எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
பிஜிபி வேளாண்மை அறிவியல் கல்லூரி, வேட்டாம்பாடி, நாமக்கல்.
நவீனமயமாதல், டிஜிட்டல் இந்தியா என நம் நாடு பல முன்னேற்றம் அடைந்தாலும் இன்னும் நம் நாடு விவசாயத்தையே முதகெலும்பாய் நம்பியுள்ளது. நாட்டின் மொத்த பரப்பளவில் 60.4% விவசாய நிலமாகும். இந்திய ஜிடிபியில் 16 சதவீதம் விவசாயத்திலிருந்து கிடைத்துள்ளது. பல வகையான உணவு பொருட்கள் உற்பத்தியில் இந்தியாவே முதலிடம்.
இவ்வளவு பெருமையிருப்பினும், இந்தியாவில் பத்தில் இரண்டு பேர் பசியோடு தான் இருக்கின்றனர். ஊட்டச்சத்து குறைபாட்டால் இறப்பு இன்னும் தொடர்கிறது. விவசாயியின் நிலைகளை சொல்லி உலகம் அறிய வேண்டியதில்லை. முப்போகம் தந்த அதே மண் ஒரு போகம் கூட தர மறுக்கிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? காரணம் காரியம் இரண்டுமே ஒன்று தான்...அதுவும் நாம் தான்....
பசுமை புரட்சி என்றோம்! இரசாயணங்களை பூமியில் கொட்டித் தீர்த்தோம்! இயந்திரங்களை கொண்டு பூமியை கிளறி பதம் பார்த்தோம்! பூமியின் உதிரத்தை இயந்திரம் கொண்டு உறிந்தோம்! விளைச்சல் என்று நம்பி விதைகளை மாற்றினோம்! மாற்றம் செய்த விதையை நம்பி பாரம்பரிய விதைகளை மாற்றினோம்! உலகையே ஆக்கி அழிக்கும் நுண்ணுயிர்களை இழந்தோம்! உயிரும் உதிரமும் கொண்ட மண்ணை உயிரற்ற திடப்பொருளாக்கினோம்! நம்மால் விளைந்த இந்த விளைவுக்கு நாமே விடை காண்போம்... பூமியைக் காக்க புதியதோர் மாற்றம் கொண்டு வருவோம்.... அந்த மாற்றம் இயற்கை முறையில் வேண்டும்..விளை நிலத்திற்கான உண்மை பொருளை உலகறிய செய்த நம்மாழ்வர் அவர்கள் கொண்டு வரா விரும்பிய மாற்றமாக இருத்தல் வேண்டும்.
நிலத்தின் வளத்தை பெருக்க வேண்டும் அதுவும் இயற்கை முறையில்... இது சாத்தியமா? நிச்சயம்... பயிர்த்தொழில் என்பது இயற்கை சார்ந்த்தாக மட்டுமே அமைதல் வேண்டும்.... காரணம் இயற்க்கையை வெல்ல மணிதன் எடுக்கும் அனைத்து முயற்சியும் தோல்வியிலேயே முடியும். மண்ணை காக்க வேண்டிய பொருட்களை தெருவின் குப்பைகளில் கொட்டி விட்டு, இரசாயனத்தை நம்பிக் கொண்டிருக்கிறோம். இரசாயணங்கள் முதலில் விளைச்சல் தரலாம். ஆனால், இவை அனைத்தும் விசங்கள்.சிறிது சிறிதாய் நிலத்தை மலடாக்கும்.அதன் விளைவு.... விளை நிலம் விலை நிலமாகும்...
நிலத்தின் வளத்தை பெருக்க.... பயிர் சுழற்சி செய்ய வேண்டும்... கலப்பு பயிர் சாகுபடி செய்யலாம். கலப்பு பயிரால் நுண்ணுயிர்கள் மேம்படும். பயிருக்கு தேவையான தனிமங்கள் அனைத்தையும் நுண்ணுயிர்கள் பெருகச் செய்யும். நுண்ணுயிர்கலாள் காற்றோட்டம் அதிகரிக்கும். ஈரப்பிடிப்பு அதிகரிக்கும். மண் அரிப்பு தடுக்கப்படும். இதை கடந்து பலர் அறியாத உண்மை ஒன்றும் உண்டு. கலப்பு பயிர் சாகுபடியால் கரி உள்வாங்கப்படுவதால், புவி வெப்பமயமாதல் குறைக்கப்படுகிறது. மண்ணில் அதிகப்படியான வளங்கள் அதன் மேல் புறத்தில் தான் உள்ளது. நவீன வேளாண் இயந்திரம் கொண்டு மண்ணை கிளருவதால் வளங்களை சரியாக பயன்படுத்த இயலவில்லை.
“இயற்கையை இயற்கைக்கே திருப்பியளிக்க வேண்டும்“ என்பது ஒற்றை வைக்கோல் புரட்சியின் ஆசிரியர் ஃபுகாக்கோவின் கருத்து. அவரது கருத்து நிதர்சனமான உண்மை. முதல் பருவத்தில் கிடைக்கும் வைக்கோலை மண்ணிலேயே வைத்து மண்ணின் வளத்தை பெருக்க வேண்டும். இதுவே நம் பாரம்பரியம். இது மட்டுமல்லாமல், மண்ணின் வளத்தை காக்க மண்புழு உரம் மிக அவசியமானது. இரசாயன உரத்தில் கிடைக்கும் தாதுக்களை விட இது 20 சதவீதம் அதிகமாக வளத்தை பெருக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் தோராயமாக 40,000 மண்புழுக்கள் இருக்கும் என்பது டார்வினின் ஆராய்ச்சி. மண்புழுக்கள் இருக்கும் நிலமே வளமானது. நிலத்தின் வளத்தை மண்புழுவே காட்டிக்கொடுக்கும். தனிமங்களை மண் ஏற்றுக்கொள்வதற்கு மண்புழுக்களே பெரிதும் உதவுகிறது. தாவர, விலங்குக் கழிவுகள் மீது பூஞ்சை, பாக்டீரியா மண்புழுக்கள் வளரும்.இதனால் அந்த கழிவு பழுப்பு நிறத்திற்கு மாறும். இத்தகைய கழிவைக் கொண்டு நில வளத்தைப் பெரிதும் மேம்படுத்தலாம்.
மாட்டின் சானத்தை மட்டுமே எருவாக பயன்படுத்தலாம் என சிலர் எண்ணுகின்றனர். ஆனால் தமிழன் தன் இரண்டாவது தாயாக கருதும் மாடு தரும் அனைத்துமே விளைச்சலை ஊக்குவிக்கும். பஞ்சகாவ்யாவை விதை நேர்த்தி தொடங்கி, நடவு, வளர்ச்சிப் பருவம், பூ வளர்ச்சி, காய்ப் பெருக்கம், அறுவடைக்குப் பின் கெடாமை என பல இடத்திலும் பயன்படுத்தலாம். இந்தியாவில் தேவைப்படும் சக்தியில் 66% கால் நடைகள் மூலமே கிடைக்கின்றன. நிலக்கரி, பெட்ரோல், டீசல் மூலம் கிடைப்பவை 14% மட்டுமே. கால் நடைகள் மூலம் கிடைக்கும் சக்தியும் எருவும் சூழலை மாசுபடுத்துவது இல்லை. மாறாக மண் நலத்தையும், மக்கள் நலத்தையும் காக்க வல்லவை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். உழவு பற்றிய அறிவியலின் வயது ஒரு 100 வருடந்தான். 10,000 ஆண்டுகளாய் விவசாயம் செய்யும் உழவன், ஒரே பயிரில் பல இரகங்களை கையாண்டான். அவனது பாரம்பரிய விதைகள் நோய்க்கு உட்படவில்லை. அறிவியலின் ஆட்சியால் பல இரகங்கள் அழிந்தன. இரசாயன உரங்களுக்கு கட்டுப்படாத பல இரகங்கள் ஓரங்கட்டப்பட்டன. இரசாயனத்தை கொட்டி வணிகத்தை மட்டுமே பெருக்கியது, நவீன வேளாண்மை. இந்த நிலை தொடர்ந்தால் இருக்கும் ஓரிரு இரகங்களும் அழிந்துவிடும். நாம் பின்பற்றும் நவீன வேளாண்மையில் 38% இழப்பீடு நோய், பூச்சி மற்றும் களைகளால் ஏற்படுகிறது. இத்தகைய இழப்பீடுகளை இயற்கை வேளாண்மையால் கட்டுபடுத்தலாம். பருவம் அறிந்து பயிர் செய்தல், மூலிகைச் சாறு தெளித்தல் ஆகியனவே உரிய விளைச்சல் எடுக்க தகுந்த முறைகள்.
பூச்சிகள் அனைத்துமே எதிரிகள் அல்ல. மகரந்த சேர்க்கைக்கு அவை அனைத்துமே இன்றியமையாதவை. கால் ஏக்கர் நிலத்தில் பல லட்சம் சிலந்திகள் வாழ்கின்றன. அவை பல ஆயிரம் மீட்டர் வலைகளை பின்னுகின்றன. பயிரை அழிக்கும் தாய்ப் பூச்சிகள், சிலந்தி வலையில் சிக்குவதால் பயிர்கள் காப்பற்றப்படுகின்றன. ஆனால், ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் தெளிக்கப்படும்போது சிலந்தி வலைகள் நொடியில் அழிக்கப்படுகின்றன. நாட்டில் 60% நிலப்பரப்பு வானம் பார்த்த பூமியாக உள்ளது. இந்த நிலங்களில் எந்தவித இழப்பும் இன்றி இயற்கை வேளாண்மை செய்யலாம். இது குறித்து சர்வதேச ஆராய்ச்சி நிறுவனமான “இக்ரிசாட்“ ஆராய்ந்து நம்பிக்கை தெரிவித்துள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தைஉயர்த்த பண்ணைக் குட்டை அமைக்கலாம்.
உலகமெங்கும் நஞ்சில்லா உணவுக்கான வரவேற்பு உயர்ந்துள்ளது. மேற்கண்ட நடைமுறையை பின்பற்றுவதால் உலகுக்கே தலைமை தாங்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு உள்ளது. இயற்கை வழங்கிய நீரையும், நெற்றி வேர்வை சிந்தி உழவன் திருத்திய நிலத்தையும் கம்பெனியிடம் கொடுத்துவிட்டு, மக்களுக்குச் சத்துணவு வழங்கிய மாடுகளை கறிக்கடைக்கு அனுப்பிவிட்டு, ஆலைகளின் சாக்கடையை வயலுக்குள் பாய்ச்சி, விளைந்த பொருளுக்கு விலை ஏறி விடாதபடி கட்டுப்பாடு விதித்து, உழவர்களை நிலத்தை விட்டு வெளியேறி, ஏற்றுமதி இறக்குமதிக்கு அகலச் சாலை போட்டு, பசியை மாற்றாவும் ஆற்றவும் போகிறோமா... அல்லது ஆலைத் தொழிற்சந்தையில் மனித எந்திரங்களை மலிவாக வழங்கப் போகிறோமா?
இது நம்மாழ்வார் அவர்கள் உலகிற்க்கு விட்டுச் சென்ற கேள்வி... இதுக்கான விடை நாம் இந்த பூமிக்காக மேற்கொள்ளும் மாற்றாந்தான்.
கவிபிரியா.பா - பி.எஸ்.சி(வேளாண்மை) இறுதி ஆண்டு.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 11 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 12 months 1 day ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 2 weeks ago |
-
1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் வழங்க உள்ளார் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
15 Sep 2025சென்னை : 1,231 கிராம சுகாதார செவிலியர்களுக்கு பணிநியமன ஆணையை 22ம் தேதி முதல்வர் வழங்குகிறார் என மா. சுப்பிரணியன் தெரிவித்துள்ளார்.
-
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தலைக்கு ரூ. 1 கோடி அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு சுட்டுக்கொலை
15 Sep 2025ராஞ்சி : தலைக்கு ரூ. 1 கோடி சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்டு பாதுகாப்பு படையால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-09-2025.
16 Sep 2025 -
எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் அர்ஜூன் தாஸ்
16 Sep 2025’கைதி’ மற்றும் ‘மாஸ்டர்’ படங்களின் மூலம் வில்லத்தனத்தில் மிரட்டியவர் அர்ஜுன் தாஸ், ‘போர்’, ‘ரசாவதி’, ‘அநீதி’ போன்ற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் ஹீரோவாக நடித்த
-
ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் : அக்டோபர் 1 முதல் அமல்
16 Sep 2025டெல்லி : ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் புதிய மாற்றம் அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வருகிறது.
-
இன்று தி.மு.க. முப்பெரும் விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் வருகை
16 Sep 2025கரூர் : தி.மு.க.வின் முப்பெரும் விழா இன்று (புதன்கிழமை) கரூர் கோடங்கிபட்டியில் நடைபெற உள்ளது. விழாவில் முதல்வரும், தி.மு.க.
-
தமிழகத்தில் இன்று தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை
16 Sep 2025சென்னை : தமிழகத்தில் இன்று ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட 28 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் இரு நாள்களுக்கு இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்
-
திருவள்ளுர், நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ரூ. 28.33 கோடி மதிப்பீட்டில் 4 புதிய தொழிற்பேட்டைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
16 Sep 2025சென்னை : திருவள்ளுர், திருநெல்வேலி, திருவாரூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் சுமார் 5,400 பேர் வேலைவாய்ப்பு பெற்றிடும், ரூ.
-
பூஜையுடன் தொடங்கிய காட்ஸ்ஜில்லா
16 Sep 2025சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும
-
நாளை மறுநாள் வெளியாகும் தண்டகாரண்யம்
16 Sep 2025Learn&Teach புரொடக்ஷன் S.சாய் தேவானந்த், S.சாய் வெங்கடேஸ்வரன், நீலம் புரொடக்ஷன் தயாரிப்பில், இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில், தினேஷ், கலையரசன், ஷபீர், பால
-
யோலோ திரைவிமர்சனம்
16 Sep 2025யுடியூப் சேனல் நடத்தும் நாயகன் தேவுக்கும், நாயகி தேவிகாவுக்கும் திருமணம் நடந்ததாக சிலர் கூறுகிறார்கள்.
-
தீபாவளி சிறப்பு ரயில்களுக்கு இன்று முன்பதிவு தொடக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு
16 Sep 2025சென்னை, : தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக்கால சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (செப். 17) தொடங்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
நாகரிகப் பயணம் படத்தின் இசை வெளீயீட்டு விழா
16 Sep 2025RICH மற்றும் DSK மூவிஸ் இணைந்து வழங்க, தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நாகரிகப் பயணம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில்
-
உருட்டு உருட்டு திரைவிமர்சனம்
16 Sep 2025எந்நேரமும் குடி குடி அலையும் நாயகன் கஜேஷ் நாகேஷ்.
-
இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் கனமழை
16 Sep 2025சிம்லா : இமாச்சல பிரதேசத்தில் விடிய விடிய பெய்த கனமழை பெய்ததால் வெள்ளத்தில் வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.
-
உலகின் எந்த நாட்டில் இருந்தாலும் ஹமாஸ் தலைவா்களை தாக்குவோம் : இஸ்ரேல் பிரதமா் திட்டவட்டம்
16 Sep 2025ஜெருசலேம் : உலகின் ஹமாஸ் தலைவா்கள் எந்த நாட்டில் இருந்தாலும் தாக்குவோம் என்று இஸ்ரேல் பிரதமர் கூறியுள்ளார்.
-
தலைநகர் டெல்லியில் துணை ஜனாதிபதியை நேரில் சந்தித்து இ.பி.எஸ். வாழ்த்து
16 Sep 2025புதுடெல்லி : டெல்லி சென்றுள்ள எடப்பாடி பழனிசாமி, அங்கு துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
-
முதலில் கச்சா எண்ணெய், தற்போது சோளம்: இந்தியாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் புதிய தந்திரம்
16 Sep 2025டெல்லி : அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹ
-
ரயில் டிக்கெட் முன்பதிவு: ஆதாா் பயனா்களுக்கு முன்னுரிமை
16 Sep 2025புதுதில்லி : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் பயனர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
-
பார்லி.யை மேலும் பலப்படுத்த ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு
16 Sep 2025டெல்லி : பாராளுமன்றத்துக்கு ரூ.14 கோடியில் நவீன பாதுகாப்பு பலப்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது.
-
வக்பு சட்டத்திருத்தம் குறித்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
16 Sep 2025சென்னை : வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்து உத்தரவு கிடைத்ததுக்கு த.வெ.க.
-
அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது : சென்னை பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். ஆவேசம்
16 Sep 2025சென்னை : அ.தி.மு.க.வை யாராலும் ஒன்று செய்ய முடியாது என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
படுக்கை, தலையணை வேண்டும்: சிறையில் இருக்கும் நடிகர் தர்ஷன் மனு
16 Sep 2025பெங்களூரு : சிறையில் படுக்கை, தலையணை கேட்டு நடிகர் தர்ஷன் மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு
16 Sep 2025புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது.
-
தமிழக முழு நேர டி.ஜி.பி. தோ்வு செய்ய செப்.26 டெல்லியில் யு.பி.எஸ்.சி. கூட்டம்
16 Sep 2025சென்னை : தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் மற்றும் மாநில காவல்படைத் தலைவா் பதவிக்கு முழு நேர ஐ.பி.எஸ்.