எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை : தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம் என்று சிவகங்கை விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.
சிலகங்கையில் நேற்று எம்.ஜி.ஆர் .நூற்றாண்டு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், நாடாளுமன்ற , சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் திரளாக கலந்துகொண்டனர். விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் திருவுருவப் படத்தை திறந்து வைத்தார். பிறகு முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்த அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் ரு.39 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர்.
முன்னதாக இந்த விழாவில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
வீரம் செறிந்த மண்
இந்திய விடுதலை போராட்ட வரலாற்றில் முதல் முதலாக வெள்ளையரை எதிர்த்து, வீரப் போர் புரிந்து, வெற்றி கண்டு, வீரமங்கை என்று பெயரெடுத்த ராணி வேலு நாச்சியார் ஆண்ட மண் சிவகங்கை. தியாகத்திற்கும், விசுவாசத்திற்கும், இலக்கணமாய் வாழ்ந்த மருது சகோதரர்கள் வாழ்ந்த பூமி, சிவகங்கை பூமி. தனது இன்னுயிரை கொடுத்து,வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை வெடிக்கச் செய்த,தியாக மங்கை, வீரத்தாய் குயிலிவளர்ந்த பூமி இந்த சிவகங்கை.வீரம் செறிந்த மண், தியாகம் நிறைந்த மண், வெற்றி திகழ்ந்த மண்,என்று தமிழகமே பெருமை கொள்ளும் இந்த சிவகங்கை சீமையில், புரட்சித் தலைவருக்கு நூற்றாண்டு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
அ.தி.மு.க மாபெரும் இயக்கம்
எம்.ஜி. ஆர் நூற்றாண்டு விழா, மக்கள் நடத்துகிற மகத்தான விழாவாக, உலகமே வியக்கும் வகையில் நடந்து கொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் மங்காத மக்கள் செல்வாக்கைப் பார்த்து, நமது எதிரிகள் மலைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அசைக்க முடியாமல், சில உதிரிகள் களைத்துப் போயிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் மட்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாபெரும் இயக்கத்தை தொடங்காமல் இருந்திருந்தால், சில சுயநலவாதிகள் கச்சத் தீவை தாரை வார்த்தது போல, தமிழ் நாட்டையே தாரை வார்த்திருப்பார்கள்.
புகழுக்காக ஏங்கியவர் அல்ல
மக்கள், தங்களது தேவைகளை கடவுளிடம் வேண்டுகிறார்கள். எங்களுக்கு நல்ல வாழ்க்கையை கொடு, மகிழ்ச்சியைக் கொடு, நிம்மதியைக் கொடு, பாதுகாப்பைக் கொடு என்று தங்களுக்கு வேண்டியதை ஆண்டவனிடம் கேட்பார்கள். தமிழக மக்களின் இந்த வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேற, நூறு ஆண்டுகளுக்கு முன்பு தனது தவப் புதல்வனை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தான் ஆண்டவன். அவர்தான் கொடை வள்ளல் நமது எம்.ஜி.ஆர். சிலரைப் போல, சொத்து சேர்க்க ஆசைப்பட்ட தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர். ! மக்களின் அன்பை சேர்த்தவர் நமது எம்.ஜி.ஆர் ! சிலரைப் போல, புகழுக்காக ஏங்கிய தலைவர் அல்ல நமது எம்.ஜி.ஆர்! ஏழைகளின் துன்பங்களை நீக்கி புகழின் உச்சிக்கு சென்ற தலைவர் நமது எம்.ஜி.ஆர் !சிலரைப் போல, குடும்பத்திற்காக ஆட்சி நடத்தியவர் அல்ல நமது எம்.ஜி.ஆர் !ஆட்சிக்குள்ளே குடும்பத்தின் தலையீடே இருக்கக் கூடாது என்று ஆணையிட்டவர் நமது எம்.ஜி.ஆர் ! மக்களின் பசியாற்றி, அவர்களின் வயிறும், மனமும் நிறைவதைப் பார்த்து நிம்மதி அடைந்தவர் எம்.ஜி.ஆர் ! எதிர்காலத்தை தமிழக மக்களுக்கு உருவாக்கி தந்த உன்னத தலைவர் எம்.ஜி.ஆர் ! பிறருக்கு கொடுத்து வாழ்வதையே கொள்கையாக கொண்டு வாழ்ந்த எம்.ஜி.ஆர் ! கொடுப்பதற்கு நல்ல மனம் வேண்டும். அதுவும் பிறவி குணமாக இருக்க வேண்டும்.
அம்மாவின் ஆட்சி...
ஏழைகள் இன்ப வாழ்வு பெற வேண்டும் என்பதையே தனது லட்சியமாகக் கொண்டு வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்..அந்த அன்பு மழைதான்,இன்றும்தமிழ் நாட்டையே வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. தமிழ் நாட்டிலே ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. அதற்கு காரணம் அம்மாவின் ஆட்சி. தமிழ் நாட்டில் அடுப்பெரியாத வீடுகள் இல்லை. விளக்கெரியாத வீதிகள் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி. பிள்ளைகளைப் படிக்க வைக்க வசதி இல்லையே, என்று மனம் உடையும் பெற்றோர்கள் தமிழ் நாட்டில் இல்லை. அதற்குத் காரணம் அம்மாவின் ஆட்சி.
இரட்டை இலை சின்னம்
மக்கள் பணத்தை தனக்காக சுருட்டுவது அராஜக ஆட்சி. மக்கள் பணத்தை மக்களுக்கே கொடுப்பது ஜனநாயக ஆட்சி. அந்த ஜனநாயக ஆட்சிக்குப் பெயர்தான் அம்மாவின் ஆட்சி. எம்.ஜி.ஆரை போலவே,கொடுக்கின்ற குணமும், ஏழைகளின் பசியாற்றுகின்ற குணமும், பிறவிக் குணமாய் பெற்று வந்தவர் அம்மா. எம்.ஜி.ஆர். மற்றும் அம்மா, தமிழக மக்களின் இதயத்தில் இருக்கிறார்கள். விசுவாசத் தொண்டர்களின் உள்ளத்தில் இருக்கிறார்கள். அந்த இரண்டு தெய்வங்களின் ஆசிகளோடு,தற்காலிகமாக போடப்படும் தடைகளையெல்லாம் உடைத்து, நமது வெற்றிச் சின்னமாம் இரட்டை இலையை நிச்சயம் பெறுவோம். சின்னம் நமக்குத்தான் கிடைக்கும் என்பது நன்றாகத் தெரிந்திருந்தும், மக்களை ஏமாற்ற சிலர் மனசாட்சியின்றி பொய் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |
-
அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா விஸ்வாவின் சா்ச்சை வீடியோ குறித்து இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை
15 Feb 2026புதுடெல்லி, அஸ்ஸாம் முதல்வா் ஹிமந்த விஸ்வ சா்மா, முஸ்லிம் சமூகத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுடுவது போன்ற சா்ச்சை காணொலிக் காட்சி தொடா்பாக தொடரப்பட்ட மனுக்களை சுப்ரீம்
-
அறியாமையின் உச்சத்தில் இருக்கிறார்: விஜய் மீது அமைச்சா் விமர்சனம்
15 Feb 2026கோவை, த.வெ.க. தலைவைர் விஜய் அறியாமையின் உச்சத்தில் இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை தொடங்குகிறார் சசிகலா
15 Feb 2026மதுரை, வருகிற 24-ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாளில் புதிய கட்சியை சசிகலா தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
உ.பி.: தலித் இளைஞர் கொலை வழக்கில் 3 குற்றவாளிகள் கைது: என்கவுன்டரில் 2 பேருக்கு காயம்
15 Feb 2026லக்னோ, உத்தரப் பிரதேசத்தில் தலித் இளைஞர் கொலை வழக்கில் மூன்று குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்தனர்
-
பாரதம் செழிப்பின் உச்சம் அடையட்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து
15 Feb 2026புதுடெல்லி, சிவபெருமானின் ஆசியால் நமது பாரதம் செழிப்பின் உச்சத்தில் அரியணையிட்டு நிலைத்திருக்கட்டும் என்று மகா சிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து
-
மறுதணிக்கை செய்வதில் தாமதம்: ஜூன் மாதம் ஜனநாயகன் வெளியீடு?
