முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெனிசுலா மீதான தாக்குதல் ரத்து அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 9 ஜனவரி 2026      உலகம்
Trump

நியூயார்க், வெனிசுலா மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த இரண்டாவது தாக்குதலை ரத்து செய்ததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவையும் அமெரிக்க படையினர் கைது செய்தனர். இந்த நிலையில், வெனிசுலா மீது மீண்டுமொரு தாக்குதல் நடத்தத் திட்டமிருந்ததாகவும், அதனைத் தற்போது ரத்து செய்வதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த அறிவிக்கையில் ட்ரம்ப், "வெனிசுலா சமாதானத்தைத் தேடும் விதமாக, ஏராளமான அரசியல் கைதிகளை விடுவித்து வருகிறது. இது மிகவும் முக்கியமான மற்றும் புத்திசாலித்தனமான நடவடிக்கை. அமெரிக்காவும் வெனிசுலாவும் ஒன்றாக இணைந்து சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக, இது எண்ணெய் மற்றும் எரிவாயு உள்கட்டமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பானது.

வெனிசுலாவின் இந்த ஒத்துழைப்பின் காரணமாக, அவர்கள் மீது திட்டமிட்டிருந்த இரண்டாவது அலை தாக்குதல்களை ரத்து செய்துள்ளேன். இனி அது தேவையில்லை என்று தோன்றுகிறது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக அனைத்து கப்பல்களும் இருக்கும். குறைந்தபட்சம் 100 பில்லியன் டாலர், பெரிய எண்ணெய் நிறுவனத்தால் முதலீடு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து