முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவல்: தமிழகத்தில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்: மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 26 டிசம்பர் 2025      தமிழகம்
Koli-21

சென்னை, கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவலால் தமிழ்நாட்டில்  பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கேரளாவின் ஆலப்புழா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய கோழி மற்றும் மாட்டிறைச்சி வண்டிகளில் கிருமி நாசினி அடிக்கப்பட்டு வருவதாகவும், 13 எல்லையோர மாவட்டங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக சுகாதாத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தற்போது வரை பறவைக் காய்ச்சல் கண்டறியப்படவில்லை எனவும், பறவைக் காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் எனவும் தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. பறவைகளிடம் இருந்து மனிதர்களுக்கு தற்போது வரை பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பு மருந்து அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கையிருப்பில் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

அதே சமயம், 3 முதல் 5 நாட்கள் வரையிலான தொடர் காய்ச்சல், சுவாசக் கோளாறு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகளை உடையவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ரத்தப் பரிசோதனையில் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டால் அவர்களை தனிமையில் வைத்து சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதாத்துறை தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து