முக்கிய செய்திகள்

இனிப்பு நோயின் கசப்பான வாழ்க்கை

வெள்ளிக்கிழமை, 19 மே 2017      மருத்துவ பூமி
bigstock-Doctor

Source: provided

சர்க்கரை நோய் என்று கூறப்படும் நோயின் பெயர் என்னவோ இனிப்பாக இருந்தாலும், அதனால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கை கசப்பாகத்தான் இருக்கிறது. இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இறக்கின்றனர். தமிழகத்தில் மட்டும் பத்தில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கிறது. தென்னிந்திய மக்களை அதிகம் பாதிக்க காரணம், உணவு முறை மாறுபாட்டாலும், உடற்பயிற்சி இல்லாததாலும், பரம்பரை வியாதியாகவும் சர்க்கரை நோய் உள்ளது.

பொதுவாக சர்க்கரை நோய் தாக்கிய சில வருடங்கள் (4&6 வருடங்கள்) பின்னரே அதன் பாதிப்பு முழுமையாக தெரிய வரும். அதாவது கணையத்தில் பீட்டா செல்லின் செயல்பாடு குறைந்து, இன்சுலின் சுரப்பது படிப்படியாக குறையும். இதனால் சிலருக்கு தாமதமாக சர்க்கரை நோய் இருப்பது தெரியவரும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளியில் ரத்த பரிசோதனை செய்வது அவசியம். சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) மூன்று வகைப்படும்.

முதலாவது வகை : இன்சுலின் டிபணன்ட் டயாபடிக்ஸ் மெலட்டிஸ். குழந்தைகள், சிறுவர், சிறுமிகள், இளம்பருவத்தினர் ஆகியோருக்கு ஏற்படுகின்றது. இவர்களது இன்சுலின் சுரப்பிகள் இன்சுலின் சுரக்கும் தன்மையை முற்றிலும் இழந்திருக்கும். இவர்களுக்கு இன்சுலின் கொண்டு சிகிச்சை அளிக்கவேண்டும்.

இரண்டாவது வகை : டைப்&2 நான் இன்சுலின் டிபணன்ட் டயாபட்டிக்ஸ் மெலிட்டஸ்.  இன்சுலின் சுரப்பிகள் போதிய அளவு இன்சுலின் சுரக்காததாலோ ஏற்படும். வயதானவருக்கு இது வரும்.

மூன்றாவது வகை : கர்ப்ப கால சர்க்கரை நோய் 2% முதல் 4% பெண்களுக்கு கர்ப்ப காலத்தில்போது ஏற்படுகிறது. குழந்தை பிறந்தவுடன் இது மறைந்து விடுகிறது. பிற்பாடு வாழ்க்கையில் குழந்தைக்கும் தாய்க்கும் உண்டாகும் வாய்ப்பை அதிகரிக்கக் கூடும்.

பொதுவாக 35 வயதைக் கடந்தவர்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்வது நல்லது. வெறும் வயிற்றில் 110 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். சாப்பிட்டு 2 மணி நேரம் கழித்து 140 மில்லிக்கு குறைவாக இருக்க வேண்டும். குடும்பத்தில் (பரம்பரை) யாருக்காவது இருந்தால் 30 வயதுக்கு மேல் ஆண்டுக்கு ஒரு முறை பரிசோதனைª சய்து கொள்வது அவசியம். நடைபயிற்சி செலவில்லாத சிறந்த மருத்துவம். தினமும் 45 நிமிடங்கள் நடந்தால் சர்க்கரை நோய் வர வாய்ப் பில்லை. (முதல் 10 நிமிடங்கள் வார்ம்அப்,  கடைசி 10 நிமிடம் கூல்டவுன் இல்லாமல் 45 நிமிடங்கள் நடக்க வேண்டும்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள்  :  உடல் சோர்வு, அதிக பசி, அடிக்கடி தாகம், மிக வேகமாக எடை குறைதல், அடிக்கடி சிறுநீர் கழிப்பது, கண்பார்வை குறைபாடு, ஆறாத புண், பாதங்களில் உணர்ச்சி குறைவு அல்லது எரிச்சல்.

சர்க்கரை நோயினால் உண்டாகும் பாதிப்புகள்

பக்கவாதம், சிறுநீரக நோய் கோளாறு, மாரடைப்பு, கண் நரம்பு பாதிப்பு

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த இரண்டு எளிய வழிகள்

மறக்காமல் மருந்து எடுத்துக் கொள்வது, வாழ்க்கை முறை மாற்றம், முறையான, உணவு, உடற்பயிற்சி. எச்பிஏசி & கடந்த 3 மாதங்களாக சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 6% இருந்தால் நார்மல், 6% முதல் 7% வரை நல்ல கன்ட்ரோல், 7% முதல் 8% வரை பேர் கன்ட்ரோல், 8% முதல் 10% வரை அன் சாட்டிஸ்பக்டரி கன்ட்ரோல், 10% அதிகமாக இருந்தால் மோசமான நிலையில் உள்ளது.

காய்கறிகள் தவிர்க்க வேண்டியவை: பீட்ரூட், காரட், வாழைக்காய் மற்றும் கிழங்கு வகைகள். மற்ற காய்கறிகள் அளவோடு சாப்பிட வேண்டும். வெந்தயக் கீரை இரவில் ஊறவைத்து காலையில் மசித்து நீரை குடித்து வர சர்க்கரை நோய் குறையும்.

பழங்கள் தவிர்க்க வேண்டியவை : மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம், சப்போட்டா, பேரிச்சை மற்ற பழங்கள் அளவோடு சாப்பிட வேண்டும். பாதாம் பருப்பு தினமும் 4 சாப்பிட சர்க்கரை நோய் குறையும். ஆளிவிதை, கம்பு, கேழ்வரகு, சாமை, கோதுமை, அதிகமாக சேர்க்கலாம். தினை, குதிரைவாலி அரிசியில் சமைத்து சாப்பிடலாம். இதை ஒரு வேளை சாப்பாட்டில் சேர்க்கலாம்.

கோவக்காய் : கோவக்காயை தினமும் சமைத்து சாப்பிட்டால் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம். இது நார்ச்சத்து நிரம்பியது. பச்சையாகவும் சாப்பிடலாம். தினமும் 50 கிராம் கோவக்காய் சாப்பிட்டால் சர்க்கரை நோய் குறையும் என்று ஆய்வில் கண்டுபி டிக்கப்பட்டுள்ளது.

கறிவேப்பிலை : வைட்டமின் ஏ, பி, பி2, சி, கால்சியம் இரும்புச்சத்து போன்றவை கறிவேப்பிலையில் நிறைந்துள்ளது. கறிவேப்பிலையைத் தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக வெறும் வயிற்சில் 15 இலையை சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் கரையும். சர்க்கரை நோய் அளவு சீராக இருக்கும். இதய நோயிலிருந்து காக்கப்படும்.

சோம்பு டீ : தினமும் 1 டம்ளர் நீரை பாத்திரத்தில் ஊற்றி, 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து நன்கு கொதித்ததும் இறக்கி, சிறிது நேரம் கழித்து வடிகட்டி வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உயர் இரத்த அழுத்தம் குறையும். சிறுநீரக பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம். தினமும் குடித்துவர சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

சர்க்கரை நோயால் ஏற்படும் தோள்பட்டை வலி :  சர்க்கரை நோயால் தோள்பட்டை வலி பாதிப்பு அதிகரித்துக் கொண்டு வருகிறது. அவர்களது அன்றாட வேலையைக் கூட செய்ய முடியாமல் போகிறது. முந்தையமருததுவ முறையின் மூட்டுகள் ஊசியை (ஸ்டீராய்டு) உட்செலுத்தி வலியை குறைப்பார்கள். நாளடைவில் இதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளின் தீவிரம் கண்டு சமீபகாலமாக இயன்முறை மருத்துவரின் சிகிச்சையால் பக்க விளைவு இல்லாமல் குணம் அடைகிறார்கள். நரம்பு சம்பந்தமாக கால்கள் மருத்துப்போதல். உடலின் இயக்கம் அனைத்திற்கும் வாழ்க்கை முறை மாற்றத்திற்கும் அனைத்து விதமான வலிகளுக்கும் இயன்முறை மருத்துவம் ஒரு நல்ல வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

சர்க்கரை நோயின் மூன்று வகைகளை யும் ஆயுர்வேத மருந்து உட்கொள்வதால் இன்சுலின் போடாமல் மருந்து சாப்பிடுவ தினால் கட்டுக்குள் சர்க்கரை வியாதியை வைக்கலாம். இப்பொழுது மாத்திரை வடிவில் ஆயுர்வேத மருந்து வந்துவிட்டது. எவ்வித சிரமம் இல்லாமல் சாப்பிடலாம்.

90 நாட்களில் நிரந்தர தீர்வு இயன்முறை மருத்துவத்தாலும், ஆயுர்வேத மருந்துகளாலும் பெறலாம். இரண்டுமே பக்க விளைவுகள் இல்லாமல் நமக்கு குணப்படுத்துகிறது. வேரியஸ் வெயின் என்னும் வியாதியைகூட நிச்சயம் 3 மாதத்தில் குணப்படுத்த முடியும்.

டாக்டர் எஸ்.தீபா தங்கம்

இதை ஷேர் செய்திடுங்கள்: