முதல்வரின் ஆட்சி தொடரவேண்டும்: நான் சிலிப்பர் செல் இல்லை: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

திங்கட்கிழமை, 9 அக்டோபர் 2017      அரசியல்
sellur k raju

திருச்சி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடரவேண்டும் என்றும் நான் சிலிப்பர் செல் இல்லை என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் செல்லூர் ராஜூ  நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மதுரையில் நடந்த ஒரு அரசு விழாவில் நிருபர்கள் சசிகலாவால்தான் இந்த ஆட்சி அமைந்ததா என்று கேட்டார்கள். அதற்கு எனது மனசாட்சிப்படி பதில் அளித்தேன். ஆனால், ஊடகங்கள் தான் அதை பெரிதுபடுத்தி விட்டன. நான் சிலிப்பர் செல் இல்லை. அதுதான் உண்மை. யாருக்கும் சிலிப்பர் செல்லாக இருக்க மாட்டேன். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவர் பூரண குணமடைந்து அவர் வரவேண்டும் என்பதற்காக நான் பல்வேறு பிரார்த்தனைகள் செய்தேன். (இவ்வாறு நா தழுதழுக்க கூறினார்.)

முதல்வர் பழனிசாமி அரசு ஜெயலலிதாவின் லட்சியத்தை மெய்ப்பிப்பதாக இருக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. துணை முதல்வரும் சிறப்பாக ஆட்சி செய்து வருகிறார். முதல்வரின் ஆட்சி தொடரவேண்டும்.
இவ்வாறு அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து