எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
நெய் என்பது தெற்காசிய நாடுகளில் சமையலுக்குப் பயன்படும் தெளிந்த வெண்ணெய் ஆகும். பாற்பொருட்களில் கூடுதல் சுவையையும், நறுமணத்தையும் கொண்டது - நெய். தனியாகப் பிரித்தெடுத்த வெண்ணெய் அல்லது பாற்கொழுப்பை உருக்கும் போது நெய் உருவாகின்றது. வெண்ணெய்யை ஏறத்தாழ 100 பாகை செல்சியசு வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கின்றது. நெய்யானது அதிலுள்ள செம்மியத்தின் அடிப்படையில் வெள்ளை நிறத்திலிருந்து இளம் மஞ்சள் நிறம் வரையான நிறங்களில் காணப்படும்.
நெய்யில் ஏறத்தாழ எட்டு விழுக்காடு அளவில் தாழ்நிலைச் செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் எளிதாகச் செரிக்கிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள் ஆகும். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. நெய், மீன் எண்ணெய் ஆகியவற்றைத் தவிர வேறு எந்தத் தாவர எண்ணெய்யிலும் கொழுப்பிலும் உயிர்ச்சத்து ஏ கிடையாது.
ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது. நெய்யில் உப்பு, பால் வெல்லம் போன்ற சத்துக்கள் கிடையாது. நெய்யில் இலினோலெயிக்கு அமிலம் உள்ளது. இது உடல் பருப்பதைத் தடுக்கிறது. ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
உணவில் நெய்யை சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள்
இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். நெய்யை வளரும் குழந்தைகளுக்கு அதிகம் உணவில் சேர்த்து வந்தால், அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய்ப்படாமல் இருப்பார்கள்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் வைட்டமின் ஏ,டி,ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம்.
நெய்யில் ஆண்டி – ஆக்ஸிடென்ட்கள் மற்றும் கொழுப்பைக் கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். நெய்யானது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும். வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.
நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றாலே அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.
பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்கள் இதற்கு உள்ளாவார்கள். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது ஒரு டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.
பொதுவாக பலர் நெய்யை உணவில் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனென்றால் நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த உணவு. ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்பதே அவர்களின் எண்ணமாக இருக்கும். ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால் கொலஸ்ட்ராலின் அளவு குறையும். இதுபோன்று நெய்யில் உள்ள பல நன்மைகளை பற்றி இப்போது பார்ப்போமா,
நெய்யை எப்படி தயாரிப்பது?
பாலை நன்றாக காய்ச்சி ஆறிய பின் அதில் சிறிதளவு தயிரை கலந்து மூடிவைத்து 6 அல்லது 8 மணி நேரத்திற்குப் பின் எடுத்துப் பார்த்தால் அது முழுவதும் தயிராக மாறியிருக்கும். இந்த தயிரில் சிறிது நீர்விட்டு மத்தால் கடைந்தால் வெண்ணெய் தனியாக பிரிந்துவிடும். இதனை சட்டியில் இட்டு காய்ச்சும் போது அது உருகும். அதில் வெற்றிலை அல்லது முருங்கை இலையை போட்டால் நன்றாக பொரியும். நல்ல வாசனை உண்டாகும். பின் அதனை இறக்கி வடிகட்டி பத்திரப்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு எடுக்கப்படும் நெய்யானது வெகுநாட்கள் வரை கெடாமல் இருக்கும். இத்தகைய நெய்யில்தான் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது.
நெய்யின் நன்மைகள்
குடற்புண் உள்ளவர்கள் பசியின்மையால் அவதியுறுவார்கள். சரியான நேரத்திற்கு உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாகவும் இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மது போன்ற போதை வஸ்த்துக்கள் உபயோகிப்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகி விடும். இதனால் வாயிலும் புண்கள் உருவாகி, ஒருவித நாற்றம் வீசும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். கண் பார்வையை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் நெய் உதவுகிறது.
வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
பசுநெய்யை ஹோமத்தில் விடும் போது, அதனால், காற்றில் உள்ள மாசு குறைகிறது. நெய் கலந்த அரிசியை ஹோமத்தில் போடுவதால், அதில் இருந்து அசிட்டிலின், எத்திலீன் ஆக்ஸைடு உள்ளிட்ட வாயுக்கள் உருவாகின்றன. இவை மனிதனுக்கு ஏற்படும் ரத்த அழுத்தம், ஆஸ்துமா, குடல் தொடர்பான நோய்கள் என பல நோய்களை தீர்க்கும் சக்தி பெற்றுள்ளவையாக இருக்கின்றன.
நெய்யில்லா உணவு பாழ் என்பது சித்தர்கள் கூற்று. இதை இன்றைய அறிவியல் பூர்வமாக ஆராய்ந்தால் அதன் மருத்துவ குணங்கள் நமக்கு வியப்பளிக்கும். எண்ணற்ற மருத்துவப் பயன் கொண்ட நெய் எவ்வாறு காய்ச்சப்படுகின்றது என்பதை பற்றி முதலில் அறிவோம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் நெய்யின் பயன்பாடு மிகுதியாக இருந்து வந்துள்ளது. மருத்துவக் குணம் வாய்ந்த மூலிகைகளில் உள்ள அணுக்களின் சுவர்களை ஊடுருவக்கூடிய தன்மை நெய்க்கு இருப்பதால் இத்தகைய மருந்து தயாரிப்பில் நெய்யை கூடுதலாகப் பயன்படுத்துகின்றனர். மருந்துகள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்கள் நெய்யை ரசாயனம் என்றே அழைக்கிறார்கள். முழு உடல் நலம் கொடுத்து நீண்ட வாழ்நாளைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. இதுபோல் சித்த மருத்துவத்திலும் மருந்துகளுக்குத் துணை மருந்தாகவும், மருந்துகள் கெடாமல் பாதுகாப்பதற்கும் நெய்யையே பயன்படுத்தி வந்துள்ளனர். ஒரு கரண்டி நெய்யில் 14 கிராம் கொழுப்புச் சத்து உள்ளது.
ஜீரண சக்தியைத் தூண்ட
நெய் வயிற்றில் உள்ள அமிலத்தன்மையை சமன் செய்து வயிறு மற்றும் குடல் பகுதியில் உள்ள மியூகஸ் லையனிங் பகுதியை வலுவாக்குகிறது.
நெய்யில் உப்பு, லேக்டோஸ் போன்ற சத்துக்கள் கிடையாது. இதனால் பால் மற்றும் பால் பொருட்கள் ஒத்துக் கொள்ளாதவர்கள் நெய்யை உபயோகித்துக் கொள்ளலாம். நெய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. கேன்சர், வைரஸ் நோய்களைத் தடுக்கிறது.
நெய்யில் CLA- Conjulated Linoleic Acid உள்ளது. இது உடல் பருமனாவதைத் தடுக்கிறது. அதுபோல் ஒமேகா 3 என்ற கொழுப்பு அமிலம் நெய்யில் உள்ளதாக அண்மையில் கண்டறிந்துள்ளனர்.
இது மூளைக்கு சிறந்த டானிக். நெய்யில் SATURATIED FAT – 65%
MONO – UNSATURATED FAT – 32%
LINOLEIC - UNSATURATED FAT – 3%
இத்தகைய மருத்துவக் குணம் வாய்ந்த நெய்யை உணவில் எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்வோம்.
நெய் உருக்கி மோர் பெருக்கி…
அதாவது நெய்யை நன்கு உருக்கி சுடு சாதத்தில் சேர்த்து கலந்து சாப்பிட வேண்டும். நெய்யை உருக்கி சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் கொடுத்து உஷ்ணத்தைத் தணிக்கும். தோசை வார்க்கும் போது எண்ணெய்க்கு பதிலாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். நெய் சேர்த்த பட்சணங்களை உண்ணலாம்.¬¬மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த கபத்தின் சீற்றங்களை குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும். ஞாபக சக்தியை தூண்டும். சரும பளபளப்பாக இருக்கும். கண் நரம்புகளைப் பலப்படுத்தி கண்பார்வை தெளிவடையச் செய்யும்.
