முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆபரேஷன் சிந்தூரின் போது 3 எதிரிகளை எதிர் கொண்டோம்: ராணுவ துணை தலைமை தளபதி

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      இந்தியா
Rahul-R -Singh-2025-07-04

புதுடெல்லி, ஆபரேஷன் சிந்தூரின் போது ஒரு எல்லையில் பாகிஸ்தான், சீனா, துருக்கி என 3 எதிரிகளை எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்று ராணுவத் துணைத் தலைமை தளபதி ராகுல் ஆர். சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு  ஏற்பாடு செய்த புதுயுக ராணுவ தொழில்நுட்பங்கள் நிகழ்ச்சியில் உரையாற்றிய ராகுல் ஆர் சிங், "இந்தியா ஒரு எல்லையில் (பாகிஸ்தான் எல்லை) இரண்டு எதிரிகளை (பாகிஸ்தான், சீனா) கொண்டுள்ளது. உண்மையில் மூன்று எதிரிகள் (பாகிஸ்தான், சீனா, துருக்கி). போரில் பாகிஸ்தான் முன்னணியில் இருந்தது. சாத்தியமான அனைத்து உதவிகளையும் சீனா வழங்கியது.

பாகிஸ்தான் கடற்படையில் 81% சீன வன்பொருட்களே (ஹார்டுவேர்) உள்ளன. முழு ராணுவ நடவடிக்கையின் போது வான் பாதுகாப்பு எவ்வாறு செயல்பட்டது என்பது முக்கியமானது. நமக்கு வலுவான வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் அவசியம்.

பாகிஸ்தானுக்கு அதிக ஆதரவை வழங்குவதில் துருக்கி முக்கியப் பங்கு வகித்தது. அவர்கள் பைரக்தார் உள்ளிட்ட ஏராளமான ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு வழங்கினர். 

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் உள்கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் பாராட்டுக்குரியவை.  இலக்குகள் மீது மட்டும் தாக்குதல் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்ட சில மணி நேரங்களில் தாக்குதல் நடத்தப்பட்டது.  

ராணுவம் தனது இலக்கை எய்தும்போது, அது தனது தாக்குதலை நிறுத்த முயற்சிக்க வேண்டும். ஏனெனில், போரை தொடங்குவது எளிது, அதை நிறுத்துவது மிகவும் கடினம். எனவே, சரியான நேரத்தில் போரை நிறுத்துவதற்கும் திட்டமிட்டு நடத்தப்பட்ட மிகவும் திறமையான தாக்குதல் இது என்று நான் கூறுவேன்" என தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago
View all comments

வாசகர் கருத்து