முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ 3 லட்சம் நிதி உதவி - முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு

செவ்வாய்க்கிழமை, 6 ஜூன் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 7 போலீசார் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கோயம்புத்தூர் ...

இது குறித்து முதல்வர் எடப்பாடி மு.பழனிசாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த சுப்பிரமணி உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியையும்; திருச்சிராப்பள்ளி மாநகரம், தில்லைநகர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த சாமிகண்ணு உடல் நலக் குறைவால்காலமானார் என்ற செய்தியையும்; சென்னை பெருநகர காவல், செம்பியம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த பலராமன் சாலை விபத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும்; விருதுநகர் மாவட்டம், ஆலங்குளம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த. குருசாமி உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியையும்;

கிருஷ்ணகிரி ....

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி நகர காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த நடராஜன் நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார் என்ற செய்தியையும்; ராமநாதபுரம் மாவட்டம், நயினார்கோவில் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த. செல்வராஜ் பணியின் போது நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தியையும்; திண்டுக்கல் மாவட்டம், தாடிகொம்பு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து வந்த ராஜசேகர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

நிதியுதவி

இந்த துயரச் சம்பவங்களில் உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சுப்பிரமணி, தலைமைக் காவலர் சாமிகண்ணு, சிறப்பு உதவி ஆய்வாளர் .பலராமன், தலைமைக் காவலர் என்.குருசாமி, சிறப்பு உதவி ஆய்வாளர் நடராஜன், உதவி ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் ஆர். ராஜசேகர் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.மேற்கண்ட நிகழ்வுகளில் உயிரிழந்த 7 காவலர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 2 months 3 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 3 months 2 weeks ago
மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 4 months 1 week ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago இரத்தத்தை சுத்தம் செய்து சுறுசுறுப்பாக்க - சித்த மருத்துவ குறிப்புக்கள் | இரத்தம் சுத்தமாக | ரத்த சோகை | புதிய ரத்தம் உருவாக | இரத்தத்தை சுத்தப்படுத்த 4 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து