. பெண்களுடைய உடல்வாகு மட்டுமின்றி ஒவ்வொரு வயதிலும் அவர்கள் சந்திக்கின்ற சில விஷயங்களும் இந்தத் தொற்றுக்கு மிக முக்கியமான காரணமாகிறது.
பள்ளிக்கூடம் செல்லுகிற வயதுப் பெண் குழந்தைகள், பள்ளியில் உள்ள கழிவறையின் சுகாதாரம் சரியில்லாத காரணத்தினால் சிறுநீர் கழிப்பதைத் தவிர்ப்பார்கள். தண்ணீர் குடிக்கமாட்டார்கள். இதனால் அவர்களுக்கு இந்தத் தொற்று அடிக்கடி வரும். அதன் விளைவாக வயிற்றுவலி சோர்வு, பசியின்மை. படிப்பில் கவனம் சிதறல் போன்றவை வரலாம். அடுத்து மாதவிலக்கு நாட்களில் சுத்தமாக இல்லாத பெண்களுக்கும், தரமான நாப்கின்களை உபயோகிக்காத பெண்களுக்கும் இந்த தொற்று அடிக்கடி வரும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்கிறபோது எரிச்சல் , முழுமையாக கழிக்காத உணர்வு, சில நேரங்களில் காய்ச்சல் போன்றவை யூரினரி இன்பெக்ஷனுக்கான அறிகுறிகள். எப்போதோ ஒரு முறை வந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு இது அடிக்கடி வரும். அவர்கள் சிறுநீ்ர் பரிசோதனை செய்யவேண்டும். சாதாரண சோதனை மட்டும் போதாது என்கிற நிலையில் யூரின் கல்ச்சர் சோதனையும் செய்து காரணத்தைத் துல்லியமாக கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.
காரணங்கள்:- போதுமான தண்ணீர் குடிக்காதினால், பள்ளி நேரங்களில் சிறுநீர் கழிக்கமால் அடக்கி வைப்பது, பிறப்புறுப்பை சுத்தமின்றி வைத்துக்கொள்ளுதல், காபி, சாக்லேட் போன்றவற்றை அதிகம் சாப்பிடுதல்.
தடுப்பு முறைகள்:- வருமுன்காப்பது இந்த விஷயத்தில் மிகவும் முக்கியம். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பது, அந்தரங்க உறுப்புக்களை சுத்தமாக வைத்துக்கொள்வது, மாதவிலக்கு நாட்களில் சுகாதாரத்தை கடைப்பிடிப்பது, தரமான, சுத்தமான, உள்ளாடைகளை உபயோகிப்பது போன்றவற்றின் மூலம் இதை தவிர்க்கலாம். இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீர் கழிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளவேண்டும். கொக்கோ கோலா, காபி, சாக்லேட் அருந்தக்கூடாது.
2. வெள்ளைப்படுதல்:- வளர் இளம் பெண்கள் வெள்ளப்படுவதை ஒரு பெரும் வியாதியாக நினைத்து பயப்படுகிறார்கள். இதைப்பற்றிய விழிப்புணர்வு வளர் இளம் பெண்களிடம் ஏற்படுத்தவேண்டியது அவசியம். வெள்ளைப்படுவது என்பது வாயில் உழிழ்நீர் சுரப்பது போன்ற பிறப்பு உறுப்பில் இருந்து வெளியேறும் தண்ணீர் போன்ற திரவம் ஆகும். நாம் எவ்வாறு உமிழ்நீர் சுரப்பை ஒரு வியாதியாக கருதவில்லையோ அதேபோல் பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவத்தையும் (வெள்ளைப்படுதல்) ஒரு நோயாக கருதக்கூடாது.எப்பொழுது மருத்துவரை அணுக வேண்டும் என்றால்;
a. பிறப்பு உறுப்பிலிருந்து வெளியேறும் திரவமானது துர்நாற்றம் அடித்தாலோ,
b. பிறப்பு உறுப்பில் ஊரல் எடுத்தாலோ,
c. பிறப்பு உறுப்பிலிருந்து வரும் திரவமானது நிறம்மாறி வந்தாலோ (பச்சை, மஞ்சள்)
d. நாப்கின் வைக்கும் அளவுக்கு அதிகமாக சுரந்தாலோ.
3. obesity& pcod மற்றும் முன்மாதவிடாய் சிக்கல்கள் - இவற்றுக்கெல்லாம் முக்கிய காரணம்
1. மாறுபட்ட நாகரீக வாழ்கை முறை
2. துரித உணவுகள் உட்கொள்ளுதல்
3. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு
மாறுபட்ட நாகரீக வாழ்க்கை முறை:- தற்பொழுது உடல் உழைப்பு, விளையாட்டு ஏதுமின்றி வளர் இளம் பெண்கள் டிவி, கம்யூட்டர், செல்போன்,செல்பி என்றுதான் இருக்கிறார்கள். முன்பு போல கிணற்றில் நீர் இறைக்க, அம்மி ஆட்டுக்கல் அரைக்க, அதிகாலையி்ல் எழுந்து குனிந்து கோலம் போட, மாலையில் விளையாட்டு என்ற இருந்த காலமெல்லாம் மலையேறி விட்டது.
பூப்பெய்திய பருவத்தில் கிடைக்கும் உளுந்தங்களி, வெந்தயக்களி, போன்ற உணவுகள் எல்லாம் தற்காலக இளம்பெண்கள் சாப்பிடுவதில்லை. இவையெல்லாம் சினை உறுப்பு வளர்ச்சி, கருப்பை மற்றும இடுப்பெலும்பு விரிவடைய உதவும்.
இவ்வாறின்றி தற்போதைய நவநாகரீக வாழ்க்கை முறையால் உடல் அதிக எடை அடைதல், சினை உறுப்பு வளர்ச்சியின்றி அவற்றில் நீர் கோர்த்து கருமுட்டை வளராது, வெடிக்காது, pcod உண்டாதல். இதனால் ஒழுக்கமற்ற மாதவிடாய் மற்றும் குழந்தையின்மை உண்டாகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
நாளை மீனாட்சி திருக்கல்யாணம்: 2 சிறப்பு கட்டண சீட்டு விநியோகம்
06 May 2025மதுரை, மீனாட்சி திருக்கல்யாணத்தை முன்னிட்டு 2 வகையான சிறப்பு கட்டண சீட்டு விநியோகிக்கப்படவுள்ளது.
-
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை 2 நாட்கள் போர் பயிற்சி : ரபேல், மிராஜ் 2000 - சுகோய்-30 பங்கேற்பு
06 May 2025புதுடெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் 2 நாட்கள் போர் பயிற்சி நடத்தவுள்ளதாக இந்திய விமானப்படை அறிவித்துள்ளது.
-
புதுக்கோட்டை, வடகாடு சம்பவம்: மதுபானக் கடைகளை மூட உத்தரவு
06 May 2025வடகாடு : புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் உள்ள மதுபானக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
-
ஒரே நாளில் 2 முறை விலை உயர்ந்த தங்கம்
06 May 2025சென்னை : சென்னையில் தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டாவது முறையாக அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு
06 May 2025வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
-
இந்தியாவுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவோம்: அமெரிக்கா அறிவிப்பு
06 May 2025வாஷிங்டன் : பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுக்கு ஆதரவளிக்க அனைத்து விதமான முயற்சிகளையும் அமெரிக்க மேற்கொள்ளும் என்று அந்நாட்டு பிரதிநிதிகள் சபையின் சப
-
திருவள்ளூரில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு
06 May 2025திருவள்ளூர் : திருவள்ளூர் வீரராகவபெருமாள் கோயில் தெப்பக் குளத்தில் தவறி விழுந்து, சேலையூர் வேத பாடசாலை மாணவர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம், பக்தர்கள், பொதுமக்கள் மத்தியி
-
நாடு முழுவதும் சாலை விபத்தில் காயமடைந்தால் இனி இலவச சிகிச்சை: மத்திய அரசு
06 May 2025புதுடெல்லி : நாடு முழுவதும் நிகழும் சாலை விபத்துகளில் காயமடைபவர்களுக்கு இனி இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
தீவிரவாதத்துக்கு எதிரான போர்: இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு
06 May 2025டோக்கியோ : தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சுப்ரீம்கோர்ட் நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியீடு
06 May 2025புதுடெல்லி : சுப்ரீம்கோர்ட்டில் தற்போது 33 நீதிபதிகள் பணியாற்றி வரும் நிலையில், 21 பேரின் சொத்துகள், வெளியிடப்பட்டுஉள்ளது.
-
30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த உணவு பாதுகாப்பு துறை உத்தரவு
06 May 2025சென்னை : 30 முறை மட்டுமே குடிநீர் கேன்களை பயன்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள உணவு பாதுகாப்பு துறை, முறையான அனுமதியின்றி குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்தால் உடனட
-
மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் நியமனத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
06 May 2025சென்னை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் 23.05.2025-க்குள் விண்ணப்பிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முல்லை பெரியாறு வழக்கு: மேற்பார்வை குழு பரிந்துரைகளை கேரள அரசு செயல்படுத்த வேண்டும்: சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவு
06 May 2025புதுடெல்லி, முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்க மேற்பார்வை குழு ஏப்ரல் 25ம் தேதி வழங்கி உள்ள பரிந்துரைகளை கேரளா அரசு செயல்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்ட
-
காஷ்மீரில் விபத்து: 2 பேர் பலி
06 May 2025பூஞ்ச் : காஷ்மீரில் சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
-
முர்ஷிதாபாத் வன்முறை: பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து மம்தா பானர்ஜி ஆறுதல்
06 May 2025முர்ஷிதாபாத், முர்ஷிதாபாத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட 280 குடும்பங்களுக்கு தலா ரூ.1.20 லட்சம் வழங்குவோம் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
-
தேனி மாவட்டத்திற்கு மே 9, 12 விடுமுறை
06 May 2025தேனி, மே 6-ம் தேதியன்று தேனி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் உத்தரவிட்டுள்ளார்.
-
மு.க.ஸ்டாலின் உடன் நடிகர் பிரகாஷ் ராஜ் சந்திப்பு
06 May 2025சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினை நடிகர் பிரகாஷ் ராஜ் நேற்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார் .
-
தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாராட்டுங்கள்: பத்திரிகை, ஊடகத்துறை சந்திப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை
06 May 2025சென்னை, தனிப்பட்ட ஸ்டாலினையோ, தி.மு.க அரசையோ நீங்கள் பாராட்ட வேண்டும் என்று நான் கேட்கவில்லை. தமிழ்நாட்டை பாராட்டுங்கள் என்றுதான் கேட்டுக்கொள்கிறேன்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2025
07 May 2025 -
இங்கு அனைவரும் சகோதர சகோதரிகளாக உள்ளனர்: தமிழிசைக்கு அமைச்சர் சேகர் பாபு பதில்
06 May 2025சென்னை, மொழியால், மதத்தால் பிளவு ஏற்படுத்தி தேர்தல் நேரத்தில் குளிர்காயலாம் என்று தமிழிசை சௌந்தரராஜன் நினைப்பதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
ஒருநாள் முன்பே பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நாளை வெளியீடு : அரசு தேர்வுத்துறை அதிகாரபூர்வ அறிவிப்பு
06 May 2025சென்னை : பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (மே 8) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுத் துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
-
மோதல் தவிர்க்கப்பட வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலாளரிடம் பாக். பிரதமர் வேண்டுகோள்
06 May 2025இஸ்லாமாபாத் : இந்தியா - பாகிஸ்தான் இடையேயான மோதல் தவிர்க்கப்பட வேண்டும் என்று ஐ.நா.
-
இந்தியா-இங்கிலாந்து இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து பிரதமர் நரேந்திர மோடி வரவேற்பு
06 May 2025புதுடெல்லி, இரு நாடுகளுக்கும் நன்மை தரக் கூடிய வகையில் இந்தியா - இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு முடிவு இறுதி செய்யப்பட்
-
தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை
06 May 2025சென்னை, சந்தர்பவாதிகளிடம் மறைமுக கூட்டணி வைத்து தி.மு.க.வை வீழ்த்த நினைப்பவர்களின் கணக்கு தப்புக்கணக்காகவே முடியும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையி
-
தோனிக்காக விதியை மாற்றியது இந்திய கிரிக்கெட்டுக்கு ஆபத்து : சுனில் கவாஸ்கர் விமர்சனம்
06 May 2025சென்னை : நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் அணியாக வெளியேறியது. இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி.எஸ்.கே.