முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிளஸ் 2 மாணவர்கள் நல்ல மதிப்பெண் எடுக்க ஆசிரியர் கூறும் அறிவுரைகள்

செவ்வாய்க்கிழமை, 31 ஜனவரி 2017      மாணவர் பூமி
Image Unavailable

Source: provided

பிளஸ் 2 மாணவர்கள் எவ்வாறு படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம் என்று ஆசிரியர்கள் விளக்கினார்.

தமிழில் அதிக மதிப்பெண் பெற : தமிழில் தற்போது 199 மதிப்பெண் வரை சர்வ சாதாரணமாக வழங்கப்படுகிறது. வகுப்பில் தமிழ் பாடம் நடத்தும்போது, மிகவும் கூர்ந்து கவனிக்க வேண்டும்; புரிந்து படிக்க வேண்டும். பாடங்களை புரியாமல் மனப்பாடம் செய்யக் கூடாது. தமிழ் தானே என அலட்சியமாக இருக்கக்கூடாது. தமிழில் அதிக மதிப்பெண் பெற, எழுத்து பிழையின்றி எழுத வேண்டும். கேள்விக்கு சம்மந்தம் இல்லாத பதில், கதைகளை எழுதக்கூடாது. தெளிவான கையெழுத்தில் தேர்வு எழுத வேண்டும்.

சிறப்பாக வழங்க வேண்டும் : விடைத்தாளில் அடிக்கோடு இட, பச்சை மை, சிவப்பு மை, ஊதா மை ஆகியவற்றை பயன்படுத்தக்கூடாது. இந்த மைகள், பேப்பர்களை திருத்தும் ஆசிரியர்கள், மேற்பார்வையாளர்கள் பயன்படுத்தக் கூடியவை. திணைக்கு நேரிடையாக வினா எழுத வேண்டும். மனப்பாடம் பகுதி எழுதும்போது பாட்டு எழுத வேண்டும். பாவகை எழுதி விடக்கூடாது. எந்தந்த இடங்களில் கமா, புல் ஸ்டாப் வைக்க வேண்டும் என தெரிந்து, சரியாக வைக்க வேண்டும். அதை செய்ய தவறினால் மதிப்பெண் குறைந்து விடும் என்பதை ஞாபகத்தில் வைத்திருக்க வேண்டும்.

அதிகாலை படிப்பு : அதிக மதிப்பெண் பெற, படித்ததை அடிக்கடி திருப்பி பார்க்க வேண்டும். துணைப்பாடத்தில் முதல் ஐந்து பாடங்களை நன்றாக படிக்க வேண்டும் அல்லது ஐந்தாம் பாடத்தில் இருந்து 10ம் பாடம் வரை நன்றாக படித்துக் கொள்ள வேண்டும். தேர்வு எழுதி முடித்ததும் அவற்றை மீண்டும் திருப்பி பார்க்க வேண்டும். வினா எண் சரியாக எழுதி இருக்கிறோமா என சரி பார்த்துக் கொள்வது மிகவும் அவசியம். அதிகாலை சீக்கிரம் எழுந்து படிப்பது மிகவும் நல்லது. அப்போது, அவை மனதில் எளிதில் பதியும்.

சந்தேகத்தை நிவர்த்தி செய்ய... : ஆங்கிலம் கசப்பான பாடம் இல்லை. விரும்பி படித்தால் ஆங்கிலத்தில் அதிக மதிப்பெண் பெறலாம். வகுப்பில் பாடம் நடத்தும்போது மிகவும் கவனமாக கேட்க வேண்டும். பாடத்தில் சந்தேகம் இருந்தால், உடனடியாக ஆசிரியரிடம் கேட்டு, நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.  சந்தேகத்தை கேட்டால் சக மாணவ, மாணவியர் நம்மை தவறாக, கேலியாக நினைத்து விடுவார்களோ என்ற அச்சம் கொள்ளக் கூடாது. இலக்கண பிழைகள் இருந்தால் மதிப்பெண் குறையும். இதை மாணவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். பெர்சனல் டாபிக், மை ஆம்பிசன், அறிவியல் மற்றும் அணு குறித்து கேள்விகள் கேட்கப்படும். இதற்கு நம்மை செம்மையாக தயாரித்துக் கொள்ள வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்