முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எதிர்க்கட்சித் தலைவர்களை பழிவாங்குவதற்காக மத்திய முகமைகளை தவறாக பயன்படுத்துவது அம்பலம்: மத்திய பா.ஜ.க. அரசுக்கு மீது முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 16 டிசம்பர் 2025      தமிழகம்
Stalin 2022 12 29

சென்னை, நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக மத்திய பா.ஜ.க. அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நேஷனல் ஹெரால்டு பணமோசடி வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிறருக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லியில் உள்ள ரோஸ் அவென்யூ நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. மேலும், இது தொடர்பாக மேலதிக விசாரணையைத் தொடருமாறும் அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், “நேஷனல் ஹெரால்டு வழக்குத் தீர்ப்பின் மூலம், எதிர்க்கட்சித் தலைவர்களைப் பழிவாங்குவதற்காக மத்திய பா.ஜ.க. அரசினால் மத்தியப் புலனாய்வு அமைப்புகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதை மீண்டுமொருமுறை நீதித்துறை அம்பலப்படுத்தியுள்ளது. சட்டரீதியான எந்தவொரு முகாந்திரமும் இன்றி, இத்தகைய வழக்குகள் அரசியல் எதிரிகளைத் துன்புறுத்தவும் களங்கப்படுத்தவுமே தொடரப்படுகின்றன.

உண்மையையும் அச்சமின்மையையும் தங்கள் பக்கம் கொண்டுள்ள பாராளுமன்றக் காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எனது சகோதரருமான ராகுல் காந்தி தவறிழைக்காதது நிரூபணமாகியுள்ளது. ஆனாலும், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்பின் மாண்புநெறிகளில் அவர்கள் உறுதியாக நிற்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத பா.ஜ.க. காந்தி குடும்பத்தினரைத் தொடர்ந்து வேட்டையாடுவதில் குறியாக உள்ளது.

பா.ஜ.க.வின் இந்தப் பழிவாங்கும் நோக்கம் நாட்டின் உயர் புலனாய்வு அமைப்புகளின் நம்பகத்தன்மையை மீண்டும் மீண்டும் சிதைத்து, அவற்றை வெறுமனே அரசியல் எதிரிகளை அச்சுறுத்துவதற்கான கருவிகளாகச் சுருக்குகின்றது.” இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து