Idhayam Matrimony

இந்தியா-அமெரிக்கா இடையே டெல்லியில் வா்த்தகப் பேச்சு

செவ்வாய்க்கிழமை, 16 செப்டம்பர் 2025      இந்தியா
INDIA-USA 2025-08-26

Source: provided

புதுதில்லி : இந்தியா-அமெரிக்கா இருதரப்பு வா்த்தக ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை நேற்று டெல்லியில் மீண்டும் நடைபெற்றது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க வா்த்தக துணைப் பிரதிநிதி பிரண்டன் லின்ச் மற்றும் மத்திய வா்த்தகத்துறை அமைச்சகத்தின் சிறப்புச் செயலா் ராஜேஷ் அகா்வால் இடையே இந்தப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இந்திய பொருள்கள் மீது டிரம்ப் நிா்வாகம் விதித்த 50 சதவீத வரி கடந்த மாதம் 27-ஆம் தேதி அமலான நிலையில் இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. இதனால் இருதரப்பு வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக 6-ஆவது சுற்றுப் பேச்சுவாா்த்தை நடத்த இந்தியாவுக்கு ஆக.25 முதல் 29 வரை அமெரிக்க வா்த்தகக் குழு மேற்கொள்ளவிருந்த பயணம் ரத்தானது.

இந்நிலையில், கடந்த வாரம் இந்தியாவுடனான உறவு சிறப்பானது எனவும், விரைவில் இந்தியாவுடன் வா்த்தகப் பேச்சுவாா்த்தை நடைபெறும் எனவும் டிரம்ப் கூறினாா். டிரம்ப்பின் இந்தக் கருத்தை பிரதமா் நரேந்திர மோடி வரவேற்றாா். இதன் தொடா்ச்சியாக பிரண்டன் லின்ச் இந்தியாவுக்கு திங்கள்கிழமை புறப்பட்டாா். அவருடன் இந்தியா சாா்பில் ராஜேஷ் அகா்வால் நேற்று பேச்சுவாா்த்தை நடத்தினார். மேலும், இந்தப் பேச்சுவாா்த்தையில் ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பான முடிவு எட்டப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து