முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு ஒரே நாளில் 8 மாத அகவிலைபடி நிலுவைத்தொகை வழங்கப்படும்: அமைச்சர் விஜயபாஸ்கர்

வெள்ளிக்கிழமை, 12 மே 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை, அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு எட்டுமாத அகவிலைப்படி நிலுவைத்தொகை ஒரே நாளில் உடனடியாக வழங்கப்படுகிறது என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில், மாநகர் போக்குவரத்துக் கழகம், பல்லவன் சாலையில் உள்ள தலைமைஅலுவலகத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்துள்ள 46தொழிற்சங்கங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்தை நேற்று முன்தினம் நடைபெற்றது. 8ம்தேதி கூட்டுக்குழு பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கான பணப்பலன்களை வழங்கமுதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முதற்கட்டமாக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு வழங்கியுள்ளதை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தினை விலக்கிக் கொள்ளுமாறு போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.

அனைத்து 46 தொழிற்சங்கங்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைக் கூட்டம் மாண்புமிகுபோக்குவரத்துத்துறை அமைச்சர் .எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில்சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகக் கூட்டரங்கில் மீண்டும் 11.ம்தேதி நடைபெற்றது. இக்கூட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சர் அவர்கள்,எப்பொழுதும் போக்குவரத்து நலனில் அக்கறையுடன் செயல்படும் அம்மாவின் வழியில்செயல்படும் அரசு தொழிற்சங்கங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்கஓய்வூதியதாரர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நிலுவையில் உள்ள பணப்பலன்களைவழங்கிட முதற்கட்டமாக ரூ.750 கோடி நிதி ஒதுக்கீட்டினை, முதலமைச்சர்வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளார் என்பதனையும், போக்குவரத்துத் துறைக்கு ஒரேதவணையாக ரூ.750 கோடி வழங்கப்படுவது இதுவே முதன் முறை என்பதையும்தெரிவித்தார். எனவே, தொழிற்சங்கள் இதனை ஏற்று வேலைநிறுத்தத்தினை கைவிடவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மே 2015 வரை ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்கவேண்டியபணிக்கொடை, வருங்கால வைப்புநிதி ஆகியவை உடனடியாக வழங்க சுமார் ரூ.500 கோடிஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்படும்.மேலும், ரூ.250 கோடியில், தற்போது பணியிலுள்ள போக்குவரத்துத்தொழிலாளர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை, ஜனவரி 2016 முதல் மார்ச் 2016
மற்றும் ஜூலை 2016 முதல் நவம்பர் 2016 ஆகிய எட்டு மாதங்களுக்கு இன்றே (12.ம்தேதி வழங்கப்படும். மேலும், நிதிநிலையினை சீர்செய்யவும், போக்குவரத்துத் தொழிலாளர்களின்பணப்பலன்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago