முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சண்டை முடிந்தது சமாதானம் பிறந்தது: எலான் மஸ்கை புகழ்ந்த ட்ரம்ப்

திங்கட்கிழமை, 30 ஜூன் 2025      உலகம்
Trump-Elan-Musk 2024 08 13

Source: provided

வாஷிங்டன் : எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த மசோதா, செனட்டில் நிறைவேறி உள்ளது. இது தொடர்பாக நிருபர்கள் கேள்விக்கு, ''எலான் மஸ்க் சிறந்த மனிதர். அவர் சிறப்பாக செயல்பட கூடியவர்'' என ட்ரம்ப் பதில் அளித்தார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வரி குறைப்பு, அமெரிக்க அரசின் கடன் உச்சவரம்பை அதிகப்படுத்துவதற்காக 'பெரிய அழகான வரி' என்ற பெயரில் கொண்டு வந்த மசோதா நேற்று முன்தினம் செனட்டில் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு அனுமதிக்கும் நடைமுறை ஓட்டெடுப்பில் இரு ஓட்டுகளில் தேர்வானது. இந்த மசோதாவுக்கு தான் தொழிலதிபர் எலான் மஸ்க் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

எலான் மஸ்க் அமெரிக்க அதிபரின் நெருங்கிய ஆலோசகராக கடந்த மே மாதம் பணியாற்றினார். பின்னர் அவரது பதவிக்காலம் முடிந்தது. இந்நிலையில், எலான் மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த 'பெரிய அழகான வரி' மசோதா செனட்டில் நிறைவேறியது குறித்து ட்ரம்ப் கூறியதாவது:-

எலான் மஸ்க் ஒரு அற்புதமான மனிதர் என்று நான் நினைக்கிறேன். நான் அவருடன் அதிகம் பேசியதில்லை, ஆனால் அவர் எப்போதும் நன்றாகச் செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும். அவர் ஒரு புத்திசாலி. அவர் உண்மையில் என்னுடன் பிரசாரம் செய்து, இதையும் அதையும் செய்தார். ஆனால் அவர் கொஞ்சம் வருத்தப்பட்டார், அது பொருத்தமானதல்ல. இவ்வாறு ட்ரம்ப் கூறினார். மசோதாவுக்கு மஸ்க் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் டிரம்புக்கும் அவருக்கும் கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டி தீர்த்தனர். மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட அரசு ஒப்பந்தங்களை ரத்து செய்யப் போவதாக அதிபர் மிரட்டலும் விடுத்தார்.பின்னர் மஸ்க் வருத்தம் தெரிவித்ததை தொடர்ந்து பிரச்னை முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து