முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

100 நாள் வேலைத்திட்ட பெயரை மாற்ற பார்லி., மக்களவையில் புதிய மசோதா அறிமுகம்: திரும்பப்பெற தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      இந்தியா
Parlimanet 2024-06-30

புதுடெல்லி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்டத்தின் பெயரை ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என மாற்றும் மசோதா நேற்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை திரும்பப்பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த மசோதாவை மத்திய வேளாண் அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் மக்களவையில் அறிமுகப்படுத்தினார். விக்சித் பாரத் வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்துக்கான உத்தரவாத திட்டம் (கிராமப்புறம்)அதாவது ‘விபி-ஜி ஆர்.ஏ.எம்.ஜி’ என இந்த மசோதாவுக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த மசோதாவுக்கு எதிராக மக்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, ‘‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் கடந்த 20 ஆண்டுகளாக கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கி அவர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி வருகிறது. இது மிகவும் புரட்சிகரமான சட்டம். இந்த சட்டம் இயற்றப்பட்டபோது அவையில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இதை ஒப்புக்கொண்டன. ஏழைகளிலும் ஏழைகளுக்கு இது 100 நாள் வேலைவாய்ப்பை வழங்குகிறது.

இந்த மசோதா, வேலைவாய்ப்புக்கான சட்டப்பூர்வ உரிமையை பலவீனப்படுத்துகிறது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை​வாய்ப்பு உறுதித் திட்​டத்​துக்கான மானியங்களில் 90 சதவீதம் மத்திய அரசு வழங்கி வந்தது. ஆனால், இந்த மசோதாவின் கீழ் பெரும்பாலான மாநிலங்கள் 60 சதவீதம் நிதியை மட்டுமே பெறும். இது மாநில அரசுகளின் பொருளாதாரத்தில் பெரும் சுமையை ஏற்படுத்தும். இந்த மசோதா மத்திய அரசின் கட்டுப்பாட்டை அதிகரிக்கிறது. அதேநேரத்தில் அதன் பொறுப்பைக் குறைக்கிறது.

இந்த மசோதா வேலை நாட்களை 100-ல் இருந்து 125 நாட்களாக உயர்த்துவது குறித்து பேசுகிறது. ஆனால், ஊதிய உயர்வு குறித்து குறிப்பிடவில்லை. ஒவ்வொரு திட்டத்தின் பெயரையும் மாற்றுவதில் அரசாங்கத்துக்கு இருக்கும் வெறி எங்களுக்குப் புரியவில்லை. இந்த மசோதாவை விவாதம் இல்லாமல் நிறைவேற்றக் கூடாது. இந்த மசோதவை திரும்பப் பெற்று அதற்குப் பதிலாக புதிய மசோதா நிறைவேற்றப்பட வேண்டும். இந்த மசோதாவை முழுமையாக ஆய்வு செய்ய பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்’’ என வலியுறுத்தினார். இந்த மசோதாவை எதிர்த்துப் பேசிய திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு, இந்த மசோதா மூலம் தேசப்பிதா கேலி செய்யப்படுகிறார் எனக் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து