சிலர் எப்போதும் உடல் சோர்வுடன் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால் கூட அவர்களுக்கு மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாக கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சக்தியிமையே. இதற்கு தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
குடற்புண் கொண்டவர்கள், பசியின்மையால் அவதியுறுபவர்கள், சரியான நேரத்தில் உணவு சாப்பிடாமலும், அதிக பட்டினியாக இருப்பவர்களின் வயிற்றில் ஜீரண அமிலங்கள் சுரந்து குடலின் உட்புறச் சுவர்களை புண்ணாக்கி விடுகின்றன. மேலும் வாயுக்கோளாறு உள்ளவர்களுக்கும், உணவில் அதிக காரம் சேர்த்துக் கொள்பவர்களுக்கும், மன அழுத்தம் கொண்டவர்களுக்கும் குடல் புண்ணாகிவிடும். இவர்கள் உணவில் நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலின் உட்புறச் சுவர்களில் உள்ள புண்கள் ஆறுவதுடன், சுரப்பிகள் பலப்படும். மலச்சிக்கல் நீங்கும். நன்கு ஜீரண சக்தியை தூண்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
த.வெ.க. கூட்டணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணி முடிவு? 38 தொகுதிகளை கேட்டுப்பெறவும் முடிவு
24 Dec 2025சென்னை, த.வெ.க.
-
விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம்: ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு: செய்து அரசாணை வெளியீடு
24 Dec 2025சென்னை, விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்க ரூ.289.63 கோடி நிதி ஒதுக்கீடு செய்தற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
-
இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை: கிறிஸ்துவ பெருமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து: சிறுபான்மையினருக்கு காவலனாக இருப்போம் என உறுதி
24 Dec 2025சென்னை, இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், தி.மு.க.
-
தமிழக அரசியல் வரலாற்றின் பொற்காலம்: எம்.ஜி.ஆருக்கு இ.பி.எஸ். புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆரின் நினைவு நாளில், நம் உயிர்நிகர் தலைவரை வணங்குகிறேன் என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசியல் வரலாற்றின் பொற்கால அத்தியாயம் என்று புகழஞ்சல
-
விஜய் ஹசாரே கோப்பை: 50 ஓவர்களில் 574 ரன்களை எடுத்து பீகார் அணி சாதனை
24 Dec 2025பாட்னா, விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் 50 ஓவர்களில் 574 ரன்கள் எடுத்து பீகார் அணி புதிய சாதனை படைத்துள்ளது.
-
கடலூர்: திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலி
24 Dec 2025கடலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே சாலை விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அன்பு, அமைதி தழைக்க வேண்டும்: கிறிஸ்துவ பெருமக்களுக்கு இ.பி.எஸ். வாழ்த்து
24 Dec 2025சென்னை, அன்பு, அமைதி, சகோதரத்துவம் தழைக்க வேண்டும் என்று இன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துவ பெருமக்களுக்கு அ.தி.மு.க.
-
எம்.ஜி.ஆர். பாதையில் பயணித்திட உறுதியேற்போம்: டிடிவி தினகரன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். பாதையில் எந்நாளும் பயணித்திட இந்நாளில் உறுதியேற்போம் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.
-
எம்.ஜி.ஆர். படத்திற்கு மரியாதை செலுத்திய செங்கோட்டையன்
24 Dec 2025சென்னை, எம்.ஜி.ஆர். படத்திற்கு த.வெ.க. நிர்வாகி செங்கோட்டையன் மரியாதை செலுத்தினார்.
-
தன்மானம் காக்க, தன்னையே தந்தவர்: பெரியாரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி
24 Dec 2025சென்னை, தன்மானம் காக்க, தன்னையே இந்த மண்ணுக்குத் தந்தவர் பெரியார் என்று அவரின் 52-வது நினைவு நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
-
தமிழகத்தை பாசிச சக்திகளால் ஒன்றுமே செய்ய முடியாது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
24 Dec 2025சென்னை, ஜனநாயகத்தில் வலிமை மிக்க சக்திகள் ஒன்று சேர்ந்து இருக்கும் போது எந்த பாசிச சக்திகளாலும் தமிழ்நாட்டை ஒன்றும் செய்ய முடியாது என கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் 
-
6,100 கிலோ செயற்கைக்கோளுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ராக்கெட் முதல்முறையாக இஸ்ரோ புதிய சாதனை
24 Dec 2025ஸ்ரீஹரிகோட்டா, அமெரிக்காவின் ஏ.எஸ்.டி.
-
இலங்கைக்கு இந்தியா உதவி செய்வது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்
24 Dec 2025கொழும்பு, புயல் பாதித்த இலங்கைக்கு இந்தியா நிவாரண உதவி செய்து வருவது ஆழ்ந்த பிணைப்பை பிரதிபலிக்கிறது என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
-
அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் ரூ.34.30 கோடி மதிப்பிலான 20 அதிநவீன குளிர்சாதன பேருந்துகளின் சேவை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
24 Dec 2025சென்னை, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ரூ.34.30 கோடி மதிப்பிலான பல அச்சுகள் கொண்ட 20 அதிநவீன குளிர்சாதன சொகுசு பேருந்துகள் இயக்கத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று
-
இன்று அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி பயணம்
24 Dec 2025கள்ளக்குறிச்சி, வீரசோழபுரம் தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெறும் அரசு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இன்று (
-
ஆரவல்லி மலைத்தொடரில் சுரங்கங்களுக்கு அனுமதியா? மத்திய அரசு விளக்கம்
24 Dec 2025புதுடெல்லி, டெல்லி முதல் குஜராத் வரையிலான முழு ஆரவல்லி மலைத்தொடரையும் மத்திய அரசு பாதுகாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
24 Dec 2025சென்னை, முதற்கட்டமாக 1,000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-12-2025.
25 Dec 2025 -
கேரளாவில் பறவை காய்ச்சல் எதிரொலி: தமிழ்நாட்டின் எல்லையோரம் கண்காணிப்பு பணிகள் தீவிரம்
25 Dec 2025சென்னை, கேரளாவில் பறவை காய்ச்சல் காரணமாக தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
தங்கம், வெள்ளி விலை மீண்டும் புதிய உச்சம்..! கடந்த 4 நாட்களில் ரூ.3,360 அதிகரிப்பு
25 Dec 2025சென்னை, தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ. 160 உயர்ந்து ரூ. 1,02,560 -க்கு விற்பனையாகு புதிய உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.
-
சிறுபான்மையினர் மீது தாக்குதல் எதிரொலி: கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்கிட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
25 Dec 2025சென்னை, சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தி நாட்டுமக்களைப் பிளவுபடுத்தி குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம்
-
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது
25 Dec 2025வாஷிங்டன், அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவர்களை கைது செய்ய தனித்துறை (ஐஸ்) உருவாக்கப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 30 இந்தியர்கள் கைது செ
-
உலகம் அழிவதை தற்போது கடவுள் தள்ளிப்போட்டுள்ளார்: கானா நாட்டு தீர்க்கத்தரிசி அந்தர்பல்டி
25 Dec 2025அக்ரா, நம்மில் பலருக்கு உலகம் அழியப்போகிறது என்ற வார்த்தை 2004-ம் ஆண்டு முதல் கேட்டுக்கொண்டு வருகிறோம்.
-
2 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கள்ளக்குறிச்சி செல்கிறார்
25 Dec 2025சென்னை, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று அரசின் பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் ரூ.1,045 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 2 லட்சத்து 16 ஆயிரத்த
-
வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் கோலாகலம்: போப் 14-ம் லியோ உரை
25 Dec 2025வாடிகன், வாடிகன் நகரில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது, போப் 14-ம் லியோ முதல் திருப்பலியில் உரையாற்றினார்.


