முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலத்தின் கட்டாயமாகி வரும் செயற்கை மழை முறைகள் :

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

மேக விதைப்பு : வறட்சியை தனிப்பு செய்ய உதவும் ஒரு முறையாக மேக விதைப்பு பயன்படுகிறது. இம்முறையில் மழைப்பொழிவானது ஆவிச்சுருங்குதல் உட்கருக்களை கொண்டு மழைப்பொழி ஊக்குவிக்கப்படுகிறது.
இந்த மேக விதைப்பு முறையானது இருவகையான மேகங்களில் பயன்படுத்தப்படுகிறது. அவ்வகை மேகங்கள : குளிர்ந்த மேகங்கள. இளஞ்சூடான மேகங்கள.

குளிர்ந்த மேகங்களில் விதைப்பு முறை : இந்த வகை மேகங்களில் இருமுறைகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.

உலர் பனிக்கட்டி முறை : இம்முறையில் உலர் பனிக்கட்டி (திட கார்பன்-டை-ஆக்ஸைடு) பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், இவை 80o c-ல் ஆவியாகும் திறன்கொண்டது. ஆனால் அவை கரைவதில்லை. பின்வரும் இம்முறை பின்பற்றப்படுகிறது.

மேல்மட்ட மேகங்களில், விமான ஓட்டுக்கள் பயன்படுத்தி உலர் பனிக்கட்டிகள், அதாவது 0.5-1.0 செ.மீ அளவுடைய உலர் பனிக்கட்டிகள் தூவப்படுகின்றது. அவை மேகங்களில், தாள் போன்று படிந்து காணப்படுகின்றது. அவ்வாறு படிந்த உலர் பனிக்கட்டிகள் மழைப்பொழிவை உண்டாக்குகின்றன.

குறைகள் : இம்முறையில் 250 கி உலர் பனிக்கட்டிகள் தேவைப்படுகிறது. எனவே இம்முறை பொருளாதார ரீதியாக பயன்படுவதில்லை. மேலும் இந்த உலர் பனிக்கட்டிகளில் மேகங்களில் விதைக்க அதிக விலையுடைய விமான ஒட்டுக்கள் தேவைப்படுவதால் இம்முறை செலவு மிக்க முறையாகக் கருதப்படுகிறது.

சில்வர்-அயோடைடு முறை : இம்முறையில் சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தி மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது. இம்முறையில் சில்வர்-அயோடைடு புகைவடிவில் மேகங்களில் விதைக்கப்படுகிறது. இந்த சில்வர்-அயோடைடுகளைப் பயன்படுத்தக் காரணம் இந்த சில்வர்-அயோடைடுவின் மூலக்கூறு (அணு) அமைப்பும், உலர் பனிக்கட்டிகளின் அவை அமைப்பும் ஒத்துக் காணப்படுவதே ஆகும்.

நன்மைகள்: இம்முறையில் மிகக்குறைந்த அளவே சில்வர்-அயோடைடு மட்டுமே தேவைப்படுகிறது. இச்சில்வர்-அயோடைடுகளை நிலத்திலிருந்து செலுத்தினாலே போதுமானது.

இளஞ்சூட்டு மேகங்களில் விதைத்தல் : இவ்வகை மேகங்களிலும் இருமுறைகளைப் பயன்படுத்தி செயற்கை மழைப்பொழிவு தோற்றுவிக்கப்படுகிறது.நீர்த்துளி முறை : இம்முறையில் ஒன்றிணைத்தல் முக்கியமான முறையாகக் கருதப்படுகிறது. அதாவது பெரியளவு நீர்த்துளிகள் ஒன்றிணைத்தல் செயலுக்கு முக்கியமானதாக தேவைப்படுகிறது. எனவே, பெரியளவு நீர்த்துளிகள் மேகங்களில் அறிமுகப்படுத்தப்பகிறது. 25 மி.அளவுடைய நீர்த்துளிகள் மேகங்களில் நிரப்பபடுகின்றது. இம்முறையில் சில மணி நேரங்களில் மழை உண்டாகிறது.

பொதுவான உப்பு தொழில்நுட்பம் : இம்முறையில் சாதாரண உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது 10% திரவ அல்லது திட நிலையில் பயன்படுகிறது. உப்பு மற்றும் சோப்பு கலந்த கலவையும் சில சமயங்களில் பயன்படுகிறது. இக்கரைசலானது நிலத்திலிருந்து விசைத்தெளிப்பான் கொண்டு மேகங்களில் தெளிக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்