முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கால்நடை பராமரிப்புத்துறைக்கு ரூ.25 கோடியில் புதிய கட்டிடங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

வெள்ளிக்கிழமை, 4 ஜூலை 2025      தமிழகம்
CM-2-2025-07-04

சென்னை, சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ரூ.25.15 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், முதல்வர்  மு.க.ஸ்டாலின் நேற்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவில் ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டிடம், ஒரு கால்நடை மருத்துவமனை கட்டிடம், 12 கால்நடை மருந்தகக் கட்டிடங்கள், 2 மாவட்ட கால்நடை பண்ணை கட்டிடங்கள், ஒரு நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டிடம் ஆகிய கட்டிடங்களை திறந்து வைத்தார். மேலும், பணிக்காலத்தில் உயிரிழந்த பணியாளர்களின் 208 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும், கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கும் கால்நடைகளை நன்கு பராமரிப்பதற்காகவும், மேம்பட்ட தரமான மருத்துவ சிகிச்சை கால்நடைகளுக்கு அளித்திடவும் கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள், கால்நடை பன்முக மருத்துவமனைகள், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு அலுவலகங்கள், கால்நடைகளுக்கான களக் கண்காணிப்பு அலுவலகங்கள் போன்ற பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கி, கால்நடை பராமரிப்புத் துறை சார்ந்த கட்டிடங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, கால்நடைகளின் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது.

திறந்து வைக்கப்பட்ட கட்டிடங்களின் விவரங்கள்:  கன்னியாகுமரி மாவட்டம், திங்கள் நகரில் ஒரு கோடியே 15 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக் கட்டிடம்,  மயிலாடுதுறை மாவட்டம், மாதானம் கிராமத்தில் 49.50 லட்சம் ரூபாய் செலவிலும், திருவண்ணாமலை மாவட்டம், கோட்டகரம் கிராமத்தில் 54 லட்சம் ரூபாய் செலவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், திருப்பெயர்தக்கா கிராமத்தில் 54 லட்சம் ரூபாய் செலவிலும், தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும், திருநெல்வேலி மாவட்டம், மருதம்புத்தூர் மற்றும் பாப்பன்குளம் கிராமங்களில் 1.18 கோடி ரூபாய் செலவிலும்,தென்காசி மாவட்டம், பன்பொழி மற்றும் வாசுதேவநல்லூர் கிராமங்களில் 1.18 கோடி செலவிலும், புதுக்கோட்டை மாவட்டம், பிள்ளைதண்ணீர்பந்தல் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும், விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை கிராமத்தில் 1.18 கோடி ரூபாய் செலவிலும், இராமநாதபுரம் மாவட்டம், போகளூர் கிராமத்தில் 59 லட்சம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள 12 கால்நடை மருந்தகக் கட்டிடங்களை முதல்வர் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தில் 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருத்துவமனைக் கட்டிடம், நீலகிரியில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவிலும், சிவகங்கையில் 8 கோடியே 70 ஆயிரம் ரூபாய் செலவிலும் கட்டப்பட்டுள்ள மாவட்ட கால்நடை பண்ணை கட்டிடங்கள், சென்னை மாவட்டம், சைதாப்பேட்டையில் 5 கோடியே 95 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள நாய் வளர்ப்பு பிரிவு விரிவாக்க கட்டிடம் என மொத்தம் 25 கோடியே 15 லட்சம் ரூபாய் செலவிலான கட்டிடங்களை முதல்வர்  மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

மேலும் கால்நடை பராமரிப்புத் துறையில் பணியின் போது உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 208 நபர்களுக்கு கருணை அடிப்படையில் கால்நடை பராமரிப்பு உதவியாளர், ஊர்தி ஓட்டுநர் மற்றும் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதல்வர்  மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து