முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் : பா.ஜ.க புது வியூகம்

திங்கட்கிழமை, 1 ஜனவரி 2018      அரசியல்
Image Unavailable

பெங்களூரு, கர்நாடகாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஊழல் மற்றும் நிறைவேற்றாத வாக்குறுதிகள் குறித்த தகவல்களை திரட்ட பா.ஜ.க மேலிடம் உத்தரவிட்டுள்ளது. இதை வைத்து காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்யவும் அக்கட்சி திட்டமிட்டுள்ளது.

இதில் கர்நாடக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அம்மாநில சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 இடங்களில், தற்போது ஆளும் காங்கிரசுக்கு 122 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். எதிர்கட்சியான பா.ஜ.க.வுக்கு 44 எம்.எல்.ஏ.க்களும், ஐக்கிய ஜனதாதளத்திற்கு 40 எம்.எல்.ஏ.க்களும் உள்ளனர். மீதமுள்ள இடங்களில் மற்ற கட்சிகள் வெற்றி பெற்றன.

காங்கிரஸ் தற்போது ஆட்சியில் உள்ள பெரிய மாநிலம் கர்நாடகா மட்டுமே. எனவே கார்நாடகாவில் காங்கிரஸை வீழ்த்துவதற்கு பாஜக காய்களை நகர்த்தி வருகிறது. இத்தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக எடியூரப்பா ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளார்.  பாஜக தலைவர் அமித் ஷா பெங்களூருவில் கர்நாடகா மாநில பா.ஜ.க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதை தொடர்ந்து, வாக்குச்சாவடிகள் வாரியாக பொறுப்பாளர்களை நியமிக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. அத்துடன், வாக்காளர் பட்டியலில் ஒரு பக்கத்திற்கு ஒரு பொறுப்பாளர் வீதம் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியாற்ற திட்டமிடப்பட்டது..

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழல்களை முன்வைத்து பிரச்சாரம் செய்ய பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏதுவாக, அமைச்சர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் மீதான ஊழல் புகார்கள், குற்ற வழக்குகள், அவர்கள் நிறைவேற்றாத வாக்குறுதிகள் உள்ளிட்ட விவரங்களை திரட்டவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த விவரங்கள் அனைத்தையும் ஜனவரி 15ம் தேதிக்குள் சமர்பிக்கவும் பாஜக தலைவர்கள் கூறியுள்ளனர்.பிப்ரவரி 15 முதல் 22ம் தேதி வரை, பாஜக இளைஞர் அணியின் சார்பில் பிரமாண்ட பிரச்சார இயக்கம் நடைபெறுகிறது. அப்போது, இந்த ஊழல் புகார்கள் குறித்து மக்களிடம் பிரச்சாரம் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து