முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் செனட் துணை சேர்மனுக்கு அமெரிக்கா விசா மறுப்பு

திங்கட்கிழமை, 13 பெப்ரவரி 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்  - பாகிஸ்தான் செனட் துணை சேர்மன் ஹெய்தேரிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது.

டிரம்ப் வலியுறுத்தல்
அமெரிக்காவின் புதிய அதிபராக பொறுப்பேற்ற டொனால்டு டிரம்ப், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் அரசை வலியுறுத்திவந்தார்.  இந்நிலையில், பாகிஸ்தான் செனட் துணை சேர்மன் மவுலானா அப்துல் கபூர் ஹெய்தேரிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுப்பு தெரிவித்துள்ளது. ஹெய்தேரி பாகிஸ்தானின் மிகப்பெரிய இஸ்லாமிய கட்சியான ஜமியாட் உலெம இஸ்லாமின் பொதுச் செயலாளராக உள்ளார்.

பயணம் ரத்து
ஐக்கிய நாடுகள் சார்பில் இன்று நடைபெறவிருந்த மாநாட்டில் ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஹெய்தேரி அடங்கிய இரண்டு பேர் கொண்ட குழுவை பாகிஸ்தான் அனுப்பி இருந்தது. பாகிஸ்தான் செனட்டின் ஓய்வு பெற்ற பொதுச் செயலாளர் சலாஹூத்தீன் திர்மிஸிக்கு மட்டும் இரண்டு நாட்களுக்கு மட்டும் அமெரிக்கா விசா வழங்கியுள்ளது. விசா மறுக்கப்பட்டதை தொடர்ந்து இரண்டு பேரது பயணத்தையும் பாகிஸ்தான் செனட் ரத்து செய்து உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 1 week 11 hours ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 days ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 1 month 3 days ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 1 month 4 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 2 months 2 hours ago