முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்: இந்தியா பதிலடி தாக்குதல்

திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2017      இந்தியா
Image Unavailable

ஸ்ரீநகர்  - காஷ்மீர் எல்லையில் நேற்று அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் மீது இந்தியா பதிலடி தாக்குதல் நடத்தியது.

தாக்குதல்
காஷ்மீர்  எல்லையில் இந்திய நிலைகள்  மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து  அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நேற்று காலை  8 மணி அளவில்  காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் நவுசரா என்ற இடத்தில் இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. தானியங்கி ஆயுதங்கள், மற்றும்  கையெறி குண்டு களை வீசினர். இதனால் அங்கு பதட்டமும்,  பரபரப்பும் ஏற்பட்டது.

பதிலடி
இதற்கிடையே அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ் தான் ராணுவத்துக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர்.  துப்பாக்கி சண்டையிலும் ஈடுபட்டனர்.பாகிஸ்தான் தொடர்ந்து போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. இந்த மாதத்தில் இது 6-வது முறை நடை பெற்ற விதி மீறலாகும். கடந்த 3-ம் தேதி ரஜோளி மாவட்டம் பலாகோட் பகுதியில் மோட்டார் குண்டுகள் வீசப்பட்டன. 4-ம் தேதி பீம்பர்காலி பகுதியில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், 8-ம் தேதி எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதி யிலும் துப்பாக்கி சூடு  நடத் தியது.பூஞ்ச் பகுதியில் கடந்த  1-ம் தேதி பாகிஸ்தான்  ராணுவம் நடத்திய   தாக்குதலில் இந்திய ராணுவ அதிகாரி சனாயம்மா சாம் என்பவர்  உயிரிழந்தார். 9-ம் தேதி பூஞ்ச் பகுதியில் நடந்த தாக்குதலில் ராணுவ வீரர் தீபக் ஜெகநாத் காத்ஜ் மரணம் அடைந்தார்.

228 தடவை ...
கடந்த ஆண்டு  மட்டும் எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் 228 தடவை போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உள்ளது. அதே நேரத்தில் சர்வதேச எல்லையில் 221 தடவை போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago