எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்கும் 2-வது உலக சாம்பியன்ஸ் ஆப் லெஜெண்ட்ஸ் லீக் தொடர் வரும் 18-ம் தேதி தொடங்க உள்ளது. இதில் நடப்பு சாம்பியன் இந்தியா, இங்கிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் பரம எதிரியான பாகிஸ்தானை 20-ம் தேதி எதிர்கொள்கிறது. அதன்பின் 22-ம் தேதி தென் ஆப்பிரிக்காவையும், 26-ம் தேதி ஆஸ்திரேலியாவையும், 27-ம் தேதி இங்கிலாந்தையும், 29-ம் தேதி வெஸ்ட் இண்டீசையும் எதிர்கொள்கிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங் தலைமையிலான அந்த அணியில் ஷிகர் தவான், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங் போன்ற நடத்திர வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய அணி : யுவராஜ் சிங் (கேப்டன்), ஷிகர் தவான், ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, இர்பான் பதான், யூசுப் பதான், ஹர்பஜன் சிங், பியூஷ் சாவ்லா, ஸ்டூவர்ட் பின்னி, குர்கீரத் மான், வினய் குமார், சித்தார்த் கவுல், வருண் ஆரோன், அபிமன்யூ மிதுன் மற்றும் பவான் நெகி.
___________________________________________________________________________________________________________________
பியூ வெப்ஸ்டர் அசத்தல்
பார்டர்-கவாஸ்கர் தொடரில் 5-ஆவது போட்டியில் ஆஸி. அணிக்காக அறிமுகமானார் பியூ வெப்ஸ்டர். 31 வயதாகும் இவர் முதல்தர கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடியதால் ஆஸி. அணியில் இடம் கிடைத்தது. முதல் போட்டியில் முதல் இன்னிங்ஸிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். மிட்செல் மார்ஷுக்குப் பதிலாக அணியில் இடம்பிடித்த இவர் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வருகிறார்.
ஆஸி. அணி தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட்டிலும் அரைசதம் அடித்த வெப்ஸ்டர், இரண்டாவது டெஸ்ட்டில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். 6 போட்டிகளில், குறிப்பிட்டு சொல்லவேண்டுமானால் 9 இன்னிங்ஸ்களில் 4 அரைசதங்களை அடித்து அசத்தியுள்ளார். பியூ வெப்ஸ்டர் 57, 39, 23, 31, 72, 9, 11, 63, 60 என சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 45.63ஆக இருக்கிறது. பந்துவீச்சில் வெப்ஸ்டர் 5 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார். டெஸ்ட்டில் ஒரு நல்ல ஆல்-ரவுண்டராக மிளிரும் வெப்ஸ்டருக்கு ஆஸி. ரசிகர்களிடையே வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
___________________________________________________________________________________________________________________
டெஸ்ட் தொடருக்கு சிக்கல்?
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இந்திய கிரிக்கெட் அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 17ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், தற்போது வங்காளதேசத்தில் நிலவி வரும் அரசியல் சூழல் காரணமாக இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பி.சி.சி.ஐ., வங்காளதேச கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமோ, வங்காளதேச கிரிக்கெட் வாரியமோ இதுதொடர்பான அறிவிப்பை இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. எனினும், இந்த தொடரின் ஒளிபரப்பு உரிமைகள் விற்பனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இந்திய அணி, வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதில் சிக்கல் நிலவுகிறது.
___________________________________________________________________________________________________________________
ஜடேஜாவுக்கு சிறப்பு அனுமதி
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 2ஆவது டெஸ்ட் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்சில் இந்தியா 587 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் (269) விளாசினார். இந்திய அணி வீரர்கள் இணைந்து மொத்தமாகத்தான் ஓட்டலில் இருந்து மைதானத்திற்கு வர வேண்டும் என்பது பி.சி.சி.ஐ.-யின் விதிமுறையில் உள்ளது. ஆனால், ஜடேஜா மட்டும் முன்னதாக மைதானத்திற்கு வர அணி நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. இதற்கு காரணம் பந்து புதியதாக இருந்ததால், நீண்ட நேரம் பயிற்சி மேற்கொண்டால் சந்திக்க எளிதாக இருக்கும் என்பதால் முன்கூட்டியே வந்து பயிற்சி மேற்கொண்டதுதான்.
இதுகுறித்து ஜடேஜா கூறியதாவது:- முன்னதாக மைதானத்திற்கு சென்று கூடுதலாக பேட்டிங் செய்தேன். ஏனென்றால், நான் 2ஆவது நாளில் கூடுதலாக பேட்டிங் செய்ய வேண்டும் என்பதால். ஏனென்றால், பந்து புதிதாக இருந்தது. நியூ பால்-ஐ பார்க்க முடியும் என்றால், இன்னிங்சில் தொடர்ந்து விளையாட அது எளிதாக இருக்கும். இங்கிலாந்தை பொறுத்தவரை நாம் அதிக ரன்கள் அடித்து செட் ஆகிவிட்டோம் என நினைக்க முடியாது. பந்து எந்த நேரத்தில் ஸ்விங் ஆகி எட்ஜ் ஆகும். இவ்வாறு ஜடேஜா தெரிவித்தார்.
___________________________________________________________________________________________________________________
ஆஸி. 286 ரன்களுக்கு ஆல் அவுட்
ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிரெனடாவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெஸ்ட் இண்டீசின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. 110 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
6வது விக்கெட்டுக்கு இணைந்த வெப்ஸ்டர், அலெக்ஸ் கேரி ஜோடி பொறுப்புடன் ஆடி 112 ரன்களை சேர்த்தது. இருவரும் அரை சதம் கடந்தனர். அலெக்ஸ் கேரி 63 ரன்னும், வெப்ஸ்டர் 60 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில், முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 286 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டும், ஜெய்டன் சீல்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
___________________________________________________________________________________________________________________
சுப்மன் கில்லுக்கு பாராட்டு
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். முன்னதாக இந்த ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்திய இந்திய கேப்டன் சுப்மன் கில்லை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த வரிசையில் இந்த தொடருக்கு முன்னதாக சுப்மன் கில்லை விமர்சித்த இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் தற்போது பாராட்டியுள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், "தொடரின் தொடக்கத்தில், அவரது (சுப்மன் கில்) சராசரி 35, அது அவரது தரத்திற்கு போதுமானதாக இல்லை என்று நான் சொன்னேன். இந்தத் தொடரின் முடிவில் அவர் சராசரியாக 45 ரன்களை எடுப்பார் என்று நினைக்கிறேன். அவர் அதனை செய்யாமல் விட மாட்டார். கேப்டனாக சிறப்பாகத் துவங்கியுள்ள அவர் 2 போட்டிகளில் 2 சதங்கள் அடித்துள்ளது அற்புதமானது. 2-வது போட்டியில் சுப்மன் கில் டாஸ் தோற்றது சிறந்தது. கவாஸ்கர் சொன்னது போல சிறந்த கிரிக்கெட் வீரர்கள் ஸ்விங், வேகம் அதிகமாக இல்லாத நல்ல ஆடுகளத்தில் அசத்துவார்கள். அவருடைய கால்கள் நன்றாக நகர்கிறது. அவருடைய டெக்னிக் சிறப்பானதாக இருக்கிறது. இங்கிலாந்தில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற மனநிலையை அவர் கொண்டுள்ளார்" என்று கூறினார்.
___________________________________________________________________________________________________________________
3-வது சுற்றுக்கு சினெர் தகுதி
'கிராண்ட்ஸ்லாம்' என்ற உயரிய அந்தஸ்து பெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீரரான ஜானிக் சினெர் (இத்தாலி), அலெக்சாண்டர் வுகிக் (ஆஸ்திரேலியா) உடன் மோதினார்.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஜானிக் சினெர் 6-1, 6-1 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 3-வது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இவர் 3-வது சுற்றில் பெட்ரோ மார்ட்டினஸ் உடன் மோத உள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா அணு ஆயுத சோதனை மேற்கொண்டது: அமெரிக்கா
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீது தாக்குதல் நடத்திய ஒரு வாரத்தில் சீனா ரகசிய அணு ஆயுத சோதனை மேற்கொண்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்.. மேக் இந்தியா திட்டத்தை மேலும் வலுவாக்குகிறது: பிரதமர் மோடி..!
07 Feb 2026டெல்லி, இந்தியா - அமெரிக்கா இடையேயான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதற்கு அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்கா முழு வரிவிலக்கு அளித்த இந்திய ஏற்றுமதி பொருட்கள் எவை?
07 Feb 2026புதுடில்லி, அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ரத்தினங்கள், வைரங்கள், மருந்துப் பொருட்கள், காபி, வாழைப்பழம் உள்ள
-
தங்கம், விலை மீண்டும் உயர்வு
07 Feb 2026சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 1,360 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 360 ரூபாய்க்கு விற்பனையானது.
-
வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா வெளியிட்ட இந்திய வரைபடம்: பாகிஸ்தான் அதிர்ச்சி
07 Feb 2026நியூயார்க், வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க அரசுத்துறை வெளியிட்ட இந்திய வரைபடம் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது
-
தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தை: டெல்லியில் ராகுல் இன்று ஆலோசனை
07 Feb 2026சென்னை, தமிழக சட்டசபையை முன்னிட்டு தி.மு.க.வுடனான கூட்டணி விவகாரம் குறித்து ராகுல் காந்தி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தம்: ஜூன் வரை கெடு விதித்த அமெரிக்கா: ஜெலன்ஸ்கி
07 Feb 2026கீவ், ரஷ்யா - உக்ரைன் இடையே 4 ஆண்டுகளாக போர் நடைபெற்று வரும்நிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்பாட்டைக் கொண்டுவருவதற்காக ஜூன் மாதம் வரையில் அமெரிக்கா காலக்கெடு
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –07-02-2026
07 Feb 2026 -
இந்தியா மீதான 25 சதவீதம் வரியை ரத்து செய்யும் உத்தரவில் கையெழுத்திட்ட ட்ரம்ப்
07 Feb 2026நியூயார்க், இந்தியா மீதான 25 சதவிகித அபராத வரியை ரத்து செய்யும் உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சனிக்கிழமை கையெழுத்திட்டார்.
-
கோவையில் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டத்தை நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர்
07 Feb 2026கோவை, கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை நாளை (வருகிற 9-ந் தேதி- திங்கட்கிழமை) முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில்
-
டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழப்பவர்களுக்கு விரைவில் ரூ.25,000 இழப்பீடு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
07 Feb 2026மும்பை, டிஜிட்டல் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மொத்த இழப்புத் தொகையின் 85 சதவீதம் வரை வழங்கப்படும்.
-
அ.ம.மு.க. நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கினார் டி.டி.வி.தினகரன்
07 Feb 2026சென்னை, சசிகலாவை சந்தித்த அ.ம.மு.க. நிர்வாகி கட்சியில் இருந்து நீக்கி டி.டி.வி.தினகரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் போட்டி?
07 Feb 2026சென்னை, விக்கிரவாண்டி தொகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி 7.4 சதவீதமாக அதிகரிக்கும்: மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பு
07 Feb 2026டெல்லி, 2025-26 ஆம் ஆண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி (ஜி.டி.பி.) 7.4 சதவிகிதம் அதிகரிக்கும் என மத்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
இனி அரசு ஊழியர்கள் ராஜினாமா செய்தால் ஓய்வூதியம் கிடையாது: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
07 Feb 2026சென்னை, அரசு ஊழியர், மருத்துவ காரணங்களுக்காக ராஜினாமா செய்தால், ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் பெற தகுதியில்லை என சென்னை உயர் நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு த
-
இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு 30 டிரில்லியன் டாலர் மதிப்பிலான சந்தையை வாய்ப்பு கிடக்க உள்ளது: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நம்பிக்கை
07 Feb 2026டெல்லி, இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்ததால் புதிய வேலைவாய்ப்பு உருவாகும் என்றும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், விவசாயிக
-
பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டது: துணை முதல்வர்
07 Feb 2026விருதுநகர், பா.ஜ.க.வின் கிளையாக இருந்த அ.தி.மு.க., தற்போது இலையாக மாறிவிட்டதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
-
தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் தமழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. எம்.பி. கனிமொழி புகழாரம்
07 Feb 2026விருதுநகர், மாற்றத்தைக் கொண்டு வரக் கூடிய ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின்தான் என்றும் தென்னிந்தியாவின் இரும்பு மனிதர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்றும் தி.மு.க. எம்.பி.
-
வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா உள்பட த.வெ.க. விருப்ப மனுவில் கேட்கப்பட்ட 36 கேள்விகள்
07 Feb 2026சென்னை, வழக்குகள் ஏதேனும் இருக்கிறதா என்பது உள்ளிட்ட த.வெ.க. விருப்ப மனுவில் 36 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
-
ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட ட்ரம்ப்..!
07 Feb 2026வாஷிங்டன், ஒபாமா தம்பதியை கேலி செய்து வீடியோ வெளியிட்ட நிலையில் அதிபர் ட்ரம்ப், இவ்விவகாரத்தில் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
-
வார ராசிபலன்
07 Feb 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
07 Feb 2026- இராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மாசி உற்சவாரம்பம். சுவாமி தங்க நந்தி வாகனம். அம்பாள் வெள்ளி அம்ச வாகனம்.
- திருமயம் ஆண்டாள் பவனி
-
இன்றைய நாள் எப்படி?
07 Feb 2026 -
இன்றைய ராசிபலன்
07 Feb 2026


