முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெரினா கடற்கரையில் 144 தடை உத்தரவு அமல் - பொழுதுபோக்க குடும்பத்துடன் வர தடை இல்லை

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : சென்னை மெரினாவில் போராட்டம் நடத்திய மாணவர்களில் பலர், 23ம் தேதி கலைந்து சென்றுவிட்டதாகவும், பேச்சுவார்த்தையில் ஈடுபட்டபோது, சமூகவிரோதிகள் கற்களை வீசியதாகவும் சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த காவல்துறை கூடுதல் ஆணையர்  சங்கர், ஜல்லிக்கட்டு தொடர்பாக மாணவர்கள் போராட்டம் நடத்தியபோது, ஏற்பட்ட பிரச்னையில், காவல்துறை மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்த வீடியோவை வெளியிட்டார். சமூகவிரோதிகள் சிலரால் மாணவர்கள் தூண்டிவிடப்பட்டதாகவும், ஐஸ்ஹவுஸ் காவல் நிலையத்திற்கு தீ வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதில், காவலர்கள் காயமடைந்ததாகவும் குறிப்பிட்டார். மெரினாவில் மாணவர்கள் மீது தடியடி நடத்தவில்லை என  கூடுதல் ஆணையர்  சங்கர் தெரிவித்தார்.

மெரினா கடற்கரையில் நள்ளிரவு முதல், பிப்ரவரி 12-ம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும் என கூடுதல் ஆணையர்  சங்கர் தெரிவித்துள்ளார். பொது நிகழ்ச்சிகள், போராட்டம், மனிதசங்கிலி உள்ளிட்ட நடவடிக்கைகளைத் தடுக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நடைபயிற்சி, சுற்றுலா, பொழுதுபோக்குக்காக குடும்பத்துடன் வருவதற்கு தடை எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago