முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆட்டுக்குட்டிகளுக்கான தீவன பராமரிப்பு

புதன்கிழமை, 21 ஜூன் 2017      வேளாண் பூமி
Image Unavailable

Source: provided

ஆட்டுக்குட்டிகளுக்கான தீவன பாராமரிப்பு முக்கியதுவம் வாய்ந்தாகும். தீவனமே ஆட்டுக்குட்டிகளை நோய் தாக்குதலிருந்து காப்பாற்றுவதோடு நல்ல நிலையில் அதன் வளர்ச்சிக்கு உதவுகிறது. தீவனம் பல வகைபட்டது.   தானிய வகைத் தீவனப்பயிர்கள்   இவ்வகைத் தீவனப்பயிர்களில் அதிக அளவு மாவுச்சத்தும், ஓரளவு புரதச்சத்தும் உள்ளன. இவ்வகையில் தீவனச்சோளம் கோ- எப்-எஸ்-29, மக்காச்சோளம், கம்பு, கேழ்வரகு ஆகியன முக்கியமானது ஆகும். 

புல்வகைத் தீவனப்பயிர்கள் :  இவ்வகைகளில் அதிக அளவு மாவுச்சத்தும் ஓரளவு புரதச்சத்தும் உள்ளன.  இவ்வகையில் கம்பு நேப்பியர் ஒட்டுப்புல் (கோ-4), கொளுக்கட்டை புல், கினியாப்புல், மயில் கொண்டைப்புல் ஆகியன முக்கியமானது ஆகும்.  இவ்வகையில் புரதச்சத்து உலர்பொருள் அடிப்படையில் 5 லிருந்து 10 சதவீதம் வரை உள்ளது. 

பயிர்வகைத் தீவனப்பயிர்கள் :  இவ்வகையில் அதிக புரதச்சத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்துள்ளன.  இவ்வகையில் வேலி மசால், குதிரைமசால், தீவனத் தட்டைப்பயறு, தீவன சோயா மொச்சை, கொள்ளு மற்றும் நரிப்பயறு ஆகியன முக்கியமானவை.  பயறு வகைப் பசுந்தீவனங்களை புல் வகைத் தீவனங்களுடன் கலந்து ஆடுகளுக்குக் கொடுப்பது அடர் தீவனத்தை கொடுப்பதற்குச் சமமானது.
 
பசுந்தீவனம் கொடுக்கும் அளவு  :  வளரும் ஆட்டுக்குட்டிகளுக்குத் தினந்தோறும் ½ கிலோ முதல் 1 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும்.  சுமார் 20 லிருந்து 40 கிலோ எடையுள்ள வெள்ளாடுகளுக்குத் தினந்தோறும் 1 கிலோ முதல் 2 கிலோ வரை பசுந்தீவனம் தேவைப்படும்.

அடர் தீவனக்கலவையை நாள் ஒன்றுக்கு, வளரும் இளம் ஆடுகளுக்கு 100 கிராமும், பெரிய ஆடு மற்றும் சினை ஆடுகளுக்கு 250 கிராமும், பொலி கிடாகளுக்கு 400 கிராமும் கொடுக்கவேண்டும். 

உலர் தீவனம் : வெள்ளாடுகளுக்கு உலர் தீவனமாக சோளத்தட்டு, கடலைக்கொடி, கொள்ளு மற்றும் நரிப்பயறு போன்ற காய்ந்த பயறு வகை தீவனங்களை அளித்திடலாம்.  இதனை மானாவாரி நிலங்களில் பருவ மழை காலங்களில் விதைத்து பூக்கும் தருணத்தில் அறுவடை செய்து உலர வைத்து சேகரித்து வைப்பதன் மூலம் மேய்ச்சல் குறைந்த கோடை காலங்களில் ஆடுகளுக்கு அளித்திடலாம்.

நோய்கள் பராமரிப்பு : வெள்ளாடுகளை,  அடைப்பான், தொண்டை அடைப்பான், நிமோனியா, டெட்டானஸ் மற்றும் துள்ளுமாரி நோய் போன்ற நுண்ணுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்களும், ஆட்டம்மை, கோமாரி, ஆட்டுக்கொல்லி நோய் மற்றும் நீல நாக்கு நோய் போன்ற நச்சுயிர் கிருமிகளால் உண்டாகும் நோய்களும் தாக்குகின்றன.  இந்நோய்களை தடுக்க ஆண்டு தோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பும், கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்பும் தடுப்பூசி போட்டுவிட வேண்டும்.


 
குடற்புழு தாக்கம் :  ஆடுகளை தட்டைப்புழு, நாடாப்புழு மற்றும் உருண்டைப்புழு போன்ற மூன்று வகையான குடற்புழுக்கள் தாக்குகின்றன.  இந்நோய் கண்ட ஆடுகளில் வயிற்றுப்போக்கு, இரத்தசோகை வளர்ச்சியின்மை மற்றும் தாடை வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படும்.  இந்த குடற்புழு தாக்கத்தை சாண பரிசோதனை செய்வதன் மூலம் கண்டறியலாம்.

குடற்புழு நீக்கம்  :  பொதுவாக மூன்று மாத இடைவெளியில் ஒரு வருடத்திற்கு நான்கு முறை கால்நடை மருத்துவரின் ஆலோசனையுடன் அந்தந்த இடத்திற்கும் மற்றும் புழுக்களின் பாதிப்பிற்கேற்றவாறும் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும்.

1. பருவமழை தொடங்கும் முன்பு ஒரு முறையும் (ஏப்ரல் முதல் ஜீன்)

2. பருவமழையின் போது ஒரு முறையும் (ஜீலை முதல் செப்டம்பர்)

3. பருவமழைக்கு பின்னால் இரு முறையும் (அக்டோபர் முதல் டிசம்பர் மற்றும் ஜனவரி முதல் மார்ச்)

ஆறு மாதம் வரை ஆட்டுக்குட்டிகளுக்கு மாதம் ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். 

ஆறு மாதத்திற்கு பிறகு மூன்று மாதங்களுக்கு ஒரு முறையும் கொடுக்க வேண்டும்.

ஜனவரி முதல் மார்ச் தட்டைப்புழுக்களுக்கான மருந்து

ஏப்ரல் முதல் ஜீன் உருண்டைஃநாடாப்புழுக்களுக்கான மருந்து

ஜீலை முதல் செப்டம்பர் தட்டைப்புழுக்களுக்கான மருந்து

அக்டோபர் முதல் டிசம்பர் உருண்டைஃநாடாப்புழுக்களுக்கான மருந்து.

மேற்கூறிய வழிமுறைகளில் இனங்கள் தேர்வு செய்து, தொழில்நுட்ப ரீதியான இனப்பெருக்க மேலாண்மை, தீவன மேலாண்மை மற்றும் நோய்கயை கட்டுப்பாடுகளை கையாழுவதன் மூலம் அதிக குட்டிகள் பெற்று அதிக இலாபம் அடைய முடியும். மேலும் விவரங்களுக்கு உங்களது அருகில்லுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையங்களிலும் வேளான் அறிவியல் மையங்களிலும் அல்லது உழவர் பயிற்சி மையங்களில் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்புக்கு: கால்நடை மருத்துவத் துறை, கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஒரத்தநாடு – 614 625, தஞ்சாவூர் மாவட்டம்.
தொகுப்பு: மரு.மு.வீரசெல்வம், மரு.சோ.யோகேஷ்பிரியா, மரு.கோ.ஜெயலட்சுமி, மரு.சு.கிருஷ்ணகுமார் மற்றும் முனைவர் ப. செல்வராஜ்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து