முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளை ஆர். பார்த்திபன் எம்.பி வழங்கினார்

செவ்வாய்க்கிழமை, 28 பெப்ரவரி 2017      தேனி
Image Unavailable

தேனி -; மறைந்த முதல்வர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 69வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஒ.பி.எஸ் ஆதரவாளர்கள் சார்பில்  ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் தேனி-அல்லிநகரம் எம்.ஜி.ஆர் திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் வழக்கறிஞர் கிருஷ்ணகுமார் வரவேற்றார்.   முன்னாள் கம்பம் நகர்மன்ற தலைவர் டி.டி.சிவக்குமார், முன்னாள் எம்.பி எஸ்.பி.எம்.சையதுகான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  தேனி பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன் தலைமை தாங்கி ஏழை எளியோருக்கு தேய்பு பெட்டி, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது அதிமுகவை நிறுவிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில், புரட்சித்தலைவி அம்மா அவர்கள் வழிகாட்டுதலில் ஒ.பி.எஸ் அவர்கள் வர்தா

புயல், ஜல்லிக்கட்டு பிரச்னையில்  அவருடைய அணுகுமுறையால் பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் தங்களின் முழுமையான ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர். மக்களின் கருத்துப்படி நானும் அவரை ஆதரிக்கின்றேன. ஆனால எனக்கு மிரட்டல் வருகிறது. ஆனால் எதற்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. ஏனென்றால் மக்களும், தொண்டர்களும் எங்கள் பக்கம் இருக்கிறார்கள். விரைவில் இரட்டை இலையும், கழகமும் எங்கள் வசமாகும் என்பதற்கு இங்கே கூடியிருக்கின்ற பெருங்கூட்டமே சாட்சி என்றார்.

மேலும் மக்களை நேரடியாக சந்திக்க ஒ.பி.எஸ் அவர்கள் விரைவில் இங்கு வரவுள்ளார்கள் அவருக்கு உங்களின் பெருவாரியான ஆதரவை தாருங்கள் என்றார். இவ்விழாவில் கூடலூர் நகர செயலாளர் சோலைராஜ், பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற தலைவர் ஒ.ராஜா,  தேனி நகர மகளிர் அணி செயலாளர் ராமுத்தாய், தேனி நகர அம்மா பேரவை தலைவர் அய்யப்பன், பெரியகுளம் நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, கூட்டுறவு சங்க இயக்குநர்கள் அன்பு மற்றும் ரெங்கநாதன், கார்த்திக், கிருஷ்ணபிரபா, விஷக்குட்டிசேகர், ராஜவேல், கவியரசன் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை வழக்கறிஞர் கிருஷ்ணகுமார், மணவாளன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago