Idhayam Matrimony

அடுத்த வாரம் கோலி - அனுஷ்கா சர்மாவை மணக்கிறார்?

வெள்ளிக்கிழமை, 8 டிசம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா திருமணம் இத்தாலியில் நடக்கிறது.

உலகின்  தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரும், இந்திய  கிரிக்கெட்டின் 3 நிலை அணிகளிலும் கேப்டனாக இருப்பவருமான விராட்கோலி இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவை நீண்ட காலமாக காதலித்து  வருகிறார். இருவரும்  பல்வேறு இடங்களுக்கு ஒன்றாக சுற்றி திரிந்த படங்களை  அவர்களே வெளியிட்டு இருந்தனர். தொடக்கத்தில் அவர்களுக்குள்   மனக்கசப்பு ஏற்பட்டு பின்னர் மீண்டும் ஒன்றாக இணைந்தனர்.

இந்திய அணி, தற்போது இலங்கை  அணியுடனான தொடர்களில் விளையாடி வருகிறது.  இத்தொடரில் அணியின் தலைவரான கோலி தனிப்பட்ட காரணங்கள் காரணமாக தனக்கு விடுப்பு வழங்கும்படி கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு இருந்தார்.

இந்த நிலையில்  விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இவர்களது திருமணம் டிசம்பர் 2-வது வாரத்தில் இத்தாலியில் உள்ள மிலன் நகரில் நடைறும் எனகூறப்பட்டது.   இந்த திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள்  மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொள் கிறார்கள். திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.டிசம்பர் 21 ம் தேதி மும்பையில் நடைபெறும் வரவேற்புக்கு இந்த ஜோடி அனைத்து நண்பர்களை அழைக்கும்.

அனுஷ்காவின் திருமண ஆடைகளை  ஆடை வடிவமைப்பாளரான சப்பாசிச்சி முகர்ஜி வடிவமைத்து உள்ளார். கடந்த வாரம் அனுஷ்கா சர்மாவின் வீட்டிற்கு அவர் வந்து சென்று உள்ளார்.திருமணம் இத்தாலியின் மிலன் நகரில் நடைபெறுகிறது. ஆனால் இது குறித்து இருவர் தரப்பில் இருந்தும் அதிகாரபூர்வமான தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து