15 Feb 2026சென்னை, மறுதணிக்கைக்காக ஜன நாயகன் அனுப்பப்பட்ட நிலையில் திரைப்படத்தை தணிக்கை வாரியம் இன்னமும் மறுதணிக்கைக்காக திரைப்படத்தைப் பார்க்காததால் படம் ஜூன் மாதம் அதாவது தேர்தல
-
பெங்களூரில் விபத்து - 5 இளைஞர்கள் பலி
15 Feb 2026பெங்களூரு, பெங்களூரில் வேகமாக வந்த கார், பேருந்து மீது மோதியதில் இளைஞர்கள் 5 பேர் பலியாகினர்
-
வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு மனித நேய மக்கள் கட்சி தீர்மானம்
15 Feb 2026சென்னை, 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக மனித நேய மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரம்: மறுஆய்வு மனுக்களை இன்று பரிசீலிக்கிறது சுப்ரீம் கோர்ட்
15 Feb 2026திருவனந்தபுரம், சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து பெண்களையும் தரிசனத்திற்கு அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் உத்தரவை மறு ஆய்வு செய்ய வலியுறுத்தி தாக்கல் செ
-
இந்தியாவில் அமையும் முதல் நீருக்கடியில் செல்லும் சாலை - ரயில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
15 Feb 2026புதுடெல்லி, இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குமா..? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதில்
15 Feb 2026முனிச், அமெரிக்காவுடன் போட்ட ஒப்பந்தப்படி ரஷ்ய எண்ணெய் கொள்முதலை இந்தியா நிறுத்துமா அல்லது தொடந்து வாங்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஜெய்சங்கர், "எண்ணெய் நிறுவனங்கள
-
விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் குவிந்த பக்தர்கள் கூட்டம்: 4 மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து சாமி தரிசனம்
15 Feb 2026தூத்துக்குடி, விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலை மோதியது.
-
கோவை ஈஷா யோக மையத்தில் மகா சிவராத்திரி விழா: ராஜ்நாத்சிங் பங்கேற்பு
15 Feb 2026கோவை, கோவை ஈஷா யோக மையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.15) நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்றார்.
-
விஜய்-திரிஷா குறித்த அவதூறு பேச்சு: நயினாருக்கு ராமதாஸ் கண்டனம்
15 Feb 2026சென்னை, த.வெ.க. தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷாவை தொடர்புபடுத்தி பேசிய நயினார் நாகேந்திரனுக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் தவறான தகவல்களை பரப்புகிறார்: ராகுல் மீது அமித் ஷா குற்றச்சாட்டு
15 Feb 2026புதுடெல்லி, வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ராகுல் காந்தி பொய் பரப்புகிறார்.
-
2024-25 நிதியாண்டில் மட்டும் தோ்தல் அறக்கட்டளைகள் திட்டத்தில் கட்சிகளுக்கு ரூ.3,826 கோடி நன்கொடை: அதிகபட்சமாக பா.ஜ.க.வுக்கு 82 சதவீதமாம்
15 Feb 2026புதுடெல்லி, தோ்தல் அறக்கட்டளைகள் (எலக்டோரல் டிரஸ்ட்) திட்டத்தில் 2024-25 நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு ரூ.3,826.35 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளதாக ஜனநாயக சீா்திருத
-
மாசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலையில் குவிந்த பக்தர்கள்
15 Feb 2026சபரிமலை, சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காண
-
மூன்று நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இன்று இந்தியா வருகிறார்
15 Feb 2026புதுடெல்லி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகின்றனர்.
-
ஜெர்மனி, முனிச் பாதுகாப்பு மாநாட்டில் ஜெலன்ஸ்கி - ரூபியோ முக்கிய பேச்சுவார்த்தை
15 Feb 2026முனிச், ஜெர்மனியில் நடைபெறும் முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்றுள்ள உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் சந்தித்து முக்கிய பேச
-
வங்கதேசத்தில் புதிய அரசு நாளை பதவியேற்கிறது: இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் பங்கேற்பு
15 Feb 2026டாக்கா, வங்கதேச புதிய பிரதமராக பிஎன்பி தலைவர் தாரிக் ரஹ்மான் நாளை பதவியேற்கும் விழாவில் இந்தியா சார்பில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி பங்கேற்க உள்ளதா
-
தமிழ்நாட்டில் பிப். 23-ல் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்
15 Feb 2026சென்னை, தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியல் வரும் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடருமா என்பது சந்தேகம்: ஈரோட்டில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
15 Feb 2026ஈரோட்டு, தினமும் தி.மு.க. காங்கிரஸ் வார்த்தைப்போர் நடக்கிறது என்றும் தி.மு.க.
-
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு மத்திய அரசு முட்டுக்கட்டை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
15 Feb 2026தஞ்சை, தமிழகத்தின் வளர்ச்சிக்கு மத்திய பா.ஜ.க. அரசு முட்டுக்கட்டை போட நினைக்கிறது. நமக்கான நிதியை தர மறுக்கிறது.
-
40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
15 Feb 2026சென்னை, 40 ஆண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார
-
12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் மூலம் மண் ஈரப்பத தரவுகள் வெளியீடு: இஸ்ரோ
15 Feb 2026பெங்களூரு, இந்திய நிலப்பரப்பில் மண்ணின் ஈரப்பதத்தை ஆய்வு செய்து 12 நாட்களுக்கு ஒருமுறை நிசாா் செயற்கைக்கோள் தரவுகளை வெளியிடவுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (


